Friday, March 06, 2009

கனவுகள் எரியும் தேசம்

அந்த தினம் இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது. ஏனெனில் அது ஒரு இளைஞன் தமிழுக்காகத் தன்னை எரித்துக் கொண்ட தினம்.
அன்றும் வழக்கம் போல் ‘பராக்கு’ பார்த்துக் கொண்டே பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தேன். போகிற வழியெல்லாம் புதிதாக ஒரு போஸ்டர் முளைத்திருந்தது. வெள்ளைப் பின்னணியில் புள்ளிச் சித்திரமாக செல்வம் வரைந்திருந்த அண்ணாவின் படம். கீழே ரத்தச் சிவப்பில் ‘உலத்துத் தீமைகள் அனைத்திற்கும் தீ மூட்ட உன் அண்ணனது கரங்கள் வலுவற்றதாக இருக்கலாம். னால் உன்னை இரண்டாந்தரக் குடிமகனாக்கும் இந்திக்குத் தீ மூட்ட அவை துவளப் போவதில்லை’
இரண்டாந்தரக் குடிமகன் என்ற வார்த்தை என்னை இம்சித்தது. பள்ளி இறுதி வகுப்பில் இருந்தேன். அப்போதெல்லாம் பள்ளியில் குடிமைப் பயிற்சி (citizenship Training) என்று வாரத்திற்கு ஒரு வகுப்பு இருந்தது. னால் அதிலொன்றும் பெரிதாகக் கற்றுக் கொடுத்துவிட மாட்டார்கள். அந்த வகுப்பு நேரத்தில் அநேகமாக கிரிக்கெட் டுவோம். கிரிக்கெட் டுவது இந்தியக் குடிமகனின் கடமைகளில் ஒன்று என்றுதான் அந்த வகுப்புக்கள் எங்களுக்கு உணர்த்தியிருந்ததன. அதனால் அப்போது எனக்கேற்பட்ட மன இம்சை என் பிரஜா உரிமைகள் பறிபோய்விடப் போகிறது என்பதால் ஏற்பட்ட கலக்கம் அல்ல. னால் நாளையே யாருக்கோ அடிமையாக கி விடப்போகிறோம் என்றோர் இனம் புரியாத பயம் எழுந்தது. புத்தகத்தில் நான் சந்திருந்த அடிமைகள் கசையடி வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
பள்ளி வாசலில் ராதாகிருஷ்ணன் நின்று கொண்டு மறித்துக் கொண்டிருந்தான். ராதாகிருஷ்ணன் என் வகுப்புத்தான். னால் என்னை விட இரண்டு வயது பெரியவன்.முகத்தில் மீசை வளர்த்திருந்தான். கல்லூரி மாணவன் போல முழுக்கால் சட்டை அணிந்து ஒரு குயர் நோட்டு ஒன்றை ள்காட்டி விரல் முனையில், மகாவிஷ்ணுவின் சக்கரம் போலச் சுற்றிக் கொண்டு பள்ளிக்கு வருவான்.’கிளாசிற்குப் போகாதே வேலை இருக்கு’ என்றான் ராதா.
பத்தரை மணிவாக்கில் எங்கள் பள்ளி மாணவர்கள் 100 பேர் ஊர்வலமாகப் புறப்பட்டு அருகில் இருந்த திலகர் திடலுக்குப் போனோம். அங்கு காத்திருந்த இன்னொரு பெரிய ஊர்வலத்தில் சங்கமித்து, வடக்கு மாசி வீதிக்கு வந்தோம். ஒன்று நூறாகி, நூறு யிரமாகும் போது எற்படுகிற தன்னம்பிக்கையும் மன எழுட்சியும் எங்களை க்கிரமித்திருந்தது.விசையேற்றப்பட்டவனாய் உடல் மன்ணுக்கு உயிர் தமிழுக்கு என நான் எழுப்பிய முழக்கங்கள் என் நண்பர்களுக்கு ச்சரியமளித்தது. எனக்கே கூட ச்சரியமாகத்தானிருந்தது. என் குடும்பச் சூழல், என் பள்ளிச் சூழல் எல்லாம் என்னை இப்படி சந்நதம் வந்தவனைப் போல நடுவீதியில் நாணமற்றுக் கூச்சலிட்டுச் செல்லப் பயிற்றுவித்திருக்கவில்லை. நாலு பேர் நம்மைக் கவனிக்கிறார்கள் என்றதும் உற்சாகம் ஓர் ஊற்றுப் போல் பீறிட்டது.
ஊர்வலத்தின் முன் வரிசையில் யூசி ஹைஸ்கூல் மாணவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களை அடுத்து நாங்கள்.
