Monday, September 21, 2009

தமிழில் பேசும் கணினி

கணினியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதை வாசித்துக் காட்டும் மென்பொருள்களை நாம் அறிவோம். நம்மில் சிலர் அதனைப் பயன்படுத்தியிருக்கவும் கூடும். நான் தில்லியில் பணிபுரிந்த போது எங்கள் அலுவலகத்தில் பார்வைத் திறன் குன்றிய ஒருவர் தொலைபேசித் தொடர்பாளராகப் பணியாற்றி வந்தார். அவ்ரை இது போன்ற ஒரு மென்பொருளைக் கையாளப் பயிற்சி தந்தோம். தொலைபேசி எண்களைக் குறித்துக் கொள்வதில் ஆரம்பித்த் அவர் சில வாரங்களில் இணையதளங்களைப் 'பார்வை'யிட்டு அவற்றிற்கு தனது எதிர்வினையை மின்னஞ்சல் மூலம் தெரிவிப்பவராகவும் ஆகிவிட்டார்.

இனி கணினியில் தமிழில் தட்டச்சு செய்வதைக் கணினி தமிழிலேயே வாசித்துக் காட்டும்!. இதற்குரிய ஒரு மென்பொருளை (engine) பெங்களுரூவில் உள்ள இந்த அறிவியல் கழகத்தின் (Indian Institute of science) பேராசிரியர்.ஏ.ஜி.ராமகிருஷ்ணன் உருவாகியிருகிறார். இதன் வெள்ளோட்ட வடிவத்தை
http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo

என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

நான் இதில் மூன்றுவித பிரதிகளை இட்டு சோதனை செய்து பார்த்தேன்:

1. பாரதியின் 'எடுத்த காரியம் யாவினும் வெற்றி' என்ற கவிதை
2. புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் சிறுகதையின் ஒரு பகுதி (நாடகத் தமிழும், நெல்லைத் தமிழும் விரவி வரும் ஒரு நடை)
3.ஜெர்மனியில் நடைபெற உள்ள தமிழிணைய மாநாடு பற்றி நான் எழுதிய செய்திக் குறிப்பு
இந்தப் பொறி நன்றாகவே வேலை செய்கிறது. நீங்களும் சோதனை செய்து பார்க்கலாம். உங்கள் கருத்தை ramkiag@ee.iisc.ernet.in என்ற மின்னஞ்சல் மூலம் பேராசிரியருக்குத் தெரிவிக்கலாம்.


நன்றாக வேலை செய்கிறது எனினும் சிற்சில மேம்படுத்தல்கள் தேவை.

ஆங்கிலம் கலந்து எழுதினால் ஆங்கிலப் பகுதிக்ளை அது வாசிப்பதில்லை. எண்களில் அதற்குப் பிரசினைகள் இருக்கிறது.

பேராசிரியர் ஏ.ஜி.ஆர். கணினி/இணையத்தில் தமிழைச் செழுமைப்படுத்த உழைத்து வருபவர்களில் ஒருவர். உத்தமத்தின் தமிழிணைய மாநாடுகளில் கலந்து கொண்டு பங்களிப்பு செய்தவர்.

இது அவர் தமிழுக்கு அளித்துள்ள மிகப் பெரிய கொடை.

விழியிழந்தவர்களை மட்டுமல்ல, மொழி இழந்த ஒரு தலைமுறைக்கும் தமிழைக் கொண்டு செல்ல இது உதவும் என்பதால் இது இன்று அவசியம் தேவைப்படும் ஒரு தொழில்நுட்பம்.

பாராட்டுக்கள், வாழ்த்துகள் ஏ.ஜி.ஆர்.

26 comments:

தென்னவன். said...

/* விழியிழந்தவர்களை மட்டுமல்ல, மொழி இழந்த ஒரு தலைமுறைக்கும் தமிழைக் கொண்டு செல்ல இது உதவும் என்பதால் இது இன்று அவசியம் தேவைப்படும் ஒரு தொழில்நுட்பம். */

சரியா சொன்னீங்க!

Jerry Eshananda said...

