Tuesday, February 24, 2009

ரஹ்மானின் அந்த ஒரு வாக்கியம்!

ரஹ்மானின் ஆஸ்கார் விருது(கள்) பற்றி எவ்வளவோ எழுதப்பட்டுவிட்டது. அவர் அடைந்த வெற்றிகள், சிகரம் தொட்ட இசைக் கோலங்கள் இவற்றையெல்லாம் விட அவர் நேற்று ஆஸ்கார் மேடையில் சொன்ன ஒரு வாக்கியம் என்னை நெடு நேரம் யோசிக்க வைத்தது. நாள் பூராவும் அவற்றையே அசை போட்டுக் கொண்டிருந்தேன். அவை:

"All my life I've had a choice of hate and love, I chose love and I am here"

எவ்வளவு நிஜம்!

நேசத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்கள் வெற்றிகளில் குளிக்கிறார்கள்
வெறுப்பை விதைப்பவர்கள் யுத்தங்களில் மடிகிறார்கள்!

14 comments:

Anonymous said...

வெறுப்பை விதைத்தவர்கள் யுத்தத்தில் மடிந்து போவார்கள்.உலகத்திற்கே அகிம்சையைப் போதித்த புத்தனையும் காந்தியையும் கொடுத்தவர்கள் தானே கூடப் பிறந்தவனையும் கொல்லச் சொல்லி உபதேசித்த கிருஷ்ண பரமாத்மாவையும் கொடுத்தார்கள்.

யுத்தம் அதை நடத்துபவர்களைப் பலியெடுப்பதில்லை அவர்கள் பன்சாலைக்கும் ராமர் கோவிலுக்கும் போய் எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே என்று பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

(இரு வரிகள் நீக்கப்பட்டுள்ளன -மாலன்)

Anonymous said...

It really is surprising how we all project one thing. Personally, I felt that this line of A.R.Rahman's, especially coming after, Ella Pugazhum Iraivanukke, was directed at India and the Congress government.

Goes to show how we all perceive...:-)

-kajan

குப்பன்.யாஹூ said...

yes great lines. It develops our thinking process. As stephen covey says we make decisions and that determines our life.

ARR always have positive attitude and has chosen LOve.

கானா பிரபா said...

உங்களின் நிலை ஈழத்தில் அல்லல்படும் மக்களை விடப் பரிதாபமா இருக்கு. ரஹ்மான் வரை உங்கள் அரசியல் வேலையை செய்கிறீர்கள். சதா இந்த நினைப்பிலேயே இருந்தீங்கன்னா நீங்களும் வெறுப்பை விதைப்பவர் தான்.

மதிபாலா said...

நேசத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்கள் வெற்றிகளில் குளிக்கிறார்கள்
வெறுப்பை விதைப்பவர்கள் யுத்தங்களில் மடிகிறார்கள்!//

நிதர்சனமான வார்த்தைகள். நேசத்தை தேர்ந்தெடுக்கவே இவ்வுலகில் பிறந்தவர்கள் அனேகம் பேர் விரும்புவார்கள்.

அதற்காக தனக்கான உரிமைகள் மறுக்கப்படும் போதும் ஒருவர் நேசத்தையே நாடிக்கொண்டிருந்தால் காலப்போக்கில் அடிமைகளாகி விட மாட்டார்களா என்ன?

ஒரு கன்னத்தை அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்றார் இயேசு பிரான். ஆனால் இன்றைக்கு ஒரு கன்னத்தை அறைய முற்பட்டாலே எதிரிலிருப்பவன் கன்னத்தை பெயர்த்தெடுத்து விடும் பொல்லாத உலகமாக இப்பூமிப்பந்து மாறி வெகு நாளாகிறது.

ஆகவே , உங்களது மேற்கண்ட வார்த்தைகள் நிச்சயம் ஒவ்வொருவருக்கும் தேவையே.

உணர்வுகளால் உந்தப்பட்டு ரஹ்மான் உதிர்த்த சில தமிழ் வார்த்தைகளில் புளங்காகிதப்பட்டுப் போகும் தமிழர்கள் பார்க்காத கோணத்தில் ரஹ்மானின் விருது நிகழ்வைப் பார்த்தமையே பாராட்டத்தகும்.


தோழமையுடன்
மதிபாலா.

கிருஷ்ண மூர்த்தி S said...

//நேசத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்கள் வெற்றிகளில் குளிக்கிறார்கள்
வெறுப்பை விதைப்பவர்கள் யுத்தங்களில் மடிகிறார்கள்! //
நீங்கள் எழுதி இருப்பதில் கடைசி வரி பொருத்தமாக இல்லையே, மாலன் சார்!
வெறுப்பை விதைப்பவர்கள் எங்கே யுத்தங்களில் மடிகிறார்கள்? இவர்கள் விதைத்திருக்கிற வெறுப்பும், த்வேஷமும் மற்றவர்களை அல்லவா காவு கொண்டிருக்கிறது?

Anonymous said...

வேடிக்கையாக இருக்கிறதே? வெறுப்பை விதைத்த எத்தனை பேர் யுத்தத்தில் மடிந்து போனார்கள்? அவர்கள் எல்லாம் இந்தியாவில் கட்சித் தலைவர்களாகவும், மந்திரிகளாகவும் அல்லவா இருக்கிறார்கள்! இவர்களுக்காகக் காவு கொடுக்கப் படுவது அப்பாவிகள் மட்டுமே.

Unknown said...