கிருஷ்ணன் லோவிலைத் தாண்டி ராமாயணச் சாவடி வருகிற வரை ஒன்றும் பிரசினையில்லை.ராமாயணச் சாவடி அருகே வந்ததும் ஒரு சலசலப்பு அங்கே அன்றைய ளுங்கட்சியின் அலுவலகம் இருந்தது அதன் உள்ளிருந்து ஊர்வலத்தின் மீது கல்லெறிந்தார்கள் என்றொரு செய்தி பரவியது. நகர்ந்து கொண்டிருந்த ஊர்வலம் தேங்கி நின்றதும்,பின்னாலிருந்தவர்கள் என்ன விஷ்யம் என்றறிந்து கொள்ள முன்னால் முண்டிக் கொண்டு வந்தார்கள் தள்ளு முள்ளு ஓர் அலைமாதிரி என்ன முன்னெடுத்துச் சென்றது. என்ன நடக்கிறது எனத் தெரியாமல் நான் திகைப்பில் திணறிக் கொண்டிருந்த போது, சித்திரைத் திருவிழாவில் திண்டுக்கல் ரோடு பூக்கடைகள் அருகே மலர்ச் சொரிய அந்தரத்தில் திடுமெனத் தோன்றுகிற பொம்மைகள் மாதிரி, ஒரு காவல் அதிகாரி ராமாயணச் சாவடிக் கூரையின் மீது தோன்றினார். விளிம்பில் தொற்றிக் கொண்டு, ஒருகையால் தூணை அணைத்துக் கொண்டு மறு கையில் பெரிய தகரக் குழாயை வாயருகே பிடித்துக் கொண்டு பெரிய குரலில் ஏதோ இரைந்தார். முதலில் என்ன சொல்கிறார்கள் என்று புரியவில்லை.உற்றுக் கேட்டபோது காவல்துறை அதிகாரி எங்களைக் கலைந்து போகச் சொல்கிறார் எனப் புரிந்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்த இக்கட்டான தருணத்தில் ராதாகிருஷணன் எங்கேயோ காணாமல் போய்விட்டான்..நான் ஒரு கணம் தயங்கி நின்றேன். அப்படி நின்ற வேலையில் போலீஸ் தடியைச் சுற்றிக் கொண்டு எங்களை நோக்கி வந்தது. மிரண்டு போய் கலைந்து ஓடினோம். னால் எனக்குப் பின்னால் ஒரு காவலர் ஓடி வருவதை என்னால் உணர முடிந்தது.
சுளீர்! என் இடது கெண்டைக்காலில் நெருப்புத் துண்டு விழுந்தது போல் ஒரு எரிச்சல் கலந்த வலி. காவலர் கையிலிருந்த தடி என் காலில் இறங்கியிருக்கிறது எனப் புரிந்து கொண்டு ஓட எத்தனித்தேன். அதற்குள் இன்னொரு அடி இறங்கிற்று. அடி விழுந்த காலைத் தூக்கிக் கொண்டு ஒற்றைக்காலால் நொண்டிக் கொண்டே ஓடினேன். சிறுவர்களிடம் அடிவாங்கி, ஒற்றைக்காலைத் தூக்கிக் கொண்டு ஓடும் தெருநாயைப் போல அந்தக் கணம் உணர்ந்தேன்.
குறுக்குச் சந்துகளில் ஓடி தானப்ப முதலி தெருவிலிருந்த என் வீட்டுக்கு வந்து காலைப் பார்த்தேன். அடிவிழுந்த இடத்தில் தோல் பிளந்து ரத்தக்காயம். அதைச் சுற்றிலும் ரத்தம் கட்டிக் கரு நீலம்.
வலி. காயத்தைக் கழுவி அம்மா அதன் மேல் டிஞ்சர் அயோடினைத் தடவினார். நெருப்புப் போல் எரிந்தது.
னால் அன்றூ மாலை மாலைமுரசில் படித்த ஒரு செய்தி என் காயம், என் வலி எல்லாம் எத்தனை அற்பமானவை என உணர்த்திற்று. இந்தித் திணிப்பை எதிர்த்து திருச்சி அருகே கீழப்பாவூரைச் சேர்ந்த சின்னசாமி தீக்குளித்து மாண்டார் என்றது செய்தி. ஒரு சிறுகாயம் நெருப்பாக எரிகிறது என்பதையே நம்மால் பொறுக்க முடியவில்லை.னால் தமிழுக்காக ஒருவர் தன் மீதே நெருப்பு வைத்துக் கொண்டிருக்கிறார்! வலியால் எப்படித் துடித்திருப்பார்? உடலில் நெருப்புப் பற்றி எரிந்த போது அய்யோ அம்மா என்று அலறவில்லை. மாறாக தமிழ் வாழ்க, இந்தி ஒழிக என சின்னசாமி முழக்கமிட்டதாகச் சொல்லியது செய்தி.
சின்னசாமி தன்னை எரித்துக் கொண்டபோது அவருக்கு வயது 27. குடும்பத்தில் ஒரே மகன். திருமணமாகி இருந்தது. திராவிடச் செல்வி என்றொரு பெண் குழந்தை இருந்தது. தீக்குளிக்கும் முன் தன் மனைவியின் அண்ணனுக்கு எழுதிய கடிதத்தில்,“தமிழைக் காக்க என் உயிரைத் துறக்கிறேன். என் லட்சியம் ஒரு நாள் வெல்லும்” என்று எழுதியிருந்தார்.
தமிழ்நாடெங்கும் சின்னச்சாமியின் மரணம் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதுவரை தீக்குளிப்பு என்றொரு போராட்ட முறையைத் தமிழகம் கண்டதில்லை. எனவே அந்தச் செய்தி அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. அடுத்த நாள் ஜனவரி 26, 1965 அன்று சென்னையில் கோடம்பாக்கம் ரயில் நிலையம் எதிரில் 21 வயது சிவலிங்கம் தன்னை எரித்துக் கொண்டு மாண்டார்.அதற்கு அடுத்தநாள் விருகம்பாக்கம் அரங்கநாதன். அப்புறம் அய்யம்பாளையம் வீரப்பன், சத்தியமங்கலம் முத்து, மாயவரம் சாரங்கபாணி.
