Wednesday, September 19, 2007

விடுதலைப் புலிகளிடையே பிளவு?


இவை என்னுடைய கற்பனை அல்ல. இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளிவந்திருக்கும் செய்தியின் தமிழ் வடிவம் இது.


தமிழ் நாட்டுத் திராவிடத் தலைவர்கள், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் அழியாத தாக்கம் ஏற்படுத்தியிருப்பது போல் தெரிகிறது. அதனால் விடுதலைப் புலிகளிடமும் வாரிசு அரசியல் தொற்றிக் கொள்வது ஆச்சரியம் எதையும் ஏற்படுத்தவில்லை.தனது மகனும், ஏரோநாட்டிகல் பொறியாளருமான சார்ல்ஸ் அந்தோனி சீலன் வசம் தனது பயங்கரவாத இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்க பிரபாகரன் ஆர்வமாயிருக்கிறார்.
ஆனால் தனது வாரிசாக தன்னுடைய 22 வயது மகனுக்கு முடிசூட்டும் பிரபகரனது திட்டம் குறித்து விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்களிடம் அதிருப்தி அதிகரித்து வருகிறது.
ஏரோநாடிகல் பொறியியலில் பட்டம் பெற்று, அயர்லாந்திலிருந்து 2006ம் ஆண்டு திரும்பிய பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோனி, வான் படை, கணினித்துறை இரண்டிற்கும் தலைமை வகிக்கிறார்.மூன்று மாதங்களுக்கு முன் கொழும்பின் மீது இரவில் சென்று தாக்கி, இலங்கை இராணுவத்திற்குத் திகைப்பை ஏற்படுத்திய வான்படையை உருவாக்குவதில் அவர் முக்கியப் பங்காற்றியதாகக் கருதப்படுகிறது.
சார்லஸ் அந்தோனி தவிர, 21 வயது மகள் துவாரகா, 11 வயது மகன் பாலச்சந்திரன் என பிரபாகரனுக்கு இன்னும் இரு குழந்தைகள் உண்டு. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
விடுதலைப் புலி இயக்கம் கண்டுவரும் மோசமான அதிகாரப் போட்டி, இதுநாள் வரை சர்ச்சைக்கு இடமில்லாது இருந்த பிரபாகரனின் தலைமையை, பலவீனப்படுத்தத் துவங்கியிருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிங்கபூரில் உள்ள பயங்கரவாதத்திற்கெதிரான சிந்தனை அரங்கான, அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாதம் குறித்த ஆராய்ச்சிகளுக்கான சர்வதேச மையம், அண்மையில் வெளியிட்டுள்ள அதன் ஆய்வறிக்கையில், விடுதலைப்புலிகள் பெரிய அளிவில் பிளவுபடுவதற்குத் தெளிவான சாத்தியங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
"பிரபாகரன் அடுத்த தலைமுறைப் புலிகளை வளர்த்தெடுப்பதில் முனைந்துள்ளார் என்பது இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது. அவரது இந்தச் செயல், மூத்த படைவீரர்களிடம் மனத்தாங்கலை ஏற்படுத்தக் கூடும்" என்கிறது அந்த அறிக்கை. இதுநாள் வரை பெரும் பிளவுகளையும் மீறித் தாக்குப் பிடித்த ஒரே தமிழ் பயங்கரவாத அமைப்பு விடுதலைப் புலிகள்தான்.ஆனால் இப்போது பிரபாகரனின் வசீகரம் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் குன்றி வருவதாகத் தெரிகிறது.
கிளிநொச்சியில் உள்ள வட்டக்காச்சியில், விடுதலைப்புலிகளின் எட்டு வரி வசூலிப்பாளர்கள், அதன் தலைமையால் தூக்கிலிடப்பட்டதாக கடந்த மாதம், இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையதளத்தில் குறிப்பிட்டிருந்தது.புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவின் தலைவரும், அமைப்பில் பிரபாகரனுக்கு அடுத்தபடியாக இரண்டாம் நிலையில் அதிகாரம் மிக்கவருமான பொட்டு அம்மன் அவர்கள் பணத்தைக் கையாடல் செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார். இயக்கத்தின் பணத்தை விடுதலைப்புலிகளின் தலைவர்கள், தங்கள் சொந்தக் கரியங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டதையடுத்து ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக அவர்கள் தூக்கிலிடப்பட்டதாக சிவிலியன் வட்டாரங்களை மேற்கோள் காட்டி அமைச்சகம் எழுதியிருந்தது. பொட்டு அம்மனுக்கும், எஸ்.பி.தமிழ்ச் செல்வனுக்குமிடையே நடக்கும் அதிகாரப் போட்டியையும், விடுதலைப் புலிகளின் கடற்படைத் தலைவர் கர்னல். சூசை, " அகற்றப்பட்டதை"யும் அமைச்சகம் வெளிப்படுத்தியிருந்தது.
பிரபாகரன் தன் மகனை வான்படைத் தலைமைப் பொறுப்பில் நியமித்தது குறித்து சில படைத்தலைவர்கள் மகிழ்ச்சி அடையவில்லை என்பது விடுதலைப்புளிகளிடம் காணப்படும் அதிருப்திக்குக் காரணமாக இருக்கலாம் என சிங்கப்பூர் சிந்தனை அரங்கு கருதுகிறது. 52 வயதாகும் பிரபாகரன், தனது மகனை மேலே கொண்டுவருவதில் ஆர்வம் காட்ட, இரத்த அழுத்தம், சக்கரை வியாதி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள், அவரது உடலின் ஆரொக்கியம் மிகச் சிறப்பாக இல்லாத காரணமாக இருக்கலாம் என ஒரு தகவல் தெரிவிக்கிறது.செய்தி மூலம்: http://timesofindia.indiatimes.com/World/Struggle_in_LTTE_over_successor/articleshow/2381716.cms