உலகில் அனைவருக்கு அத்தகைய தெரிவினை செய்யும் சூழல் இருப்பதில்லை.அமைதியை விரும்புபவர்கள் மீது யுத்தம்
திணிக்கப்படும் போது அன்பைத்
தெரிவு செய், செத்துப் போ என்றா
உபதேசிக்க முடியும்.ரஹ்மான் வறுமையை சந்தித்தார், போரை அல்ல.எப்படியும் பிழைத்துக்
கொள்ள முடியும் சூழல் அவருக்கு
இருந்தது.ஷெல்லடிகளுகிடையே
வாழவேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததில்லை.

போரை தூண்டுபவர்கள்,அதில் குளிர் காய்பவர்கள், வழி நடத்துபவர்களில்
எத்தனை பேர் அதன் துயரங்களை
அனுபவிக்கிறார்கள்.

கவிநயா said...

திரு. ரஹ்மான் மிகவும் பண்பட்ட மனிதர் என்று தெரிகிறது.

sravichandra.blogspot.com said...

மாலன் அவர்களுக்கு,
அந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன. அந்த வரிகள் உங்களுக்கும் பிடித்திருந்ததை அறிந்து மிகவும் மகிழ்ச்சி. என் நண்பர்கள் எல்லோருக்கும் அவ்வரிகளை குறுஞ்செய்தியாகவும், மின்னஞ்சலாகவும் அனுப்பிவைத்தேன்.

அன்புடன்
சு.இரவிச்சந்திரன்

மாலன் said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி. பின்னூட்டமிட்டவர்களில் சிலர், ரஹ்மான் ஈழப்பிரசினையை மனதில் கொண்டு இந்த வாசகங்களைச் சொன்னதாகவோ, அல்லது நான் இலங்கைப் பிரசினையை மனதில் கொண்டு அந்த வாக்கியங்களைப் பார்த்ததாகவோ எண்ணி எதிர்வினையாற்றியிருக்கிறார்கள்.

ரஹ்மான் அந்த நோக்கில் எதனையும் சொல்லவில்லை என்றுதான் நான் எண்ணுகிறேன். நானும் அந்த வாக்கியங்களை அந்தக் கோணத்தில் பார்க்கவில்லை. நீங்கள் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி அது இப்படிப் புரிந்து கொள்ளப்படும் என நான் அந்தப் பதிவை எழுதும் போது நினைத்திருக்கவில்லை.

Love enthuse one towards creativity, and hate drives one to hostility என்கிற பொது உண்மையைத்தான் ரஹமான் பேசியிருப்பதாக நான் நினைக்கிறேன்.

பதிவுல்கம் என்பது படைப்பாளிகள் உலவுகிற ஓர் உலகாக இருப்பதால் அவர்கள் சிந்தனையை இது தூண்டக்கூடும், அவர்களின் படைப்பிற்கு உந்துதல் தரும் எண்ணித்தான் அந்த வரிகளை இங்கு பதிப்பித்துள்ளேன். அவரின் வெற்றி விழா இரைச்சலில் இந்த முக்கிய கருத்து கவனிக்கப்படாமல் போய் விடக் கூடும் என நான் எண்ணியதும் ஒரு காரணம்,

அன்புடன்
மாலன்

ஈழநாதன்(Eelanathan) said...

மாலன்
உங்கள் விளக்கத்திற்கு நன்றி
ரஹ்மான் ஈழப்பிரச்சனையை மனதில் வைத்து இந்த வாக்கியத்தைச் சொன்னதாக நான் நினைக்கவேயில்லை.ஒரு முஸ்லிமாக,ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீது சர்வதேசமே பயங்கரவாத முத்திரை குத்தும் ஒரு பிற்புலத்தில் அதற்கு எதிர்வினையாக தனது மதத்தவர்களுக்கும்,அவர்களை பயங்கரவாதச் செயல்களைச் செய்யத் தூண்டும் மற்றவர்களுக்கும் பொதுவாக இதனைச் சொல்லியிருப்பதாகவே கருதுகிறேன்

ஆனால் இந்த ஒரு வசனத்தை மட்டும் நீங்கள் கோடி காட்டியிருப்பது ஈழப்பிரச்சனையை மனதில் வைத்தே என்று சந்தேகப்பட்டே அதற்குப் பதிலளித்தேன் அப்படி இல்லையாயின் மன்னிக்க

ஆனால் அந்த வாக்கியம் அடிப்படையிலேயே தவறு அதில் எந்த மாற்றமும் இல்லை.வெறுப்பை விதைப்பவர்கள் யுத்தத்தில் மடிவது குறைவு.இன்று உலகளாவிய ரீதியில் பயங்கரவாதச் செயெல்களைத் தூண்டிக்கொண்டிருக்கும் ஆயுத வியாபாரிஅக்ளும் அரசியல் வியாபாரிகளும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அப்பாவிப் பொதுமக்கள் அநியாயமக மடிகிறார்கள்

மாயவரத்தான் said...

இந்த வாக்கியத்திற்கு அவரவர் அவர்தம் விருப்பம் போல அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம். 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்று சிலருக்கு கோபம் பொத்துக் கொண்டு வருவதற்கான காரணம் வெள்ளிடைமலை.

மணிபாரதி துறையூர் said...

"எதையும் அடைய (Destination)அல்ல சும்மா நடக்கவே (Travel) விரும்புகிறோம் நாம்.." என்று திரு.மாலன் குமுதம் "ஜன்னலுக்கு வெளியே" பகுதியில் எழுதுவார். ரஹ்மானின் பக்குவமான பதட்டமில்லாத (ஆஸ்கார்-க்கு பின்) ஏற்புரையை கேட்டபோது எனக்கு அந்த வரிகள் நினைவுக்கு வந்தது.