வரிசையாய் அடுத்தடுத்து மாண்ட இளைஞர்களது மரணங்கள் தமிழ்நாட்டை உலுக்கின. இனியும் மத்திய அரசும் மாநில அர்சும் சும்மாயிருந்துவிட முடியாது, பணிந்தே க வேண்டும், இந்தத் தியாகங்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் எழுந்தது.
எழுட்சி மிகுந்த இறுதி ஊர்வலங்களில் தீக்குளித்தவர்களது உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டன.ங்காங்கு விர வணக்கக் கூட்டங்கள் நடந்தன. எல்லாக் கூட்டங்களும் ‘என் இலட்சியம் என்றாவது ஒரு நாள் நிறைவேறும்’ என எழுதி வைத்துவிட்டு இறந்த சின்னசாமியின் கனவை நனவாக்குவோம் என்ற முழக்கங்களோடு முடிந்தன.
*இன்று இன்னொரு தீக்குளிப்பு. இன்னொரு இளைஞன். இன்னொரு லட்சியம். அந்த லட்சியத்தை ஏற்றுக் கொண்டவர்களின் மனங்கள் கனல் போல் கொதிக்கின்றன. எழுட்சி மிகுந்த இறுதி ஊர்வலங்கள்.ங்காங்கு வீரவணக்கக் கூட்டங்கள்.இறப்பதற்கு முன் எழுதி வைத்த கடைசிக் கடிதத்தை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன.
இந்தத் தியாகம் வீண்போகாது என்றேனும் இந்த இளைஞனின் லட்சியம் நிறைவேறும் என்ற முழக்கங்கள் ஒலிக்கின்றன. அரசுகள் இந்தத் தியாகத்தை அலட்சியப்படுத்த முடியாது, அப்படி அல்ட்சியப் படுத்த முனைந்தால் அவர்களை வீட்டுக்கு அனுப்புவோம் என்ற வேச சபதங்களைக் கேட்கின்றன.*நாங்கள் அந்த மாநில அரசை வீட்டுக்கு அனுப்பினோம். அன்று எங்களுக்கு வாக்குரிமை இல்லை. னாலும் வீடு விடாகப் போய் வாக்காளர்கள் காலில் விழாத குறையாய்க் கெஞ்சி, மன்றாடி அந்த அரசை வீட்டுக்கு அனுப்பினோம். இந்தியை ஒழிப்பார்கள், தமிழைத் தழைக்கச் செய்வார்கள் என்று நம்பியவர்களை நாற்காலிகளில் அமர்த்தினோம்.னால் அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் கான்வென்ட் பள்ளிகளில் ங்கிலமும் இந்தியும் படித்தார்கள். தில்லிக்குப் போனார்கள் போராட அல்ல. இந்தியை அரசு மொழியாகக் கொண்ட அரசில் அமைச்சர்களாகப் பதவி ஏற்க.
சின்னசாமியின் மகள் திராவிடச் செல்வி இன்று எங்கிருக்கிறார், எப்படி இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. னால் கனிமொழி என்னவாக இருக்கிறார் என எல்லோருக்கும் தெரியும்.
தனது ஒரே மகன் முத்துக்குமாரை ஈழப் பிரசினைக்காக தீக்குத் தின்னக் கொடுத்த அவரது தந்தை அதற்காக அரசு கொடுத்த பணத்தைக்கூட மறுத்து விட்டார். இத்தனைக்கும் பழைய இரும்பு விற்றுப் பிழைக்கிற ஏழை அவர்.
னால் இலங்கைத் தமிழர் பிரசினையில் தினம் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கும் மருத்துவரின் ஒரே மகன் தன் அமைச்சர் பதவியைக் கூடத் துறக்க முன்வரவில்லை. இத்தனைக்கும் இன்னும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் கூட இல்லை.
*தீக்குளித்து இறந்த 22 பேரின் உளவியலை ராய்ந்த சண்டிகரைச் சேர்ந்த மனோதத்துவ வல்லுநர்கள் தீக்குலிப்பவர்கலில் பெரும்பாலானோர் லட்சிய வேட்கை / பெரிய சைகள் கொண்டவர்கள், முரட்டுத்தனமானவர்கள், விரோத மனோபாவம் கொண்டவர்கள், அந்நியப்பட்டுப் போனவர்கள் (Most were ambitious, aggressive, hostile and felt alienated) என வர்ணிக்கிறார்கள்.
எனக்கென்னவோ இந்த வர்ணனை நம் அரசியல்தலைவர்களுக்கே பொருந்தும் எனத் தோன்றுகிறது. ஏனெனில் நானறிந்தவரை தமிழ்நாட்டில் தீக்குளித்தவர்கள் தங்கள் கோபத்தைக்கூட தங்கள் மீதே காட்டிக் கொள்ளக் கூடிய அளவிற்கு இயலாமை கொண்டவர்கள்.

