Wednesday, January 07, 2009

கட்டப்பட்ட காவலர்கள்

எந்த ஒரு சமூகத்திலும் அதன் அரசியல்தான் அதன் இலக்கியத்தைத் தீர்மானிக்கிறது; இன்று காலையில் எழுந்து நாம் பல்துலக்குவதிலிருந்து இரவு ஏற்றிவைக்கும் கொசு வர்த்திவரை கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர் போல அரசியல் விரவிக்கிடக்கிறது.. அரசியலுக்கும் சமூகத்திற்குமான உறவைக் குறித்து என் கதைகள் விளம்பச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. எனவே இந்தப் பத்தியில் ஑அரசியல்ஒ பேசப் போவதில்லை. நாம் காணத்தவறிய/ காணமறுக்கிற நம் கண்ணுக்கு எட்டாத சமகால மாந்தர்களின் கதைகளை, அவர்தம் மறுபக்கங்களை இவை பேச முற்படும். அவற்றில் அரசியலும் இருக்கலாம். அது தொடாத வாழ்வு இங்கு ஏது?

*

யிலுக்குக் கிளம்ப இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு மேலிருந்தது. நேரத்தை எப்படிக் கொல்வது என்று தெரியாமல் தொலைக்காட்சிகளை மேய்ந்து கொண்டிருந்தேன். உள்ளூர் கம்பிவடச் சானலில் அறியாத முகங்கள் நிறைந்த ஒரு படம் ஓடிக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு தெலுங்குப் படத்தின் தமிழ் பிரதி போலத் தோன்றிய அந்தப் படத்தில் நான் நுழைந்த போது ஒரு காவல் அதிகாரி, லாக்கப்பில் அநேகமாக அரை நிர்வாணமாக இருந்த ஒருவனை மூர்க்கத்தனமாக விளாசிக் கொண்டிருந்தார். அதே படத்தில் நகைச்சுவைக்காக ஒரு கான்ஸ்டபிள் பாத்திரம் கோமாளித்தனமாகச் சித்தரிக்கப்பட்டிருந்தது.

நம் காவலர்கள் மூர்க்கமான விலங்குக் குணங்களும், முட்டாள்தனமான கோமாளித்தனமும் ஏதோ ஒரு விகிதத்தில் கலந்து செய்யப்பட்ட உயிரினங்கள் என்பதுதான் பரவலான வெகுஜன அபிப்பிராயம் சினிமா அலுத்துப் போய் செய்திச் சானல்களுக்குத் திரும்பினேன். ந்திரப் பிரதேச வாராங்கல்லில், ஒருதலைக்காதல் வெறியில் இளம்பெண் ஒருவர் மீது சிட் ஊற்றிய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அது விவரித்துக் கொண்டிருந்தது. ஓரொம்பச் சரியான நடவடிக்கை, இவனுகளை எல்லாம் சுட்டுத்தான் கொல்ல வேண்டும்ஔ என்று அருகிலிருந்த என் சகோதரி அதை சிலாகித்துக் கொண்டிருந்தார். ஓ போலீஸ்காரனே நீதிபதியாக இருக்கலாம் என்றால் கோர்ட் எதற்கு, சட்டம்தான் எதற்கு?ஔ என்றேன் நான். ஓநீ சும்மா இரு. மெர்சி கதை மறந்து போச்சா?ஔ என்றார் அவர்.

மெர்சி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) இதே போல் சிட் வீச்சுக்கு உள்ளான ஒரு கல்லூரி மாணவி. அந்த சம்பவத்தில் முகத்தின் ஒரு பகுதி வெந்துபோய் விட்டது. ஏழைக் குடும்பத்துப் பெண். ஓயார் கல்யாணம் செய்துக்குவா?ஔ என்று அவளது தந்தை மருகி மருகி அழுதபோது, ஓ மேலே படிக்க வையுங்கள், கல்வி காப்பாற்றும்ஔ என்று சொல்லி அந்தப் பெண் பல்மருத்துவம் படிக்க என் குடும்பம் உதவி செய்தது. அதைத்தான் அக்கா ஞாபகப்படுத்துகிறார். அந்தத் தொலைக்காட்சி செய்தியைப் பார்த்த போது அந்த வலி அவரைக் கடந்து போயிருக்க வேண்டும்.

விலங்குகளுக்கும் கோமாளிகளுக்கும் இடையில் ஹீரோக்களாகவும் காவலர்கள் இருக்க வேண்டும் என சராசரிப் பொது மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என அவரது விமர்சனம் எனக்குச் சொல்லியது.

அன்று நான் பயணம் செய்த ரயில் பெட்டியில் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் பயணித்தார்கள்.இரு சிறு கிராமங்களில் உள்ள காவல் நிலைய ய்வாளர்களாக உள்ள கீழ்த்தட்டு அதிகாரிகள். அவர்களில் ஒருவர் அருகில் இருந்த பயணியிடம் மாலைச் செய்தித்தாளை வாங்கிப் பார்த்தார். வாரங்கல் என்கவுண்டர்தான் அந்த மாலையில் தலைப்புச் செய்தி. ஓஇதிலே போலிசுக்கு நல்ல பேருஔ என்றார் செய்தித்தாளை இரவல் கொடுத்த பயணி. அதிகாரி பேப்பரிலிருந்து கண்களை உயர்த்தி தலையை அசைத்தார். ஓநீங்க என்கவுண்டர் செய்திருக்கிறீர்களா?ஔ என்றார் பயணி அவரிடம்.

அதிகாரி பதில் சொல்லவில்லை. முகத்தில் ஒரு விரக்தி தோய்ந்த புன்னகை நெளிந்தோடியது. பேச்சு எங்கெல்லாமோ ஓடி மணற்கொள்ளையில் வந்து நின்றது. அந்த ய்வாளரின் காவல் நிலையம் தாமிரபரணிக் கரையோரம் உள்ள சிற்றூரில் இருந்தது.ஔ யாரை என்கவுன்டர் பண்ணச் சொல்றீங்க.இப்பெல்லாம் லாரில வந்து லூட் பண்றதில்லை. மாட்டு வண்டில வந்து மணல் அள்ளிக்கிட்டுப் போறாங்க.ஊருக்கு வெளிய நிக்ற லாரில அது லோட் கும். கடாரம் கொண்டான்ல (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) இருக்கிற சிமிண்ட்டு பிளாக் பண்ற ஃபாக்ட்ரித்தான் போகுதுனு எனக்கு நல்லாத் தெரியும். னா என்ன செய்ய? மாட்டு வண்டிக்காரனையா என்கவுண்டர்ல போட்டுத் தள்ள? வண்டிய சீஸ் பண்ணி ஸ்டேஷன்ல வைச்சிருந்தோம். மாட்டுக்கு தீவனம் வாங்கிப் போட்டு மாளலை. மாட்டுக்கு ஏதாவது யிருந்தா என் தோலை உரிச்சிருப்பாங்க. விட்டுட்டோ ம்.

மணல் கந்தனு கேள்விப்பட்டிருப்பீங்க. முன்பு அவனுக்கு ரவுடி கந்தன்னு பேரு. இப்ப மணல் கந்தன். பத்து வருஷத்திற்கு முந்தி இந்த ஏரியால அவன்தான் முதல்ல மணல் அள்ள ரம்பிச்சான். அப்போ மணல்ல இவ்வளவு பணம் இருக்குனு நிறையப் பேருக்குத் தெரியாது. இப்போ அவன் கோடீஸ்வரன். அவனை மடக்கிப் பிடிச்சு கேஸ் போட்டோ ம். ஹைகோர்ட் வரைக்கும் போய் பெயில் வாங்கினான். சம்பவம் நடந்த தேதியில நான் மலேசியாவிலிருந்தேன்னு அவன் சொல்லுதான். அவன் பாஸ்போர்ட்டும் அப்படித்தான் சொல்லுது. னா அன்னிக்குத் தேதியில நான் அவனை நான் கண்ணால இந்த ஊர்ல பார்த்தேன். கோர்ட்ல ஜட்ஜூ என்னைக் கோட்டிக்காரன் மாதிரி பாக்கார்.இந்த மாதிரி பொய் கேஸ் எல்லாம் போடாதீரும்னு எனக்கு அட்வைஸ் பண்ணுதாரு.

இருபதாயிரம் ரூபாய்க்கு பெயில் கிடைக்குதுனு சொல்லுதாங்க. லட்சரூபாய்க்கு பாஸ்போர்ட்டும் கிடைக்கும் போல. இதுக்கு நடுவிலதான் நாங்க கேஸ் போட்டு ரவுடிகளை மடக்கணும். என்ன செய்ய?

சட்டக் கல்லூரி பசங்க அடிச்சுக்கிட்டாங்கள்ல. அன்னிக்கு ஹைவேஸ்ல நடு ரோட்டில மோட்டர் சைக்கிள குறுக்க மறிச்சி நிறுத்திட்டு நிக்கான். கவுர்மெண்ட் பஸ் மேல கல்லு விட்டான்.பிடிச்சு அடிக்கப் போனேன். சார் வேணாம் சாதிக் கலவரம் வந்திரும்னு ஏட்டு மறிச்சு தடுத்திட்டார்.

கொள்ளைக் கேசு ஒண்ணு. திருடனைப் பிடிச்சாச்சு. பொருள் அவன் வீட்டு பீரோல இருக்கு. வீட்டுக்குப் போனோம். அவன் பொண்சாதி வாசலை மறிச்சுக்கிட்டு நிற்கிறா. தைரியம் இருந்தா தாண்டிப் போயிரு பார்ப்போம்னு சவால் விடறா. முடியைப் பிடிச்சு இழுந்தெறிஞ்சிட்டு உள்ள போயிருவேன். அலிகேஷன் யிரும். சாட்சி வைச்சுக்கிட்டுப் போனேன். அப்படியும் அவ வீட்டிலிருந்த 10 பவுன் நகையை நான் களவாண்டேன்னு என் மேலே புகார் கொடுத்திருக்காஔ

ஓஅலிகேஷன்னா என்ன?ஔ என்றார் அருகில் இருந்தவர்.

ஓபெரும்பாலும் மொட்டைப் பெட்டிஷன். மொட்டையா இருந்தாலும் விசாரணை நடக்கும்.அதிகாரிகள் நல்லவங்களா, நேர்மையானவர்களா இருந்தா புரிஞ்சுப்பாங்க. இல்லைனா சங்கடம்தான்ஔ

ஓஅரசியல்வாதிகள் தலையீடு இருக்கா?ஔ என்றேன் நான்.

ஓஅலிகேஷன்னு வரும்போது உதவி செய்ய, அவங்க கட்சியில இருக்கிற உள்ளூர் ரவுடிகளை அடக்கி வைக்க அவங்க உதவி தேவை. ளும்கட்சி, எதிர்கட்சினு எந்தக் கட்சியா இருந்தாலும் அனுசரித்துப் போறதுதான் நடைமுறையில் சாத்தியம். விறைச்சுக்கிட்டு நிற்க முடியாது. மேலதிகாரி மாவட்ட செயலாளரோட நெருக்கமா இருக்கார்னா கீழ இருக்கிற கொசு நாங்க மோதிக்கிட்டு நிக்க முடியுமா? இன்னிக்குத் தேதியில மேல இருக்கிற உச்ச பட்ச அதிகாரியிலிருந்து கீழ இருக்கிற எங்களை மாதிரி இன்ஸ்பெக்டர் வரைக்கும் ளும்கட்சியை, அது எந்தக் கட்சினாலும் சரி, விரோதிச்சுக்க முடியாது. முறைச்சுக்கிட்டா ஒண்ணு தூக்கி அடிச்சிடுவாங்க. இல்லை அலிகேஷன்ல போட்டுத் தள்ளிடுவாங்கஔ

ஓ உங்க வீட்டிலே இதெல்லாம் புரியுமா?ஔ

ஓபுரியும். புரியணும். போலீஸ்காரனுக்கு வாக்கப்படறவ என்னிக்கு வேணாலும் மூட்டையைக் கட்டிக்கிட்டு கிளம்பத் தயாரா இருக்கணும்.ஔ

ஓகுழந்தைகள்?ஔ

ஓஒரே பையன். இந்த இரண்டு வருஷத்தில நாலு ஸ்கூலுக்குப் போயிட்டான். ஏன்னா எனக்கு டிரான்ஸ்பர். என் பையன் என்ன படிக்கிறான்னு கேளுங்க?ஔ
ஓஎன்ன படிக்கிறான்ஔ
ஓஎல்.கே.ஜி.ஔ
ஓஎல்.கே.ஜி.யிலேயா நாலு ஸ்கூல்?ஔ
ஓஎன்ன செய்ய அதான் போலீஸ்காரன் தலையெழுத்துஔ

அவர் சொன்ன வேறு சில விஷயங்களும் கேட்கப் பரிதாபமாகத்தான் இருந்தன. அண்மையில் ஒரு கட்சித் தலைவரின் கார் தாக்கப்பட்டதை அடுத்து ஒரு வாரத்திற்கு மேல் அவர் பகுதியில் ஜாதிக்கலவரம்.தினமும் 2 மணி நேரம்தான் தூங்க முடிந்தது. ஊரில் இரவு 3 மணி வரை ரோந்து போயாக வேண்டும். மறுபடியும் காலையில் ஊர் விழித்துக் கொள்ளும் முன் எழுந்து கொள்ள வேண்டும்.

மும்பையில் தீவிரவாதிகளை எதிர்த்து தீரமுடன் போரிட்டு மடிந்த காவலர்கள் வணங்கத்தக்க வீரர்கள் என்பதில் சந்தேகமில்லை.

னால் நம் மத்தியில் கைககள் கட்டப்பட்ட நிலையில் போராடிக் கொண்டே வாழ்கிற இந்தக் காவலர்களின் நிலை அதற்குச் சற்றும் இளைத்ததல்ல.


அம்ருதா ஜனவரி 2009

3 comments:

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

காவல்துறையில் ஆட்சியாளர்களும், கட்சிக்காரர்களும் தலையிடாமல் இருந்தாலே நாட்டில் பாதி பிரச்சினை முடிந்துவிடும்.

கைது செய்யப்பட்டு உள்ளே வைக்கப்பட வேண்டியவர்களே ஆட்சியாளர்களாக இருக்கின்றபோது காவல்துறையினரை விமர்சித்து என்ன ஆகப் போகிறது..?

ஆனால் என்கவுண்டர் விவகாரத்தில் மட்டும் காவல்துறை என்றாலே மற்றவர்கள் பயப்பட வேண்டும் என்ற எண்ணமுள்ள காவல்துறை அதிகாரிகள் செய்கின்ற தவறுதான் எல்லாவற்றுக்கும் காரணம்.

இவர்கள் என்கவுண்ட்டர் செய்த அத்தனை பேரையும் வளர்த்தது அரசியல்வியாதிகளும், காவல்துறையினருமாகத்தான் இருப்பார்கள். இப்போது அவர்களது சேவை இவர்களுக்கு தேவையில்லை என்கிறபோது தங்களது அதிகாரத்தை மீறி சட்டத்தைக் கையில் எடுத்து செயல்படுகிறார்கள்.

சுட்டவரைவிட சுட உத்தரவிட்டவர்தான் இந்த என்கவுண்ட்டர் கேஸ்களில் முதல் குற்றவாளி..

மற்றபடி கடைநிலை காவலர்களின் நிலைமை இங்கே பரிதாபம்தான்.

பனங்காட்டான் said...

சரியாகச் சொன்னீர்கள்! காவலர்கள் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதே! அதிலும் கடந்த 10 வருடங்களில் நிலைமை மிக மோசமாகி விட்டது. அரசியல் தலையீடு ஏற்றுக் கொள்ள முடியாத அளவு அதிகரித்து விட்டது. அரசியல் தொடர்புகள் இல்லை என்றால் இன்று யாரும் நிம்மதியாக வாழ முடியாத அளவுக்கு அரசியல்வாதிகள் நமது சமூக, பொருளாதார சூழல்களை சீரழித்து வைத்துள்ளனர். இதற்கு பொதுமக்கள், பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் அனைவருமே காரணமாக இருந்து கொண்டிருக்கிறோம். இச்சூழல், மறுசீரமைக்க முடியாத அளவுக்கு போய் போய்க்கொண்டிருகின்றதென்று அஞ்சுகிறேன். பள்ளிகளில், மனித உரிமைகள், சமூக ஒழுக்கம், குடிமக்களின் கடமைகள் போன்றவை கட்டாய பாடமாகக் கற்பிக்கப் படவேண்டும். இதன் மூலம், அடுத்த தலைமுறையையாவது, சீரமைக்கத் திட்டமிடலாம் என்பது என் தாழ்மையான கருத்து.

venkatramanan said...

அன்பின் மாலன்!
என் வலைப்பதிவிற்கு தொடுப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி! உங்களின் "என் ஜன்னலிற்கு வெளியே" படித்திருக்கிறேன். எம்.எஸ் என் அப்பாவின் ஃபேவரிட். "ஒரு தகப்பன் தலைகுனிகிறான் என்றால் தன் பிள்ளை நிச்சயம் 'பிறிதொரு நாளில் தலைநிமிர்வான்' என்ற நம்பிக்கையில்தான்" என்கிற அந்த வரி என் தந்தை இ(எ)ப்போதும் சொல்வது! அந்தப் புத்தகத்தைத் தற்போதுத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

அன்புடன்
வெங்கட்ரமணன்