பின்னூட்டம் போடுபவர்களுக்கு வசதியாக கீழே சில templateகள் தரப்பட்டிருக்கின்றன. அவரவர் தேவைக்கு ஏற்பப் பயன்படுத்திக் கொள்ளலாம்:


, இதெல்லாம் 'ரா' விடும் சரடு

ஆங்! இது சிங்களப் பேரின வாத அரசு பரப்பிவரும் பொய்


து அண்மைக்காலமாக அடி வாங்கி வரும் விடுதலைப் புலிகள் கவனத்தைத் திசைதிருப்ப மேற்கொண்டிருக்கும் உத்தி


ஈஈ ஜோக்கு நல்லா இருந்திச்சு


னக்கு எத்தனைவாட்டி சொன்னாலும் புரியாதா? அடங்குய்யா!


கூம், நம்பறமாதிரி இல்லை


ங்கட தலைவர் ஒரு நுளம்பைக் காட்டி இதுதான் இனி உங்கட தல எண்டு சொன்னாலும் கேட்டுக்குவம்தானே.நாங்க என்ன செய்ய வேண்டுமெண்டு யாரும் இங்கனெ கதைக்க வேண்டா


ய்! பொத்திக்கிட்டுப் போடா!


யமில்லை, இது பாப்பானுங்க சதி


ன்றும் சொல்வதற்கு இல்லை, உண்மையாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்


கோ! அப்படியா சேதி


ஓளவியம் பேசேல்

28 comments:

பூங்குழலி said...

//தமிழ் நாட்டுத் திராவிடத் தலைவர்கள், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் அழியாத தாக்கம் ஏற்படுத்தியிருப்பது போல் தெரிகிறது. அதனால் விடுதலைப் புலிகளிடமும் வாரிசு அரசியல் தொற்றிக் கொள்வது ஆச்சரியம் எதையும் ஏற்படுத்தவில்லை//

வாரிசு அரசியல் நேரு குடும்பம், திராவிடக் குடும்பம் என்பது எனக்கு புதிய செய்தி...

பூங்குழலி.

theevu said...

மாலன் வலைப்பதிவை விட்டு போகாமலிருப்பதற்காக இந்தப் பின்னூட்டம்.

pulliraja said...

ஏங்க!! கே.பி என்ற புலிப்பிரமுகர் தாய்லந்தில் கைது.
இலங்கை ‍/இந்தியா கூட்டு பாதுகாப்பு ஏற்பாடு
3 புலிகளின் கப்பல் தாக்கி அழிக்கப்பட்டது


ஏன் மாலன் சார் இதையெல்லாம் வுட்டுடாங்க.

கனவு தானே தொல‌ருங்க‌.
அட‌ த‌மிழ‌னுக்கு ஒரு நாடு கிடைக்க‌க்கூடாது என்ப‌தில் என்ன‌ ஆர்வ‌ம்?


புள்ளிராஜா

ஹரன்பிரசன்னா said...

மாலன், விடுதலைப்புலிகள் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். இந்த வலைப்பதிவு என்ன பாடு படப்போவுதோ. :) வாழ்த்துகள்.

Unknown said...

நீ திருந்தவே மாட்டாய் மாலன்

Raja said...

ஒன்றும் சொல்வதற்கு இல்லை, உண்மையாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்

உண்மைத்தமிழன் said...

என்னுடைய சாய்ஸ் "இ".

Unknown said...

மாலன்,
தயவு செய்து இந்த இடுகையை எக்காரணத்தை முன்னிட்டும் அழித்து விடாதீர்கள். ஆவணப்படுத்த வேண்டிய இடுகையிது. தமிழீழ விடுதலை போராட்டத்தை அல்லது உங்கள் பார்வையில் பயங்கரவாதத்தை இந்தியத்தமிழர்கள் ஏன் கண்டும் காணாமல் பாராமுகமாக இருந்தார்கள் அதற்கு இந்திய பத்திரிக்கைகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் எத்தணை பங்களித்தார்கள் என்பதற்கு இந்த இடுகை ஒரு வரலாற்றுச் சான்றாக இருக்கும். இந்தியத்தமிழர்களை ஈழத்தமிழர்கள் புரிந்துகொள்வதற்கும் உதவும்.

குழைக்காட்டான் said...

//தமிழ் நாட்டுத் திராவிடத் தலைவர்கள், .......வாரிசு அரசியல் தொற்றிக் கொள்வது ஆச்சரியம் எதையும் ஏற்படுத்தவில்லை//

சன் டீ.வி யில் இருக்கும்போது வாரிசு அரசியலைப் பற்றி 'காராசாரமான' விவாதம் நடத்தி அதன் காரணமாக அங்கிருந்து 'வெளியேற்றப்பட்ட' மாலன் நீங்கள் தானே? நன்றி சார்.

அண்மையில் இதே 'சிங்கப்பூர் சங்கம்' விட்ட அறிக்கை பார்த்தேன் அறிக்கைக்கு இலங்கையில் இருந்து வரும் ஆங்கில ஏடு இரண்டையும் இந்திய 'இந்து ' ஏட்டையும் மேற்கோள் காட்டியிருந்தனர். உள்ளே வாசித்தால் வெறும் மேற்கோளல்ல முழு அறிக்கையும் செய்திகளின் சாம்பார் என தெரிந்ந்தது. அறிக்கையோ தாய்லாந்தும் அங்கு நடந்ததாக கூறப்பட்ட கே.பி கைதும்தான் ஆனால் தாய்லாந்துக்கு அருகே உள்ள சிங்கப்பூர் ஏன் அதனிலும் தூர உள்ள 'நடுநிலை' காக்கும் இலங்கை இந்திய ஏடுகளை 'cut & paste செய்யவேண்டும். விடை நீங்கள் அறிந்ததுதான்!!!

pulliraja said...

மாலன் சார்!! ஒரு தடவை சிறிலங்கா போங்க. உங்க சேவைக்கு இலங்கா ரத்னா விருதும் பொற்கிளியும் கிடைக்கும். இந்து ராம், சோ ஆகியோர் உங்களை முந்திட்டாங்க சார். ராமர் பாலப் பிரச்சினையை தூண்டுவதற்குகூட இலங்கை அரசு பொற்கிளி வழங்கியதாம்.
காற்றுள்ள போதே தூத்திடுங்க சார்.

புள்ளிராஜா

Mayooran said...

//இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறையையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கில்லை//

ஆனால் பொய்ச் செய்திகளை மட்டும் நான் பிரசுரிப்பேன்.
மாலன்
(ஈழத்)தமிழருக்கு எதிரானவர்

பிச்சைப்பாத்திரம் said...

The templates were interesting than the main matter. :-)

குழைக்காட்டான் said...

ஐ.பி.கே.எஃப் காலத்தில (1989 இல் என நினைக்கிறேன்) 'இந்துவில்' வந்த 'பிரபாகரன் எல்.ரி.ரி.ஈ துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார்' என வந்த செய்தியையும் மற்றும் அவர் மரணச்சடங்கில் கலந்து கொண்டு மரியாதை நிமித்தம் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதாக வரதராஜப்பெருமாள் பேட்டி வெளியிட்ட இந்து பத்திரிகையின் சுட்டியும் இருந்தால் வெளியிடுங்கள். இவை உங்கள் பின்னூட்ட உதாரணங்களுக்கு (அ முதல் ஆய்த எழுத்துவரை) வலுச்சேர்ப்பது மட்டுமல்லாது 'புலி அடிவருடிகளுக்கும்' 'திராவிட குஞ்சுகளுக்கும்' உறைக்கும்.

-/சுடலை மாடன்/- said...

திரு. மாலன், உங்க கவலை விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் நடை பெறவிரு(க்கு)(ம்பு)ம் வாரிசு அரசியல் பற்றியது.

என்னுடைய கவலை இந்து பத்திரிகைக் குடும்பத்தில் உள்ள வாரிசு அரசியல் பற்றி - கஸ்தூரிரங்க அய்யங்கார் குடும்பத்தினர் - இரவி, முரளி, மாலினி, இராம், அடுத்து வரப் போகும் வித்யா இராம் என்று!!

விடுதலைப் புலிகள் இயக்கமாவது பிரபாகரன் அவரே ஆரம்பித்து வளர்த்தது. வாரிசு சண்டை நடந்தாலும் வியப்பில்லை. இந்துப் பத்திரிகையோ நல்ல நோக்கத்துக்காக ஒருகாலத்தில் வேறு யாரோ ஆரம்பித்தது - கஸ்தூரி அய்யங்கார் வாரிசுகள் கையில் மாட்டிக் கொண்டது.

நீங்க கொடுத்த டெம்ப்லேட்ட அப்படியே பயன்படுத்த முடியலே, அதுக்காக இந்தப் பின்னூட்டத்த வெளியிட மறுக்க மாட்டீங்கன்னு நெனக்கிறேன் :-)

நன்றி - சொ. சங்கரபாண்டி

வெற்றி said...

நேற்று இரவு இச் செய்தியைப் படித்து விட்டு எனது சிங்கள நண்பர் தொலைபேசியில் அழைத்துச் சொன்னார். இப்படி இந்தியா ருடேயில் ஒரு நகைச்சுவைக் கட்டுரை வந்திருக்கிறது என்று.

நானும் படித்த போது சிரிப்பு அடக்கமுடியவில்லை.

அண்மைக் காலமாக இலங்கை பாதுகாப்புச் செயலகம் இப்படியான நகைச்சுவைச் செய்திகளை ஈராக்கின் "கெமிக்கல்" அலியை விட செய்து வருவது தெரிந்த விடயம்தான்.

இதில் வேடிக்கையான விடயமென்னவென்றால் இலங்கையில் இருந்து வெளிவரும் ஆங்கில/சிங்கள ஊடகங்கள் [சிங்களவர்களால் நடாத்தப்படுபவை] மற்றும் தமிழ் ஊடகங்கள் இச் செய்தியைப் பிரசுரிக்கவே இல்லை. அவர்களுக்கு இலங்கை பாதுகாப்புச் செயலகத்தின் நகைச்சுவைக் குணம் நன்றகவே தெரியும் போல :-))

கடந்த காலத்தில் இலங்கைப் பாதுகாப்புச் செயலகம் வெளியிட்ட சில செய்திகள் உங்கள் தகவல்களுக்காகக் கீழே:

1. சுனாமி முல்லைத்தீவைத் தாக்கியதில் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். அவரின் உடலைத் தகனம் செய்வதற்காக தங்கத்தினாலான சவப்பெட்டி உருவாக்கப்பட்டு வருகிறது.

2.புலிகளின் கடற்படைத் தளபதி சூசைக்கும் பிரபாகரனுக்கும் கருத்து வேற்றுமை. சூசை கொல்லப்பட்டார்.

3.ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி [வெள்ளைக் காரர்] ஹோம்ஸ் அவர்கள் புலிகளின் ஆதரவாளர்.

4.பிரிட்டிஸ் அரசு விடுதலைப் புலிகளின் பொலிஸ் படைக்குப் பயிற்சியளிப்பு.


இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

கொழும்புப் பல்கலைக்கழக அரசியல் பீடத்தின் தலைவர் பேராசிரியர் உயன்கொட [சிங்களவர்] அவர்கள் சர்வதேச சமூகத்தால் மதிக்கப்படும் கல்விமான். இலங்கையின் இனப்பிரச்சனையை நன்கு அறிந்தவர். அவர் அண்மையில் சொன்ன கருத்துக்களைப் படித்துப் பாருங்கள். அவர் முக்கியமாகச் சொன்ன விடயம், சிங்கள மக்கள் இன்னும் அரசியல் முதிர்ச்சியடையவில்லை எனச் சொல்லியிருந்தார். அப்படியான மக்களை இலங்கை பாதுகாப்புச் செயலகம் இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உண்மைத் தகவல்களை மறைத்து விடும்.

மற்றும்படி தமிழ்மக்களோ புலிகளோ இதுபற்றி அலட்டிக் கொள்வதில்லை. புலிகள் அமைப்பில் பிளவு நடந்தாலும் அங்கு ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனெனில் புலிகளின் வரலாற்றை எடுத்துப்பார்த்தால் காலத்திற்குக் காலம் புலிகள் அமைப்பில் பிளவுகள் ஏற்பட்டு வந்தே இருக்கிறது[பல காரணங்களுக்காக].

முதலில் உமாமகேஸ்வரன் -பிரபாகரன் பிளவு

பின்னர் பிரபாகரன் - மாத்தையா பிளவு

பின்னர் கருணாவின் பிளவு...

இனியும் நடக்கலாம். ஆனால் அப்படி நடந்தாலும் புலிகள் அமைப்பு பலமான அமைப்பாகத் தன்னைக் கட்டியெழுப்பிக் கொண்டே வந்திருக்கிறது.

1995 களில் யாழ்ப்பாணத்தை இலங்கைப் படைகள் கைப்பற்றிய போது, இனிப் புலிகளால் தலைதூக்கவே முடியாது என இலங்கை அரசும், சில இந்திய ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. அதன் பின்னர் புலிகள் திருப்பியடிக்கத் தொடங்கிய போது என்ன நடந்தது என்பதை உலகம் அறியும்.

கடந்த மாதம் இது பற்றி ஜெகன் பெரரா[சிங்களவர்] இலங்கையில் இருந்து வெளிவரும் டெய்லி மிரர் பத்திரிகையில் எழுதும் போது, புலிகளை இராணுவ ரீதியாக வெல்ல முடியாது என்பதை உணர்வதற்கு சந்திரிகாவுக்கு 9 வருடங்கள் எடுத்தது என்றும் இந்த உண்மையை உணர்வதற்கு இன்றைய அதிபர் இராஜ பக்சாவுக்கு எவ்வளவு காலம் எடுக்குமோ தெரியாது என எழுதியிருந்தார்.

நான் அடிக்கடி என் சிங்கள நண்பர்களுக்கும் மற்றையவர்களுக்கும் சொல்வது இதுதான். பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் வெல்ல வேண்டுமெனின் முதலில் தமிழ்மக்களின் மனங்களையும், நம்பிக்கையையும் வெல்ல வேண்டும். அப்படி தமிழ்மக்களை வெல்ல வேண்டுமாயின், சிங்களத் தலைமைகள் தமிழ் மக்களின் அபிலாசைகளைத் தீர்கக் கூடிய தீர்வை முன் வைக்க வேணும், பின்னர் அதைச் சரியாக நடைமுறைப் படுத்த வேண்டும்.

இவற்றைச் செய்வதற்கு இந்தியாவின் பண்டிதர் நேரு போன்ற உன்னதமான தலைவர்கள் சிங்களவர்களிடமிருந்து தோன்ற வேண்டும்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினராக இருந்த திரு.நவரத்தினம் அவர்கள் தனது நூலான The Fall and Rise of the Tamil Nation எனும் நூலில் [1991] இப்படிச் சொல்கிறார்:

"There is no prospect of any Nehrus arising in Ceylon"

சிங்களத் தலைமைகள் தமிழ்மக்களின் உரிமைகளை மதிக்கும் வரை இப் பிரச்சனை ஓயப் போவதில்லை. இப்போதுள்ள பிரபாகரன் போனால் இன்னும் ஆயிரம் பிரபாகரன்கள் வருவார்கள்.

Boston Bala said...

நன்றி

pamaran said...

மாலன் உங்களை இதுவரை வெறும் பதிரிக்கையாளர் என்று மட்டுமே இதுவரை நினைத்திருந்தேன். வருத்தங்களுடன்,
பாமரன்.

Thamizhan said...

இந்த நரசிம்மன் ராம் அம்பி,சோமாரி அம்பி,இப்போ மாலன் அம்பிக்கெல்லாம்
தம்பின்னாவே ஆகாதோ.ஏண்டா அம்பிகளா நோக்கெல்லாம் த்ம்பி என்ன பண்ணிட்டார்னு இப்படியெல்லாம் காயறேள்.அவா ஆத்துக்கு அவா செத்துண்டு காட்டிலே எத்தனை வருஷம்?நீங்க ஏர் கண்டிசன்லே உட்கார்ந்துட்டு இப்படியெல்லாம் எழுதறேளே அடுக்குமா?நோக்கெல்லாம் நரகமெல்லாம் கதைன்னு நன்னா தெரியும் இல்லாட்டி இதெல்லாம் செய்ய மாட்டேள்.
நரசிம்மன் ஏற்கனவே ரெண்டுதரம் அவன் பத்திரிக்கை மொதல் பக்கத்திலேயே தம்பியைக் கொன்னுட்டன்.இன்னும் வெறி புடிச்சு அலையறான்,அது ஏன்னு வெளியே சொல்ல மாட்டான்.
அம்பிகளா உங்களுக்கெல்லாம் நல்ல உங்ச விருத்தி ஒரு காலத்திலே நடக்கும்.பாத்துண்டே இருங்கோ.

இவன் said...

வணக்கம் மாலன் ஐயா!

இந்த செய்தி உண்மையாக கூட இருக்கலாம். ஆனால் சமிபத்திய நிகழ்வுகள் இந்த செய்தியின் நன்பகதன்மையை நீர்த்து போக செய்கின்றன.

1. விடுதலை புலிகள்- மீனவர் கடத்தல் நாடகம்.

2. செப் 12, பழ.நெடுமாறன் ஐயாவின் போராட்டத்தை புற்ந்தள்ள கே.பத்மனாபன் கைது நாடகம்

3.சூசை-பிரபாகரன் முறுகல் பொய்யுரை.

4. புலிகளின் இழவை படகுகள் தாக்கியழிப்பு நாடகம்.

இப்பொழுது அடுத்த வாரிசு கதை.

இந்திய உளவுத்துறைக்கு அப்படி என்ன புலிகள் மீதும், ஈழதமிழர் மீதும் பொல்லாப்பு.

இந்தியாவை போல் தலைவன் ஆனவுடன் சுகபோகங்களை ஈழத்தில் அனுபவிக்கமுடியாது. ஈழதலைவர்கள் போரட்டத்தின் நடுவில் வாழ்பவர்கள் அவர்கள் உயிருக்கு உலைவைக்க சிங்கள அரசு எப்பொதும் காத்துக்கொண்டுள்ளது. சமிபகாலமாக இந்தியாவும் சந்தர்ப்பம் பார்துக்கொண்ண்டுள்ளது. இப்படிபட்ட சூழ்நிலையில் தலமை என்பது ஆள் தின்னும் சுராக்களுக்கு நடுவில் நீந்துவதற்கு சமம்.

இது இந்திய தலைவர்களை போல் பூனைபடை பாதுகாப்புடன் நினைத்த இடம் எல்லாம் போய்வர இயலாது.

ஈழத்தில் தலைமை என்பது தியாகம். அதைனை திறம்பட யார் செய்தாலும் ஏற்கலாம். ஏற்ற்போம்.

எனக்கு ஒரு சந்தேகம். இந்திரா காந்தி அம்மையாரை கொன்றது யார்? எதற்கு ?

அவரது மகன் கொலைக்கு காரணமாக இருந்த(தாக கருதப்படும்)வரின் இனத்தை அழிக்க துணைபோவது போல்,இந்திராகாந்தி அம்மையாரின் கொலைக்கு காரணமானவரின் இனத்தையும் தற்போதைய இந்திய அரசாங்கம் அழிக்க முனைகின்றதா?

(நீங்கள் அளித்த பின்னூட்ட உதவிகள் அனைதையும் நான் பயன் படுத்திவிட்டேன் ;-))

குழலி / Kuzhali said...

//பின்னூட்டம் போடுபவர்களுக்கு வசதியாக கீழே சில templateகள் தரப்பட்டிருக்கின்றன. அவரவர் தேவைக்கு ஏற்பப் பயன்படுத்திக் கொள்ளலாம்:
//
எங்களை மாதிரி கற்றுக்குட்டிகளுக்கு ஓகே, ஆனால் முதிர்ந்த எழுத்தாளர் மாலனுக்கு இது அழகா? என்று யோசிக்க தோன்றுகிறது....

பதிவை பற்றி கருத்தென்றால் உண்மை எதுவென்று கிஞ்சித்தும் எனக்கு தெரியாது, கருத்து சொல்வதென்றால் நம்பிக்கையின் பேரிலேயே சொல்லவேண்டிய நிலை அதனால் நோ கமெண்ட்ஸ்

Unknown said...

மாலன் நகைச்சுவையா எழுதியிருக்காருன்னு தெரிஞ்சும், அவர கரிச்சு கொட்டுறீங்ளே ஐயாக்களே

லக்கிலுக் said...

//இவை என்னுடைய கற்பனை அல்ல. இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளிவந்திருக்கும் செய்தியின் தமிழ் வடிவம் இது.//

இதுக்கு பதிலா இப்படி சொல்லியிருக்கலாம்.

இவை என்னுடைய கற்பனை அல்ல. டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கற்பனை!

Ayyanar Viswanath said...

மாலன்
ஒரு தார்மீக சிந்தனை கூடவா இல்லை?.....நீங்கள் தமிழரா?

இராம.கி said...

அன்பிற்குரிய மாலன்,

நீங்கள் கண்ட செய்தியை உங்கள் பதிவில் வெளியிடுவது உங்களின் உரிமை. அதுபற்றிக் கருத்து வெளியிடுவதுங் கூட உங்கள் உரிமை தான். ஆனாலும், பின்னூட்டம் போடுவதற்காக நீங்கள் கொடுத்திருக்கும் அடைப்பலகைகள் (templates) மிகுந்த வருத்தத்தைத் தருகின்றன.

பல்வேறு செய்திகள் தாளிகைகளில் வரும். அவற்றில் சில உண்மையாக இருக்கலாம்; சில வெறும் கற்பனையாக இருக்கலாம். கட்சிகள் உடையலாம்; தனி மனிதத் தாக்கங்கள் ஏற்படலாம். ஆனாலும் ஒரு குமுகாய எழுச்சி என்பது வரலாற்று நிகழ்வு. அதை இகழுவது என்பது வருந்தத் தக்கது. புலிகளையும், புலிகளின் ஆதரவாளர்களையும் மட்டும் நீங்கள் நக்கல் செய்யவில்லை. ஈழச் சிக்கலுக்காக உயிர்கொடுத்தவர்களையும், அதில் வாழ்வு இழந்தவர்களையும், இன்னும் அந்தச் சிக்கலால் தடுமாறிக் கொண்டிருப்பவர்களையும் சேர்த்தே நீங்கள் கீறிப் பார்க்கிறீர்கள்.

பட்டால் ஒழிய யாருக்கும் வலி புரியாது.

பாலசுத்தீனர்கள் அடிபடும் போது நக்கல் செய்யும் அரபிகளை விரல்விட்டு எண்ணலாம். "வங்காள தேசிகள்" அடிபட்ட போது நக்கல் செய்த மேற்கு வங்காளிகளும் மிகக் குறைவே. ஒரு நாட்டு இலத்தீன் அமெரிக்க மக்கள் அடிபடும் போது, இன்னொரு நாட்டு இலத்தீன் அமெரிக்க மக்கள் நக்கல் செய்ததில்லை. ஆப்பிரிக்காவின் ஒருபக்கம் அடிபடும் போது இன்னொரு ஆப்பிரிக்கன் நக்கல் செய்ததில்லை. 35 கி.மீ.க்கு அப்பால் தமிழன் அடிபட்டால், இந்தப் பக்கத் தமிழர்கள் அதை அறியாமலும், அறிந்தாலும் புரியாமலும், இருக்கும் படி இங்கு ஒரு நக்கல் பொம்மலாட்டமே, மிடையத் துறையில் (media) நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு நீங்களும் துணை போவது வருத்தமாய் இருக்கிறது.

ஈழம் என்ற நாடு அமைந்தால் ஒழிய இந்தச் சிக்கல் தீராது. வேறு காரணங்களால் ஈழம் அமையவொட்டாமல் போனாலும், இந்தப் பேரழிவு முடிவுக்குக் கொண்டுவரப் பட வேண்டும். இன்றையச் சிங்கள அரசால் நல்ல முடிவு ஏற்படமுடியாது. இந்த இயல்நிலையைக் கூடவா உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை?

இராம.கி.

கொ. வை.அரங்கநாதன் said...

எந்த பெரிய இயக்கத்திலும் பிளவு வரத்தான் செய்யும்.ஆனால் சிறுத்தைகள் நிச்சயம் வெல்வர்.

Vetri Thirumalai said...

டைம்ஸ் ஆப் இன்டியா என்ன உலகப்பொதுமறையா .பெங்களூரில் வெளிவரும் அதன் 'பெங்களூர் டைம்ஸ்" பார்ததால் தெரியும் அதன் தகுதி. தினந்தோறும் அரைநிர்வாணப்படங்கள் வெளியிடும் ஒரு மஞ்சப்பத்திரிக்கை தான் மாலன் தினமும் படிக்கும் கீதையோ? அது வெள்ளக்காக்காய் பறக்குதுன்னு சொன்னா நிங்க ஆமா அதுக்கு பச்சை மூக்குனு சொல்ற ஆளுதான.

Jazeela said...

இந்த நகைச்சுவை கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து நேரவிரயம் செய்துவிட்டீர்களே?

Anonymous said...

intha polaippukku,naalu naayi peee alli thinnalaam maalan sir..!!