ஏனெனில் அவர்கள் ஏழைகள்.

அம்ருதா மார்ச் 2009 இதழுக்காக பிப்ரவரி 8ம் தேதி எழுதியது

8 comments:

enRenRum-anbudan.BALA said...

நன்றாக இருந்தது, மாலன் சார்..

அப்போதியய் ஹிந்தி எதிர்ப்பு பற்றி அதிகம் தெரியாது, வாசித்ததும் இல்லை.

நன்றி.

Anonymous said...

Idhayam Ganakkiradu! Innum eththanai natkal ezhaligalin pina kuviyal galum adhan mel indha arasiyal Peruchaligalin attahasangal um...Kadavul illai thaan..Kandippaga.

Anonymous said...

மாலன் சார்! தீக்குளிப்பது என்பது சம்பந்தப் பட்டவருக்கு எந்த விததிலும் உதவப் போவது இல்லை. இத்தகைய மரணம் அந்த விஷயத்தை ஊதி ஊதிப் பெரிதாக்கும் சில குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு தற்காலிக செல்வாக்கு பெற்றுத்தருவது தவிர தேர்தல் வந்தால் கேவலம் நூறு ஓட்டு கூட வாங்கித்தராது என்பதுதான் உண்மை. அதையும் தாண்டி, எடுத்துக்கொண்ட பிரச்சினைக்குத் தீர்வு தருவதில் கண்டிப்பாக எள்ளளவும் உதவாது. இறந்தவர் குடும்பங்கள் படும் வேதனைதான் மிச்சம். இருந்து சாதிக்க முடியாததை இறந்து சாதிப்பதற்கு இந்த முகமற்றவர்கள் முயற்சிப்பதன் பெயர் தியாகம் அல்ல. முட்டாள்தனம்.