பயனுள்ள பதிவு,இதைப்போல புதுமையான செய்திகளை கொண்டு வந்து சேருங்கள்.தொடர்கிறோம்.

Ungalranga said...

நல்ல கருவி.. தமிழுக்கு!!

நன்றிகள் பல.. வாழ்த்துக்கள்!!

அன்புடன் அருணா said...

புதுத் தகவல்....நன்றி!

யாழ்.பாஸ்கரன் said...

பயனுள்ள தகவல், கணிணி தமிழுக்கு கிடைத்த சிறந்த தொழில்நுட்பம்.

Thomas Ruban said...

அட! நன்றாக இருக்கே.இந்த முயற்சி பாராட்டுக்குரியது இனி குறைகள் வராமல் மேம்படுத்தலாம்.

நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஏ. ஜி . ராமகிருஷ்ணன் அவர்களுகு வாழ்த்துக்கள்

தகவலுக்கு நன்றி..

கவிநயா said...

பயனுள்ள பணி பற்றிய தகவலுக்கு நன்றி.

சிங்கம் said...

தமிழுக்கு இது பெரிய மைல கல். engkaLaippola தமிழ்நாட்டுக்கு வெளியில் வாழும் தமிழர்களுக்கு பெரிய வரப்பிரசாதம். ஆனா கொஞ்சம் tune up பண்ணனும் போல தோனுது...

ஹரன்பிரசன்னா said...

Marvelous.

மாதேஸ் said...

Great... Ppl like me need this really... :)

webworld said...

ஏ. ஜி . ராமகிருஷ்ணன் அவர்களுகு வாழ்த்துக்கள்

தகவலுக்கு நன்றி..

enRenRum-anbudan.BALA said...

அருமை, பேராசிரியருக்கு நன்றி.

Dr.Rudhran said...

thanks for this post

chinathambi said...

தகவலுக்கு நன்றி..

தஞ்சாவூர்க்காரன் said...

உபயோகமுள்ள பதிவு.வாழ்த்துக்கள்

chinathambi said...

ஏ. ஜி . ராமகிருஷ்ணன் அவர்களுகு வாழ்த்துக்கள். விழியிழந்தவர்களை மட்டுமல்ல, மொழி இழந்த ஒரு தலைமுறைக்கும் தமிழைக் கொண்டு செல்ல இது உதவும்.

http://chinathambi.blogspot.com

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

karthickeyan said...

மிகவும் அருமை. நான் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த தொழில்நுட்பம்.
தகவலுக்கு மிக்க நன்றி.

Ahamed irshad said...

பயனுள்ள செய்தி... நன்றி!

Jane said...

Excellent wordings this is the first time I ever visit a tech information in Tamil.

I will be visiting your blog often in the future

mrknaughty said...

நல்ல இருக்கு
thanks
mrknaughty

Unknown said...

இந்த தொழில் நுட்ப்பம் பயனுள்ளதுதான்.மேலும் தமிழில் பேசினால் டைப் செய்யும் தொழில் நுட்பம் உள்ளதா அப்படி இருந்தால் எனது நியூஸ்பேப்பர் கம்பெனிக்கு உதவியாக இருக்கும் .siva007world@gmail.com

Unknown said...

இந்த தொழில் நுட்ப்பம் பயனுள்ளதுதான்
.இது போல் தமிழில் பேசினால் டைப் செய்யும் ஏதேனும் தொழில் நுட்பப் உள்ளதா நண்பரே ......

Unknown said...

இந்த தொழில் நுட்ப்பம் பயனுள்ளதுதான்.மேலும் தமிழில் பேசினால் டைப் செய்யும் தொழில் நுட்பம் உள்ளதா அப்படி இருந்தால் எனது நியூஸ்பேப்பர் கம்பெனிக்கு உதவியாக இருக்கும் .siva007world@gmail.com

Unknown said...

இந்த தொழில் நுட்ப்பம் பயனுள்ளதுதான்.மேலும் தமிழில் பேசினால் டைப் செய்யும் தொழில் நுட்பம் உள்ளதா அப்படி இருந்தால் எனது நியூஸ்பேப்பர் கம்பெனிக்கு உதவியாக இருக்கும் .siva007world@gmail.com