இனிமேல் முட்டாள்களின் தற்கொலைகளுக்கு கருணையே இல்லாமல் கண்டனம் தெரிவித்தால்தான் நிலமை உருப்படும்.

seethag said...

malan, this is exactly what i feel.What a sadness to lose once son to ideologies that are fostered by selfish people.Even the LTTE, no one wants to talk of rajani thirunagama ,or her book the broken palmyra or about humanrights issue in differing contexts in Srilanka.(http://www.uthr.org/).
seeing dayanidhi maran's inability to speak tamil enrages me to no end. but then average thondan still wants a hero and doesnt believe he can be one instead of woshipping some worthless crook.

Anonymous said...

மாலன்,

போலிகளின் முகத்திரையைக் கிழிக்கும் வண்ணம் மிகவும் தைரியமாக எழுதியிருக்கிறீர்கள். ஆனால் இந்த உண்மைகளை எல்லாம் படித்த நம் ‘அறிவுஜீவிகள்’ கண்டு கொள்ளப் போவதில்லை. பாமரர்களுக்கோ பிரியாணியும் குவார்ட்டரும் போதும்.அந்த நிலைக்கு தமிழகத்தை, இந்தியாவை ஆக்கி விட்டார்கள் இந்தப் புண்ணியவான்கள்.

நாளொரு மேனியும் பொழுதொரு சாதனைப் பட்டியலையும் வெளியிடுகிறார்கள். இதுதான் அவர்களது உண்மையான சாதனை. இதையெல்லாம் விமர்சித்து எழுதினால், ஆரியன், பார்ப்பனன், இந்துத்துவாதி என்ற பட்டங்கள். உண்மையை உரத்துச் சொல்லக் கூட
முடியாத சூழல் நிலவுகையில் அதைக் கட்டுரையாகவும் எழுதியிருக்கும் உங்களது துணிச்சலுக்குப் பாராட்டுக்கள்.

ஆனால் எதற்கும் ஜாக்கிரதையாக இருங்கள். எஸ்.வி.சேகரின் வீட்டில் பெட்ரோல் பாட்டில் வீசியவர்களுக்கு (இதில் எல்லாம் கட்சி பேதமே கிடையாது) நம் வீடுகளைக் குறி வைக்க எவ்வளவு நேரமாகும்?

அக்கறையுடன்
அநங்கன்

Unknown said...

மிகவும் உணர்ச்சி பூர்வமான எழுத்து இத்தனை விஷயங்கள் நடந்து விட்டது என்பது இப்போதுதான் தெரிகிறது, அந்த திராவிடச்செல்வி என்ன ஆனார் என்று நீங்கள் கேட்டிருப்பது சிலருக்கு புரியவேண்டும் புரியுமா??

Anonymous said...

என்ன Mr. தவநெறிச்செல்வன்.. தமிழ்கூறும் நல்லுலகத்தை இவ்வளவு குறைத்து மதிப்பிடலாமா? எல்லோருக்கும் கண்டிப்பாகப் புரியும். ஆனால் அதற்காக என்ன செய்யப் போகிறோம் என்று கேட்கக் கூடாது. மிஞ்சி மிஞ்சிப் போனால் மெகா சீரியல் பார்ப்போம். கனிமொழி தேர்தலில் நின்றால் ஓட்டுப் போடுவோம். அவரை எதிர்த்து திராவிடச் செல்வி போட்டியிட்டால் டெபாசிட்டைப் பிடுங்கிக் கொள்வோம். எங்களூரில் இன உணர்வு என்பது எல்லாக் கடைகளிலும் கிடைக்கும்.

ஜோதிஜி said...

தமிழ்நாட்டில் தீக்குளித்தவர்கள் தங்கள் கோபத்தைக்கூட தங்கள் மீதே காட்டிக் கொள்ளக் கூடிய அளவிற்கு இயலாமை கொண்டவர்கள்.

நூறு சதவிகிதம் உண்மையான புரிந்துணர்வுடன் கூடிய சிந்தனை வரிகள். நீங்கள் குறிப்பிட்டுள்ள அரசியல்வாதிகள் ஈழப் பிரச்சனைகளுக்காக கொண்ட "தியாகத்தை" உங்கள் வரிகளில் இன்று படிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி.