Saturday, August 11, 2007

சொன்னது என்ன?

இந்தப் பதிவை நான் எழுத வேண்டுமா என்று முதலில் எனக்கு ஒரு தயக்கம் இருந்தது.அதற்குக் காரணங்கள் சில. ஒன்று: நான் இதுவரையில், எட்டு
போன்ற ஒன்றிரண்டைத் தவிர வேறு எந்தப் பதிவையும் என்னைப் பற்றி எழுதுவதற்குப் பயன்படுத்திக் கொண்டது கிடையாது. நான் எழுதிய
பதிவுகளின் பட்டியல் அருகில் இருக்கிறது. எவர் வேண்டுமானாலும் போய் சரி பார்த்துக் கொள்ளலாம்.
இரண்டு: பதிவர் பட்டறையில் நான் என்ன பேசினேன் என்பதைச் செவி வழிச் செய்தியாக அறிந்தவர்கள், அதைப் பற்றிய ஒலிப்பதிவு வெளியிடப்படும்வரை காத்திருந்து நான் பேசியவையாகக் கேள்விப்பட்டவை சரிதானா, அவை எந்த வார்த்தைகளில் எந்தச் சூழலில் (context) என்பவற்றை எல்லாம் உறுதி செய்து கொள்ளாமல், கருத்துக்களைக் கொட்ட ஆரம்பித்திருந்தார்கள். அவர்கள் நோக்கம் உண்மையை அறிந்து கொள்வதல்ல, என்னை வசைபாடுவதுதான், நான் என்ன பதில் சொன்னாலும் அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று எனக்குத் தோன்றியதால், நேரத்தை இதில் செலவிட வேண்டுமா என எண்ணினேன்.
மூன்றாவதாக சில தமிழ், ஆங்கிலப்பத்திரிகைகளுக்கு நான் சுதந்திர தின மலருக்காக் எழுத ஒப்புக் கொண்டிருந்தேன். அதற்கான கெடு
நெருங்கியிருந்தது.
நான்காவதாக, நான் 23ம் தேதி தில்லியை விட்டுக் கிளம்பியவன், ஏறத்தாழ இரண்டு வாரங்களுக்குப் பின் 6ம் தேதிதான் தில்லி
திரும்பியிருந்ததால் இங்கு அலுவலகப் பணிகள் குவிந்து கிடந்தன. (தமிழில் எழுதும் பல பதிவர்கள் அவர்களது பல் வேலைகளுக்கு நடுவே
கிடைக்கும் சிறிய அவகாசத்தில்தான் பதிவுகள் எழுதுகிறார்கள் என்பதால் இதைப் புரிந்து கொள்வார்கள் என நம்பிக்கையிருக்கிறது)
ஆனால் பட்டறையை ஏற்பாடு செய்தவர்களே நான் ஏதோ என்னுடைய 'நுண் அரசியல் விளையாட்டிற்கு மேடையைப் பயன்படுத்திக்
கொண்டுவிட்டதாக' வலை நன்நடத்தையைப் பற்றிப் பேசாமல் ' ஈழத்தமிழரின் நன்நடத்தையைப் பற்றிப்' பேசிவிட்டதாக ஒருதோற்றத்தை ஏற்படுதத
முற்படும் போது இனியும் மெளனமாக இருப்பது சரியல்ல என்று கருதினேன். மெளன்ம் எப்போதும் சம்மதத்தைக் குறிப்பதில்லை, மெளனம்
கோபத்தின் வெளிப்பாடாக, வருத்தத்தின் வெளிப்பாடகக் கூட இருக்கலாம் என்றாலும் மெளன்ம் சம்மதம் என்றே இங்கு புரிந்து கொள்ளப்படுகிறது
என்பதையும் நானறிவேன். எனவேதான் இந்தப் பதிவு.
இங்கே நான் பதிவர் பட்டறையில் என்ன பேசினேன் என்பதை verbatium எழுதப்போவதில்லை. பத்ரியின் பதிவில் என் முழுப் பேச்சும்
(விவாதங்களுக்கான பதில்களோடு) ஒலி வடிவில் இருக்கிறது.(http://thoughtsintamil.blogspot.com/2007/08/blog-post_08.html) ஒலிப்பதிவு சுமார்
நாற்பது நிமிடங்கள் உள்ளது. தம்ழகத்தின் பல இடங்களில் இப்போதும் தொலைத் தொடர்பு பிரசினை இருக்கிறது; அங்கு இதைத் தரவிறக்கம் செய்து
படிப்பதற்கு இணைப்பின் வேகம் காரணமாக, நிறையப் பொறுமை வேண்டும்.பலர் அலுவலக் கணினியைப் பயன்படுத்துபவர்கலாகவோ, இணையவிடுதிகளளப் பயன்படுத்துபவர்களாகவோ இருக்கிறார்கள்.மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகள் இல்லாதவர்களுக்கும், ஒலி தெளிவாக இல்லை எனக் கருதக்கூடியவர்களுக்கும், விவாதிப்பவர்களின் தெளிவிற்காகவும், எதிர்காலத்தில் திரிப்புகளுக்கு இடமளிக்காதிருக்கவும், ஏற்பாட்டாளர்களின் பதிவைப் படிப்பவர்களுக்கு நான் நாற்பது நிமிடமும் நான் அரசியல் பேசினேன் என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கக் கூடும், எனவே என்ன் பேசினேன் என்பதை தெரியப்படுத்தவும் பேச்சின் முக்கிய அமசங்களை இங்கே தர முயல்கிறேன்.
அதற்கு முன்பு சில எண்ணங்கள், விளக்கங்கள்:
1. பதிவர் பட்டறையில், நான் ஏதும் உரை நிகழ்தும் எண்ணத்தோடு பதிந்து கொள்ளவில்லை.முழுநேரமும் என்னால் இருக்க முடியுமா என்ற
சந்தேகத்தைக் கூடப் பதிந்து கொள்ளும் போதே தெரிவித்திருந்தேன்.பட்டறைக்கு முந்திய இரவு விக்கி என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு
அழைத்தை அடுத்தே நான் அங்கு பேசினேன். எனவே ஏதும் முன்கூட்டிய தயாரிப்புகள், திட்டங்களோடு நான் போகவில்லை, நுண்ணரசியல்
விளையாட்டிற்கு மேடையைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கம் ஏதும் இருந்திருந்தால் நான் முதலிலேயே பேச விருப்பம் தெரிவித்தோ, அந்த
வகையில் ஒரு உரையைத் தயாரித்துக் கொண்டோ போயிருக்க முடியும்.
2.பட்டறை இரண்டு பிரிவுகளாக நடக்கிறது , ஒன்று பதிவர்களுக்காக், மற்றொன்று பதிவு துவக்க விரும்புபவர்களுக்காக் என்ற எண்ணம் பட்டறையைப்
பற்றி அது நடக்கும் முன் வெளியிடப்பட்டிருந்த இணையப்பகத்தின் மூலம் எனக்கு ஏற்பட்டிருந்தது. அரங்கிலும் அப்படித்தான் நடந்து கொண்டிருப்பது
போல் தோன்றியது.ஒரு கட்டத்தில் இராமகி அய்யா, அங்கு வந்திருந்த, பதிவு துவக்குவதில் ஆர்வம் கொண்டிருந்த ஆனால் பதிவைப்பற்றி ஏதும்
தெரியாத, ஒருவரிடம் 'அய்யா நீங்கள் மேலே (பதிவு துவக்க விரும்பியவர்களுக்கான அரங்கு) போவது நல்லது என்று சொன்னது என் எண்ணத்தை
உறுதி செய்வதாக அமைந்த்து. நான் அமர்ந்திருந்த அரங்கில், விக்கி, பத்ரி, சிவகுமார், செல்லா, தேசிகன், இராமகி, காசி, வெங்கடேஷ், ஆசீப் மீரான்,
தருமி, டெல்பின் விக்டோரியா, திருஞானம், லிவிங் ஸ்மைல் வித்யா, அண்ணா கண்ணன், வளர்மதி, அருணா ஸ்ரீநிவாசன், டோண்டு,சட்டம் குறித்து
எழுதும் சுந்தரராஜன் -வெற்றிச் செல்வன், எஸ்.கே, மீனாக்ஸ்,ரஜனி ராம்கி, க்ருபாஷங்கர்,லக்கிலுக் எனப் பல பதிவர்களைப் பார்க்க முடிந்தது. அறியாத
முகங்ளும் இருந்தன. சரி அவர்கள் எனக்குத் தெரியாத பதிவர்களாக இருக்கும் என்ரு நினைத்துக் கொண்டேன். எனவே நான் பதிவர்களிடம்தான்
பேசப்போகிறேன், பேசிக் கொண்டிருக்கிறேன், என்ற எண்ணத்திலேயே பேசினேன்.
3. ஆரம்பத்தில் அரசியல் பேச வேண்டாம் என்று சொன்ன மாலன், பின் அரசியல் பேசிவிட்டார் என்பதைப் போல ஒரு கருத்து அமைப்பாளர்
சிவக்குமாரின் பதிவில் தொனிக்கிறது. அமைப்பளர்களின் ஒட்டுமொத்த உணர்வைத் தெரிவிப்பதாகக் ரவிசங்கர் கூறும் பதிவு “அரசியல் கொள்கை
விவாதங்களுக்கு இந்த பட்டறை இடமில்லை” என நான் சொன்னதாகத் தெரிவிக்கிறது. அரசியல் என்பது அரசியல் கொள்கையாக மாற்றம்
கண்டிருக்கிறது. உண்மையில் நான் அரசியல் பேச வேண்டாம் எனச் சொல்லவில்லை. பள்ளிக்கூடங்களில் தமிழின் நிலை, மென் பொருட்களை அரசே
இலவசமாக வழங்க வேண்டும், கணினியில் தமிழை உள்ளிடும் வசதியை default ஆக அமைக்க உத்திரவிட வேண்டும் என்பது போன்ற விஷயங்களை
சிலர் எழுப்பி, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிய போது, நம்மால் சாத்தியமில்லாத விஷயங்களைப் பற்றி பேசுவதை விட, பதிவுகள்
பற்றிப் பேசலாம், Policy விஷயங்கள் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கலாமே என்று ராமகி அய்யா தெரிவித்த கருத்தை வழி மொழிந்து பேசினேன்.Policy
என்பது public policy .ஆனால் அரசின் கொள்கை விஷயங்களைப் பற்றிப் பேசுவது அரசியல் என அமைப்பாளர்களாலேயே திரிக்கப்படுவது
வருத்தத்திற்குரியது.
4.இது போன்ற ஒரு மாநாடு நடத்தப்பட வேண்டும் என நான் விரும்பியதுண்டு. சில மாதங்களுக்கு முன் கில்லியின் விருந்தினர் பக்கத்தில் கூட அந்த
விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தேன். " ஒரு அனைத்துலக வலைப்பதிவர்கள் மாநாட்டில் இந்தக் கருத்தையும், வலைப்பதிவுகளை வளர்தெடுப்பதைப்
பற்றியும் அக்கறையோடு அலசலாம், ஜனவரி-பிப்ரவரியில் நாட்டுக்கு ஒருவர் கொண்ட ஒரு steering committeeஐ அமைக்க முடிந்தால் 2007
டிசம்பரில் மாநாடு கூட்டுவது சாத்தியம்தான்.தனிமனித வெளிப்பாட்டு (personal expression) தளமாகத் துவங்கிய ஒன்று ஓர் நிறுவனமாக
(institutionalise) ஆகிவிடுவதற்கான சாத்தியக் கூறு ஒன்றுதான் இது போன்ற கூட்டங்களின் எதிர்மறையான அம்சம். ஆனால் நிழல் இல்லாத நிலவு
இல்லை" (http://gilli.in/tamil-blogs-gilli-guest-column-by-maalan/) இதை எழுதும் போது 'நான் சொல்லித்தான் இந்த பட்டறை நடந்தது' என்று நான்
சொன்னதாக நாளை யாரேனும் திரிக்கக்கூடும் என்று அஞ்சுகிறேன். அல்லது நான் பங்களிக்காத மாநாட்டிற்கு உரிமை கொண்டாடினேன் என்றும் சிலர்
புறணி பேசக்கூடும். எனவே ஒரு disclaimer: நான் இந்த பட்டறையின் அமைப்புப்பணியிலோ, நிரல்கள் தயாரிப்பிலோ எந்த வகையிலும்
பங்கேற்கவில்லை. ஒரு சிறிய் நன்கொடையைத் தவிர என் பங்களிப்பு ஏதுமில்லை. அதுவும் கூட பட்டறையின் இணையப்பக்கத்தில்
அமைப்பாளர்களால் பதிவு செய்ய்ப்படவில்லை. அதைக் குறித்து எனக்கு கவலையும் இல்லை)
எனவே எனக்கு பட்டறை குறித்து ஓர் இயல்பான ஆர்வம் இருந்தது. அதற்கு தார்மீக ஆதரவளிக்க வேண்டும் என்ற உந்துதலும் இருந்தது. ஆனால்
பணிநிமித்தம் தில்லி திரும்ப வேண்டிய சூழ்நிலையும் இருந்தது. ஆனாலும் அந்தப் பணியை என் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு சற்று ஒத்தி
வைக்கச் சொல்லிவிட்டு (அதனால் பலருக்கு அசெள்கர்யம் ஏற்பட்டிருக்கும்) பட்டறையில் கலந்து கொண்டேன் (இதை ஏதோ என்னைப் பற்றிய ஒர்
உயர்ந்த அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதற்காக இப்போது சொல்லவில்லை. பட்டறைக்கு வந்திருந்த சிலரிடம் அங்கேயே பகிர்ந்து கொண்டிருந்தேன்)
ஆனால் இப்போது பின்னோக்கிப் பார்க்கும் போது இந்த முடிவிற்காக வருத்தமே மேலோங்குகிறது.கடைசி நிமிடத்தில் என்னைப் பேச் அழைத்தும்
அமைப்பாளர்கள்,மீதிருந்த மரியாதையின் காரண்மாக, தட்டிக் கழிக்காமல் ஒப்புக் கொண்ட எனக்கு அவர்கள் நன்றி சொல்லவிட்டாலும் போகிறது, என்
பேச்சைப் பற்றிய ஒரு தவறான அபிப்பிராயத்தை அவர்கள் ஏற்படுத்த முனைகிறார்களே அந்த மனங்களுக்கு நன்றி.
இனி என் பேச்சின் சாரம்: 1. நன்னடத்தை என்ற சொல்லில் எனக்கு உடன்பாடில்லை. அது ஏதோ பள்ளிப்படிப்பு முடிந்து போகும் போது தலைமையாசிரியர் கொடுக்கும் contact
certificate போல தொனிக்கிறது. சில நெறிகள், சுய ஒழுங்குகள் என்று வைத்துக் கொள்ளலாம்
2. மற்றெந்த ஊடகங்களுக்கும் இல்லாத ஒரு சிறப்பு வலைப்பதிவுகளுக்கு உண்டு.வலைப்பதிவுகளின் மிகப் பெரிய கொடை, தனித் தன்மை, ஒரு
விஷயத்தை வெளியிட்ட உடனே பலர் எதிர்வினையாற்றுவது. டைடானியம் டை ஆக்ஸ்டை தொழிற்சாலை குறித்து தினமணி ஒரு கட்டுரை
வெளியிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதைக் குறித்து மாற்றிக் கருத்துடைய ஒருவர் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதமும்
பிரசுரம் ஆகிறது. ஆனால் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு ஒருவர் மாற்றுக் கருத்து தெரிவிக்க விரும்பி கடிதம் எழுதினால் அதற்குள்
நாட்கள் கடந்திருக்குமாதலால் அது வெளிவருவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. பலர் ஒரே நேரத்தில் பலருடன் எதிர்வினையாற்ற வாய்ப்பளிக்கும் ஒரே
ஊடகம் வலைபதிவுகள்தான். இந்த வாய்ப்பு சினிமாவிலோ, தொலைக்காட்சியிலோ, இணைய இதழ்களிலோ கிடையாது. ((Many to Many
communication)
3.வலைப்பதிவுகள் ஏன் வேண்டும் என்று சமூகக் கோணத்தில் பார்த்தால், நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் குறித்து ஒரு கருத்தை,
அபிப்பிராயத்தை வெளியிட அது உதவுகிறது. ஒரு கருத்து என்பதே ஒன்றின் மீதான Critical Judgemenதான் என்பதால், ஒரு சமூகத்தில் Critical
Judgement அதிகமாகும் போது, ஆளுகை (Governance) கலாசாரம் தொடர்பான விஷயங்களை விவாதத்திற்குள் கொண்டு வர முடியும். அது
நிலையை மாற்ற உதவும். அதனால் வலைப்பதிவுகள் ஊக்குவிக்கப்பட வேண்டிய ஒரு ஊடகம்.
4.நாம் வாழ்கிற காலத்தில் ஒரு கருத்துதான் சரி,லொரு நிலைதான் சரி என்று முடிவளுக்கு வரமுடியாத சூழல் நிலவுகிறது.This is Black, This is
white என்று முடிவுக்கு வரமுடியாமல் எங்கும் சாம்பல் பூத்துக் கிடக்கிறது. பல்வேறு பரிமாணங்களப் பகிர்ந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு இந்த
ஊடகத்தில் கிடைக்கிறது.
5 ஆனால் வலைப்பதிவுகள் குறித்து நிறைய தவறான புரிதல்கள் இருக்கின்றன
6.வலைப்பதிவுகளில் எழுதுபவர்கள் யார் என்று பார்த்தால், இப்படி ஒரு தொழில் நுட்பம் வந்திருக்கிறது, அதில் என் மொழி இடம் பெற வேண்டும்
என்ற ஆர்வம் கொண்டவர்கள், மற்ற் ஊடகளில் ஆசிரியர் என்று ஒருவர் இருக்கிறார், அவர் நான் எழுதியதைச் சிதைக்கிறார், சுருக்குகிறார், தணிக்கை
செய்கிறார் அதை ஏற்க முடியாது என்று கருதுபவர்கள்,ஒரு குறிப்பிட்ட விஷயம், நிலை பதிவு செய்யப்பட வேண்டும் என்று கருதுகிறவர்கள், உலகம்
முழுதும் தேடல் வாய்ப்புக் கொண்ட ஒருசாதனம் அதனால் இது பதிந்து வைக்கப்பட வேண்டும் என நினைப்பவர்கள் வலைபதிவுகளை
எழுதுகிறார்கள்.தமிழ் வலைப்பதிவர்களின் சராசரி வயது என்று பார்த்தால்,- சிவஞானம்ஜி, ராமகி அய்யா, என்னையும் சேர்த்து, சில வயதில் மூத்த
பதிவர்கள் இருந்தாலும் கூட- 25-30 இருக்கலாம். சமூகத்தில் பெரும்பாலும் அந்தத் தலைமுறையின் கருத்து காது கொடுத்துக் கேட்கப்படுவதில்லை.
ஆனால் அதற்கு வலைப்பதிவுகள் இடமளிகிறது என்பதால் அது வரவேற்று வலுப்படுத்தப்பட வேண்டிய ஊடகம்.
7 ஒருவர் தனியாக வலைப்பதிவு எழுதும் போது பிரசினை ஏதும் இல்லை.அது ஒரு திரட்டியின் மூலம் திரட்டப்படும் போது அது ஒரு பொது
அரங்கமாக ஆகிறது.
8. வலைப்பதிவுகள் பற்றிய கற்பனைகளில் ஒன்று அது கட்டற்ற சுதந்திரம் கொண்டது என்பது. கம்யூனிகேஷன் என்பதில் கட்டற்ற சுதந்திரம்
கிடையாது, இருக்க முடியாது. மொழி மூலமாக வெளிப்படுத்துவது என்னும் போதே சில விதிகளுக்கு உட்படுகிறீர்கள்.அதன் இலக்கணம் சார்ந்து
எழுதுகிறீர்கள்.இரண்டு பஸ்கள் மோதிக் கொண்டது என்று எழுத முடியாது. மோதிக் கொண்டன என்றுதான் எழுத வேண்டும். I is coming என்று எழுத
முடியாது. I am coming You is going அல்ல. You are going. நீங்கள் ஏற்றுக் கொண்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் வெளிப்படுத்துகிறீர்கள்.
9.வலைப்பதிவுகள் திரட்டப்படுவதின் காரணமாக சில பின்விளைவுகள், சில பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. ஆரம்ப நாட்களில் எந்தப்பதிவிற்கு அதிகம்
பின்னூட்டங்கள் வருகிறதோ அது அதிகம் கவனிக்கப்படும் பதிவு என்று கருதப்பட்டது. உலகமே என்னை கவனித்துக் கொண்டிருக்கிறது, நான்
எழுதுவதற்கு உலகமே எதிர்வினையாற்றுகிறது என்று ஆரம்ப எழுத்தாளர்களுக்கு ஏற்படும் மனோபாவம் நிலவியது. அந்த பிரமை காரணமாக,
பின்னூட்டங்களை அதிகப்படுத்த வேண்டும் என்ற மனோபாவம் வந்தது.
அன்று 50 பதிவுகள் இருந்தன, அநேகமாக ஒருவர் எல்லாப்பதிவுகளையும் படித்துவிடக்க்கூடிய நிலை இருந்தது, இன்று 2000 பதிவுகள். அதில் 1000
பேராவது எழுதுகிறார்கள்.இதில் தன்பதிவு கவனிக்கப்பட வேண்டும் என்பதற்க்காக அச்சுப் பத்திரிகைகளின் மலிவான உத்திகள்
பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றால் வலைப்பதிவுகளின் இயல்புகளில், சாத்தியங்களில் திரிபுகள் ஏற்படுகின்றன.அதைக் குறித்து வலைப்பதிவர்கள் கவலையோடு சிந்திக்க
வேண்டும்.
10. கட்டற்ற சுதந்திரம்:
ஒரு தனி மனிதராக இருக்கும் வரை சுதந்திரத்திகுக் கட்டுக்கள் கிடையாது. ஒன்றுக்கு மேற்பட்டவர்களாக ஆகிறபோது சில கட்டுப்பாடுகளுக்கு
உட்பட்டாக வேண்டியிருக்கிறது. தனியாக இருக்கும் போது ஒருவர் நிர்வாணமாகக் கூட இருக்கலாம். ஆனால் வீட்டில் இன்னொருவர் இருந்தால், அது
அம்மாவோ, சகோதரிகளோ, குழந்தைகளோ, ஏன் மனைவியாக இருந்தால் கூட ஒரு பெர்முடாவாவது போட்டுக்க்கொண்டுதான் அலைய
வேண்டியிருக்கிறது. வீட்டை விட்டு வெளியே வரும் போது அதற்குத் தகுந்த மாதிரி உடை அணிய வேண்டியிருக்கிறது. ஒரு சமூகத்தில் ஒன்றுக்கு
மேற்பட்டவர்களோடு சேர்ந்து இயங்கும் போது சில நெறிகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எப்படி ஒரு மொழியை சில
நெறிகளுக்குட்பட்டு வெளிப்படுத்துகிறோமோ அது போல நம் வெளிப்பாடு சில நெறிகளுக்குட்பட்டு இயங்க வேண்டியிருக்கிறது. எனவே எந்த
ஊடக்மும் கட்டற்ற ஊடகமாக இருக்க முடியாது. அப்படி இருக்க வேண்டும் என்பது நம் விழைவு.
11. யாருக்கு சுதந்திரம் அதிகமோ அவர்களுக்குப் பொறுப்பும் அதிகம். எனவே யார் அதிகம் சுந்த்திரம் வேண்டுமென விரும்புகிறார்களோ அவர்கள்
அதற்கான பொறுப்பையும் எடுத்துக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
12. மற்றவர் கோணத்திலிருந்து ஒரு விஷயத்தைப் பார்க்கும் மனநிலையைப் பலர் அடையவில்லை. அது நம்மிடம் இல்லை. வலைப்பதிவுகள் அதை
உடைக்க முடியும் திறந்த மனோபாவத்திற்கு நம்மை இட்டுச் செல்ல முடியும். அப்படி இல்லை என்பதில் வருத்தம்.நாம் சில அடிப்படைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். என் பதிவில் எழுதப்பட்டுள்ளவற்றிற்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களை அனுமதிக்க
மாட்டேன்.ஒரு தனிப்பட்ட நபரைத் தாக்கியோ, விமர்சித்தோஎழுதும் கருத்துக்களைநான் வெளியிட மாட்டேன் என்பது போன்ற ஒரு நெறி, சில சுய
ஒழுங்குகளை, ஏற்றுக் கொள்ளலாம். இது நன்னடத்தை அல்ல, விதி அல்ல, கட்டுப்பாடு அல்ல. ஒரு சமூகமாக நாம் இயங்கும் போது நாம்
மேற்கொள்ள வேண்டிய சில சுயக் கட்டுப்பாடுகள்.
இதுதான் நான் பேசியதின் சாரம். இதில் நான் எங்கும் எந்த ஒருவரையும் தனிப்பட விமர்சித்துப் பேசவில்லை. இதில் எதை நுண் அரசியல்
விளையாட்டு என அமைப்பாளர்கள் கருதுகிறார்கள்?
இதன் பின் விவாதங்கள் துவங்கின.
அரவிந்தன் முதல் கேள்வியைக் கேட்டார்:" Moderated Blogலேயே ஆபாசப் பின்னூட்டங்கள் அதிகமாக இருக்கிறது.இந்த மனநிலையைப் பற்றி என்ன
நினைக்கிறீர்கள்?" என்பது அவர் கேள்வி.
நான்:பின்னூட்டம் என்பது alcohol மாதிரி.சோர்வாக இருக்கும் போது உற்சாகம் தர உதவலாம். ஆனால் அதுவே அள்விற்கு மேல் போனால்
போதையாகி, ஒருவித halucination ஏற்பட்டு, எல்லாம் நல்லா இருக்கு என்ற செயற்கையான மனோபாவத்திற்கு இட்டுச் செல்லும். சுய ஒழுங்கு
இருந்தால் இதை மட்டுப்படுத்திவிடலாம்.
இந்த ஊடகத்தைப் பற்றி அல்ல, இன்னொரு ஊடகத்தைப் பற்றி என்று செல்வா அடுத்த கேள்வியை எழுப்பினார்: "ஐரோப்பிய சினிமா போல்
தமிழிலிருந்து தணிக்கையைத் தூக்கினா என்ன ஆகும்? இப்போ என்ன பண்ணிக் கொண்டிருக்கிறோம் என்றால், நெல்லை எடுத்துக் கொண்டு
அதிலகொண்ஜம் உமியைக் கலந்து, அரிசியையும் கலக்கிறோம்.சென்சார்ல எந்த அளவிற்கு இருந்தால் கட் பண்ணக் கூடாதோ அந்த அளவிர்குக்
காண்பித்துக் கொண்டிருக்கோம். ஐரோப்பா மாதிரி சென்சாரையே தூக்கிட்டா என்ன ஆகும்? ஒரு பக்கம் frivolus movie போய்க்கிட்டிருக்கும். இன்னொரு
பக்கம் முன்னுதாரணப் படங்கள் வருமா, வராதா? இரண்டையும் கலந்து கொடுக்க வேண்டிய தேவை இருக்காது. இது ஒரு ரிஸ்க்தான். ஒரு சமூகத்தில
கோவிலும் சாராயமும் இருக்கிற மாதிரி.அவங்க அவங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கலாம். Pluralistic Society ங்கிறதை இணையத்தில்தான்
பார்க்க முடிகிறது.அதை regularise பண்றதுங்கிறது ஒரு ரிஸ்க்"
நான்: நான் (கருத்தை) ரெகுலரைஸ் பண்ணுவதைப் பற்றிச் சொல்லவில்லை.உலகம் பூராவும் இன்று ஊடக்த்தொழில் எதை நோக்கிப் போகிறது
என்றால்.....முன்பெல்லாம் ஆனந்த விகடனில் ஒரு கிரைம் கதை, ஒரு சிறுகதை, ஒரு ஆன்மீகக் கட்டுரை, ஒரு அரசியல் கார்ட்டூன், இப்படி எல்லாம்
ஒரே இதழ்ல வரும்.இப்போது, த்னிமனிதனது பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு நாணய விகடன், விவசாயத்திற்கு பசுமை விகடன், என்று ஒவ்வொரு
துறைக்கும் தனித் தனி இதழ்கள் வருகின்றன. இதை niche journalsனு சொல்வோம். வாச்கர்கள் எண்ணிக்கை அதிகரித்து, தொழில்நுட்பம் காரனமாக
cost of production குறைந்திருப்பதால் இது சாத்தியமாகிறது. ஈனையத்தின் மிகப் பெரிய வசதி எல்லாவற்றிற்கும் தனித் தனி தளம் உருவாக்கிட
முடியும். தமிழ் உலகம் என்று ஒரு மடலாடற்குழு இருந்தது. அதில் ஒருவர் ஆன்மீகம் பற்றித்தான், அதிலும் சைவ சித்தாந்தம் பற்றி மட்டுமே
எழுதுவார்.கருத்து என்னவாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பேசவில்லை.அந்த contentஐக் கொடுக்கக் கூடியவர்கள் தங்களுக்கென்று சில
ஒழுங்குகளையும் வைத்துக் கொள்ள் வேண்டுமா வேண்டாமா என்பதுதான் கேள்வி.
இந்தக் கூட்டத்தை 9:30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அதனால் எல்லோரும் 8:30க்கு வந்து விட வேண்டும் என்று
சொல்கிறீர்கள். அப்போது அந்த இடட்தில் ஒரு norm விதிக்கிறீர்கள். இது கட்டற்ற கூட்டம், யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானலும்
வரலாம் என்றால் ஒருவர் பனிரெண்டு மணிக்கு வந்து முதலில் இருந்து ஆரம்பித்து தமிழிணைய வரலாறு சொல்லுங்கனு கேட்கிறார். ஒரு குழுவாக
செயலபடும் போது சில norms, better performance of the groupக்காக தேவைப்படுகிறது.
மாலனின் கருத்தை வழி மொழிந்து பேசுகிறேன் என்று ஆரம்பித்தார் வளர்மதி.Internet Explosionனு சொல்வாங்க. ஆனால் அது Explosion அல்ல,
implosion. Implosionக்கு உதாரணம் சூரியன். அது உள்ளுக்குள்ளேயே வெடிக்கும். அதன் side effect ஆகத்தான் energy radiate ஆகிறது. அதே மாதிரி
இணையம். கட்டற்ற மீடியமாக அது இருந்தாலும், அது அதனுடைய effect தானே தவிர essence அல்ல.
அதில் direct interaction கிடையாது. Physical interaction இல்ல்ங்கிற்துனால, emotional ஆ interacட் பண்றது இல்லை. நேரில் ஒருவர் நீங்க வாங்க
என்ரு சொன்னால் நானும் பதிலுக்கு வாங்க என்று சொல்வேன்.நீங்க ஏய்னு சொன்னா நானும் ஏய்னு சொல்வேன். எழுத்து மூலமா interact செய்யும்
போது ஏய்னு சொன்னா கேள்வி வருது. என்ன தப்பா சொல்லிட்டோம் ஏன் இவர் ஏய்னு சொல்றார்னு கேள்வி தோணுது.அதனால ஒரு time lag
ஏற்படுது.இந்த time lag ஏ beat பண்ணனும், அதுinteractionக்கு இருக்கக் கூடிய Basic need. அந்த சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளணும். அது
கட்டுப்பாடு இல்லை.தோட்டத்தில புல்லு வளர்க்க்றீங்க,. அதோட் களையும் வளருது.புல்லு வளரும்னா களையை எடுக்கணுமா வேண்டாமா?
நான்: தனிப்பதிவாக இருக்கும் வரைக்கும் பிரசினை இல்லை. பதிவுகள் ஒரு திரட்டியின் மூலம் திரட்டி வாச்கர்கள் முன் வைக்கப்படும் போது, திரட்டி
நிர்வாகிகளுக்கு ஒரு பொறுப்பு வேண்டுமா, வேண்டாமா? Many to many communicationlல் வெவ்வேறு levelல் இருப்பவர்கள் interact செய்கிறார்கள்.
WTOவை அடுத்து 60 சட்டங்கள் நிறைவேறின. விவசாயிகளை பாதிக்கக் கூடிய சட்டங்கள். Science based acts ஆனால் விவசாயிகளைப் பாதிக்கக்
கூடியவை. Seeds act என்று ஒன்று. அதைப்போல ஒரு draconian act கிடையாது.இந்தச் சட்டங்கள் பற்றி சில வக்கீல்கள் பதிவு எழுதுகிறார்கள்.
அதற்கு ஒரு பின்னூட்டம் வருகிறது. 'ஏன்யா இதைப்பற்றியெல்லாம் எழுதிக்கிட்டு இருக்க, ரஜனி, ஸ்ரேயா பற்றி எழுதினாலும் நாலு பேர் படிப்பாங்க"
என்று. இரண்டு levelல் இருப்பவர்களிடையே communication, even ஆக இருக்க முடியாது. நீங்களே பின் நவீனத்துவம் பற்றி பதிவு எழுதுகிறீர்கள்.
பின் நவீனத்துவம் தெரிந்தவர்களுக்கு அது குறித்து மாற்றுக் கருத்து இருந்தால் எழுதுகிறார்கள், பின் நவீனத்துவம்னா என்னவென்றே தெரியாத
ஒருவர் வந்து ஏன்யா இதெல்லாம் எழுதறனு பின்னூட்டம் போட்டால் அங்கே கருத்து சுதந்திரம் எங்கே இருக்கிறது? வலைப்பதிவுல எழுத வந்தவங்க
வலைப்பதிவை விட்டுப் போனதற்கு என்ன காரணம்? நம் கருத்துக்களை இங்கே வைக்க முடியாது, அதைப் புரிந்து கொள்ள் மாட்டார்கள், நாம ஏதோ
சுவர்கிட்ட பேசிக்கிட்டு இருக்கோம், அதற்கு பேசாமல் இருக்கலாம் என்று தோன்றியிருக்க வேண்டும்.
ஒரு கருத்தை வைப்பதற்கு அச்சமோ, தயக்கமோ தோன்றுமானால் அந்த இடத்தில் சுதந்திரம் இல்லை. அச்சம் உள்ள இடத்தில் சுதந்திரம் இருக்க
முடியாது.என்ன நடக்கிறது? Sanctity என்பது எதற்கும் கிடையாது.எதுவுமே புனிதமானது அல்ல என்பது வலைப்பதிவுகளில் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு
கோண்த்தில் அது நல்லது. ஆனால் இன்னொரு கோணத்தில் ஏற்கனவே இருந்து கொண்டிருக்கக் கூடிய் institutionsஐ - உதாரணமா பெரியார்
இருக்கிறார்- அவரை denigrate செய்வதுமாதிரியான பின்னூட்டம் வந்தால் அதை எப்படி ஏற்க முடியும்? அவர் சமூகத்தில் பல விளைவுகளை
ஏற்படுத்தியவர்; சிலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். பெரியார் கருத்துக்களை வேண்டுமானால் மறுத்து எழுதலாம். ஆனால் அவரைத் தனிப்பட்ட
முறையில் தாக்கி எழுதுவதை எப்படி ஏற்க முடியும்?
இங்கே பதிவர்கள்தான் இருக்கிறீர்கள். மனம் விட்டுப் பேசலாம். பெயரிலி ஒரு பதிவில் பின்னூட்டம் போடுகிறார்.ராமினுடைய மகள்
அமெரிக்காவிற்குப் போய் ஜ்ர்னலிசம் படித்து அதில் ராங்க வாங்கியதை விமர்சனம் செய்து எழுதறாரு.அவருக்கும் ராமிற்கும் பிரசினை. ஆனால் ராமின்
பெண் என்ன செய்தார்? மார்க்சிஸ்ட்டா அறியப்பட்டவருடைய பெண் எப்படி அமெரிக்காவில போய் படிக்கலாம்னு கேட்டா?
யதார்த்த வாழ்க்கையில, நேர் முரணான கருத்து உடையவர்களோடு ஏதோ ஒரு விதமான உறவு வைத்துக் கொண்டுதானே இருக்கிறோம்? பெரியார்
அவருடைய மணத்தைப் பற்றி ராஜாஜி ஒருவருக்குத்தானே கடிதம் எழுதி விவாதித்தார்? இரண்டு எதிர் எதிர் கருத்து நிலை உள்ளவர்கள், ஒரு
குறிப்பிட்ட விஷயத்திற்காக ஒருவரோடு ஒருவர் interact செய்ய முடியாதா? இந்தியா இலங்கைப் பிரசினையில் தமிழருக்கு ஆதரவான நிலை
எடுக்கவில்லை. ஆனால் இந்தியாவிற்கு வரத்தானே போகத்தானே செய்கிறர்கள்? இலங்கை அரசை எதிர்த்துத்தான் இலங்கைத் தமிழர்கள்
போராடுகிறார்கள். ஆனால் இலங்கை பாஸ்போர்ட்ல தானே வெளியே போறாங்க? இது எதிர் எதிர் நிலையில் இருப்பவர்கள், தனிப்பட்ட முறையில்
கொள்கிற உறவு.
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்குத் தெரியும், அவற்றிற்கும் அரசாங்கம் எடுக்கிற நிலைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.அவை
முதலாளித்துவத்தை பிரசாரம் செய்யக் கூடியவையும் கிடையாது.சீனாவை அமெரிக்காவே Most Favoured Nation என்று அறிவித்துவிட்ட பிறகு,
சீனாவை ஆதரிக்கும் ஒருவருடைய மகள், அங்கே போய் படிப்பதில் என்ன முரண்பாடு இருக்கிறது?
இதெல்லாம் தவிர, இது பதிவில் சொல்லப்பட்டிருந்த விஷயத்திற்கு சம்பந்தமில்லாத விஷயம்.....
(மாலன் சார் என்ரு சிவக்குமார் குறுக்கிட நான் பேசுவதை நிறுத்திக் கொண்டேன்.)
.

47 comments:

வவ்வால் said...

மாலன் ,

வலைபதிவு பட்டறையில் நீங்கள் அவ்வாறு பேசியதை தவிர்த்திருக்கலாம் , உங்களுக்கு அப்படி ஏதேனும் கூற வேண்டும் என்று தோன்றி இருந்தால் அதனை ஒரு பதிவாக போட்டு இருக்கலாமே!

இப்போது பாருங்கள் தேவையற்ற சர்ச்சை , தளைகள் அற்ற சுதந்திரம் குறித்து பேசும் வலைப்பதிவர்கள் இதையும் அனுமதிக்கலாமே என்று, ஆனாலும் இப்படி ஒரு பட்டறையில் அதுவும் முதன்முறையாக பெரிய அளவில் நடைபெரும் போது பேசுவது ,அசந்தர்ப்பமான ஒரு உரையாக முடிந்து விட்டது! அங்கு இல்லாத ஒருவரைப்பற்றி பேசியதால் என்னவாயிற்று, விதண்டாவாதங்கள் பெருகியது தான் மிச்சம்!

கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு ... நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் அதை பேச என்று ஒரு களம் இருக்கிறது , அது உங்கள் பதிவு. அங்கே பேசலாம் ,எல்லோரும் வருவார்கள் விவாதிக்க! ஆனால் எல்லோரும் கூடி ஒரு புதிய பரிமாணம் பார்க்க துடிக்கும் நிகழ்வில் பேசியது தான் சர்ச்சைக்கு வித்திட்டது!

இப்போது இது ஒன்றும் கொழுந்து விட்டு எரியும் பிரச்சினை அல்லவென்ற போதிலும் இதனை மனது வைத்தால் நீங்களே முடித்தும் வைக்கலாம்!

உங்கள் ஊடகவியல் அனுபவத்திற்கு முன்பு நான் எல்லாம் சாதாரணம் தான் ஆனால் வலைப்பதிவில் இருக்கும் ஒருவன் என்ற முறையில் என் கருத்தை தெரிவித்துள்ளேன். விருப்பம் இருப்பின் வெளியிடலாம்!

முகமூடி said...

மாலன்... என்ன நடக்கிறது என்பது படிப்பவர்களுக்கு நன்றாகவே புரிகிறது. புரிந்தவர்கள் பேசுவதில்லை. நேரமில்லாமல் சிலர், பிரயோசனமில்லை என்பது புரிந்ததால் பலர். புரியாதவர்களிடம் புரிய வைக்க நீங்கள் முயற்சிக்கலாம். ஆனால் இங்கு பேசுபவர்களில் - பொன்ஸ் பூர்ணா போன்ற 'தார்மீக மன்னிப்பு' கேட்ட சிலரை தவிர - பெரும்பாலானோர் புரியாமல் பேசுவதாக தோன்றவில்லை. தமிழ்சசி உள்ளிட்ட 'பேசுபவர்கள்' என்னதான் பசுத்தோலை போர்த்திக்கொண்டு பேசினாலும் - ஈழத்தமிழர்கள் பாஸ்போர்ட்டுக்கும் இந்தியர்களின் பச்சை அட்டை "அலைவதற்கும்" முடிச்சு போட்டு அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் அமர்ந்து பேசுவதின் - பின்னாலுள்ள நோக்கம் நன்றாகவே தெரிகிறது. எனவே "இனி என் பேச்சின் சாரம்:" என்பதற்கு முந்தைய பத்தியிலேயே உங்களின் இந்த பதிவு முடிந்திருக்கலாம் என்பது எனது மென்மையான அபிப்பிராயம்.

யாருக்கும் உபயோகமில்லாத ஒரு பி.கு: தமிழ்சசியின் பதிவை படித்தவுடன் சிரித்துவிட்டு நான் எழுத ஆரம்பித்த இடுகை கால்வாசி தாண்டாமல் - நேரமின்மையால் - அப்படியே நிற்கிறது. அது முழுமையாகாமலேயும் போகலாம்.. முழுமையானாலும் ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்று குப்பைக்கு போகலாம் (ஆனா நிரந்தரமா சூடாவே வச்சிருப்பாங்க போலருக்கே நிலைமைய பாத்தா)

commenter said...

போதிக்க மட்டுமா நீங்கள்? போதனைக்கு பின்னான கேள்விகளுக்கு யார் பதிளளிப்பது?

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

மாலன்,

ராம் மகள் பற்றி எந்தத் தரக்குறைவான தாக்குதலும் இங்கு நடந்ததாகத் தெரியவில்லை. ராம், பத்திரிக்கையாளராக, சமூகத்தில் கருத்துருவாக்கங்களை உருவாக்கவல்லவராக பொது வாழ்வில் இருக்கும் பட்சத்தில் அவருடைய சொற்களும் தனி வாழ்க்கைச் செயல்பாடுகளும் பொருந்திப் போகிறதா என்று கேட்டுத் தெளிய ஒருவருக்கு உரிமை உண்டு. ராம் ஒரு மார்க்சியவாதி. ராமின் மகள் அமெரிக்காவில் படிக்கிறார். இதற்கு மேல் ஒரு வரி கூட்டியோ குறைத்தோ அவர் மகளைப் பற்றியோ ராமைப் பற்றியோ தரம் குறைந்த சொற்களால் தாக்குதல் ஏதும் இல்லை. இவை இரண்டும் முற்றிலும் உண்மை. இருவரையும் தனித்தனியாக எந்த விதத்திலும் தரக்குறைவாகக் காட்டாத உண்மை. இவற்றை ஒன்றாகச் சுட்டிக் காட்டுவதில் எந்தத் தனி நபர் தாக்குதலும் இருப்பதாகத் தெரியவில்லை. இவற்றில் உள்ள முரண், உண்மையை வாசகர் எளிதாகவே உணர்ந்து கொள்ளலாம்.

நீங்கள் சொல்வது போல் ராம் மகள் அமெரிக்காவில் படிப்பது ராமின் கொள்கைகளுக்கு முரணானதாக இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால், அதைத் தெளிவுபடுத்தி இருக்க வேண்டும், இல்லை, அது அவருடைய மகளின் தெரிவு. ராம் தன் கொள்கைகளை அவர் மேல் திணிப்பதில்லை என்றாவது சொல்லி இருக்கலாம். இவற்றை விட்டு விட்டுத் தனி மனிதத் தாக்குதல் என்று கேள்வி கேட்டவர் மேல் பாய்வது ராமைச் சுற்றி புனித பிம்பம் எழுப்பும் முயற்சியே. இது பொது வாழ்வில் இருப்பவர் தன்னை நோக்கிய நியாயமான கேள்விக்குப் பதில் சொல்லாமல் தட்டிக் கழிப்பதாகத் தான் இருக்கும்.

தமிழ்ப் பதிவுலகில் பதிவில், பின்னூட்டத்தில் தனி நபர் தாக்குதல் என்பதற்கு எண்ணற்ற extreme எடுத்துக்காட்டுக்கள் உண்டு. ராம் மகள் குறித்த கேள்வி இந்த விசயத்துக்கு ஒரு பொருந்தா எடுத்துக்காட்டு என்று தான் சொல்வேன்.

இந்த ராம் மகள் விவகாரத்துக்கு இணையாக நீங்கள் சுட்டிக் காட்டும் முரண்கள் அபத்தத்தின் உச்சகட்டமாக உள்ளன. உயிருக்குப் பயந்தோ கட்டாயத்தின் பேரிலோ எதிர்ப்பாராமலோ ராம் மகள் அமெரிக்காவுக்குச் செல்ல வில்லை. It's a free and voluntary decision.

ஆனால், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு எல்லாரும் சுற்றுலா பயணியாகவோ பொருள் தேடவோ வரவில்லை. உயிருக்குப் பயந்து அகதிகளாக எண்ணற்றோர் வருகின்றனர். இந்தியா உங்களை ஆதரிக்கவில்லை, நீங்கள் ஏன் இங்கு வருகிறீர்கள் என்றால் சுற்றியும் கடல் சூழ்ந்த தீவில் இருந்து தப்பிப் பிழைப்பவர்கள் இந்தியாவுக்கு வராமல் ஜப்பானுக்கா செல்வார்கள்? இல்லை, கடலில் குதித்து இறப்பார்களா? இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைக்கு அப்பாற்பட்டு குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட இல்லாததாகத் தான் இந்த வாதம் இருக்கிறது. இந்தியா ஈழத்தமிழருக்கு ஆதரவில்லை என்று உங்கள் கூற்றின் படி பார்த்தால் அது சிங்களவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதா? இல்லை, நடுநிலையை எடுத்துள்ளதா? நடுநிலை தான் என்றாலும் ஏன் ஈழத்தமிழர் இந்தியாவுக்கு வரக்கூடாது? இதையும் நீங்கள் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.

ஈழத்தவர்கள் கடவுச்சீட்டு குறித்த உங்கள் கேள்விக்குப் போதுமான அளவே பதிவுலகில் பதில் தந்துவிட்டார்கள் என்பதால் அதை விவரிக்காமல் விடுகிறேன்.

மாலன் said...

அன்புள்ள வவ்வால்,


>>உங்களுக்கு அப்படி ஏதேனும் கூற வேண்டும் என்று தோன்றி இருந்தால் அதனை ஒரு பதிவாக போட்டு இருக்கலாமே<<

பட்டறையில் பதிவர் நன்னடத்தை பற்றி பேசுமாறு அழைப்பு விடுத்ததையடுத்துதான் நான் தமிழ்ப்பதிவுலகில் நடந்து அவ்ரும் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினேன். அதில் இதுவும் ஒன்று. நான் பேசிய விஷயம் நன்னடைத்தைக்குத் தொடர்பற்றதா?

உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

ஒருவரது கருத்திலிருந்து மாறுபடும் மற்றொருவர் அவரது குடும்ப உறுப்பினரைக் குறிப்பிட்டு எழுதுவது நன்நடத்தை அல்ல என்று நான் கருதுகிறேன். மாற்றுக் கருத்துக் கொண்டவரது கருத்தை விமர்சிக்கட்டும். அதில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டட்டும்.ஏற்க முடியாதென்றால் அதை நிராகரிக்கட்டும்.அதை மீறி அவரைத் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது தவறு. அதையும் தாண்டி அவரது குடுமப உறுப்பினரது செயல்களைக் குறிப்பிட்டு விமர்சிப்பது தவறு.

இவை தவறு என்று ஏற்கறீர்களா என அறிய விரும்புகிறேன்.

>>ஆனாலும் இப்படி ஒரு பட்டறையில் அதுவும் முதன்முறையாக பெரிய அளவில் நடைபெரும் போது பேசுவது ,அசந்தர்ப்பமான ஒரு உரையாக முடிந்து விட்டது<<

பதிவர்கள் மத்தியில் பேசுவதாக எண்ணிக் கொண்டுதான் பேசினேன் என்பதை ஏற்கனவே விளக்கியிருக்கிறேன்.பதிவர்கள் குறித்த பிரசினையை பதிவர்கள் மத்தியில் பேசாமல் வேறு எங்கேயாவது, பத்திரிகையிலோ, தொலைக்காட்சியிலோ பேசியிருந்தால் அது வேண்டுமானால் அசந்தர்ப்பம் என்று சொல்லலாம்.
>>அங்கு இல்லாத ஒருவரைப்பற்றி பேசியதால் <<
ராம் மீதும் ராம் மகள் மீதும் அவர்கள் இல்லாத இடத்தில்தான் கருத்துச் சொல்லப்பட்டது. அப்படி அவர்கள் இல்லாத இடத்தில் பெயரிலி கருத்துச் சொன்னது தவறு என்று ஏற்கிறீர்களா? அது தவறில்லை என்றால் இதுவும் தவறில்லை.இது தவறு என்றால் அதுவும் தவறு.

>>இதனை மனது வைத்தால் நீங்களே முடித்தும் வைக்கலாம்<<

இதைப் பெரிய பிரசினையாக வளர்க்க வேண்டாம் என்றுதான் நான் ஏதும் பேசாதிருந்தேன். ஆனால் பட்டறை ஏற்பாட்டாளர்களே நான் நுண் அரசியல் செய்வதாகச் சொன்னதால் நான் என் நிலையை விளக்க வேண்டியதாயிற்று
மாலன்

We The People said...

ஒரு உதாரணம் இப்படி ஒரு சர்ச்சையை கொண்டுவரும் என்று அன்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை :(

அன்று எனக்கு அதுவும் ஒரு உதாரணமாகவே தெரிந்தது! அதற்கு இவ்வளவு உள்ளர்த்தம் உள்ளதாகக்கப்படும் கொஞ்சம் கூட நினைத்துப்பார்க்கவில்லை :((

வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன் :(

மாலன் said...

அன்புள்ள commenter,
கேள்விகளை இங்கு அனுப்பினால் பதிலளிக்கத் தயாராக இருக்கிறேன்.
மாலன்

மாலன் said...

>>ராம் மகள் பற்றி எந்தத் தரக்குறைவான தாக்குதலும் இங்கு நடந்ததாகத் தெரியவில்லை<<

தரக்குறைவான தாக்குதல் என்று நான் சொல்லவில்லை. இது தனிநபர் மீதான தாக்குதல். மக்கள் ஆதரவில்லாமல் புரட்சி வெற்றி பெற முடியாது என்ற செல்வநாயகியின் பதிவில் பேசப்பட்ட பொருளுக்குத் தொடர்பில்லாத கருத்து. ராம் மீது ஏற்கனவே உள்ள மனச்சாய்வின் அடிப்படையில் (காழ்ப்பு என்று கூட நான் உறுதியாகத் தெரியாத நிலையில் சொல்ல விரும்பவில்லை)பதிவுக்குத் தொடர்பில்லாமல் அவரது குடும்பம் இழுக்கப்படுகிறது
ராம், பத்திரிக்கையாளராக, சமூகத்தில் கருத்துருவாக்கங்களை உருவாக்கவல்லவராக பொது வாழ்வில் இருக்கும் பட்சத்தில் அவருடைய சொற்களும் தனி வாழ்க்கைச் செயல்பாடுகளும் பொருந்திப் போகிறதா என்று கேட்டுத் தெளிய ஒருவருக்கு உரிமை உண்டு. <<

ராம் ஒரு பத்திரிகையாசிரியர்.அரசுப் பணத்தில் சம்பளம் வாங்கும் MPயோ. MLAயோ அமைச்சரோ, அதிகாரியோ அல்ல. ராம் போன்றவர்கள் தாங்கள் வைக்கும் கருத்துக்களுக்குத்தான் பதில் சொல்ல வேண்டியவர்கள்.ஏனெனில் மக்களுக்கும் அவ்ர்களுக்கும் இடையே உள்ள உறவு அவர்களது கருத்துக்கள் சார்ந்ததுதான். அவர்கள் தங்கள் தனிவாழ்க்கை பற்றிப் பொதுமக்களுக்கு எந்தவிதத்திலும் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் அல்ல. அவர்களது தனிநடத்தைகள் அவர்கள் கொண்டுள்ள கருத்தின் மீது நம்பிக்கைக் குறைவை ஏற்படுத்துகிறது என்றால் அந்தக் கருத்தை நிராகரிக்கும் உரிமை மக்களுக்கு உண்டு.

சீனத்தை அமெரிக்கா நட்பு நாடாகக் அறிவித்த பிறகு, அந்த நட்பை சீனமும் ஏற்றுக் கொண்டதற்குப் பின் சீன ஆதரவாளர் ஒருவரது மகள் அமெரிக்காவிற்குப் படிக்கச் செல்வதில் முரண் இல்லை என விளக்கியிருக்கிறேனே?

>>இவை இரண்டும் முற்றிலும் உண்மை. இருவரையும் தனித்தனியாக எந்த விதத்திலும் தரக்குறைவாகக் காட்டாத உண்மை. இவற்றை ஒன்றாகச் சுட்டிக் காட்டுவதில் எந்தத் தனி நபர் தாக்குதலும் இருப்பதாகத் தெரியவில்லை<<

மற்றவர்கள் விஷயத்தில் நான் சுட்டிக்காட்டியிருக்கும் முரண்பாடுகளும் உண்மைதான்.உண்மை அல்லாதவ்ற்றை நான் எழுதவில்லையே. அப்படியிருக்கும் போது ஏன் இந்தக் கண்டனம்?
>>நீங்கள் சொல்வது போல் ராம் மகள் அமெரிக்காவில் படிப்பது ராமின் கொள்கைகளுக்கு முரணானதாக இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால், அதைத் தெளிவுபடுத்தி இருக்க வேண்டும்<<

முதலில் ராமின் மகள் தன் வாழ்க்கை குறித்து முடிவெடுக்கும் வயதை எட்டிய ஒரு தனிநபர்.அவரது கல்வி குறித்து அவரே முடிவெடுத்திருக்கலாம். அப்படியிருக்க அதற்கு ராம் ஏன் பதிலளிக்க வேண்டும். இந்தியாபில் இருந்து ஆண்டு தோறும் பல மாணவர்கள் அமெரிக்காவிற்குப் படிக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தப் பல்கலையில் படிக்க வேண்டும் என்ற முடிவை பெரும்பாலனவர்கள் விஷயத்தில் அவர்களது பெற்றோர்கள் எடுப்பதில்லை.

ராமின் மகளின் செயலை ராமோடு பிணைத்துப் பேசுவதே பொருத்தமற்றது. தந்தையின் கருத்துக்களையே மகளும் கொண்டிருக்க வேண்டும், கணவரது கருத்துக்களையே மனைவியும் கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமல்ல. ராமின் மகள் தன் கல்வி குறித்து எடுத்த முடிவு எந்த வகையிலும் சமூகத்தின் செயல்களை நேரடியாக பாதிக்கப்படப் போவதில்லை. அப்படியிருக்கும் போது அது பொது அரங்கில் விவாதிக்கப்படவேண்டியதில்லை.

ராம் விளக்கமளிக்க வேண்டும் என்பதை ஒரு வாதத்திற்காகவே வைத்துக் கொண்டாலும் இது குறித்து ராமிடம் எப்போதாவது கேட்கப்பட்டதா? அவர் வலைப்பதிவுலகில் பெயரிலியின் பதிவைப் படித்துப் பின்னூட்டம் அளிக்க வேண்டும் என்பதா உங்கள் வாதம்?

>>ஆனால், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு எல்லாரும் சுற்றுலா பயணியாகவோ பொருள் தேடவோ வரவில்லை<<
அவர்கள் எதற்காக வருகிறார்கள் என்பது வேறு ஒரு விவாதத்திற்குரிய விஷயம். அதை இலங்கை பிரசினை பற்றிப் பேசும் போது பேசலாம்.அவர்கள் இந்தியா அவர்களுக்கு சார்பாக இல்லை என்று நினைக்கிறார்கள், சொல்கிறார்கள். ஆனால் வருகிறார்கள். அவர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் முரண் இருக்கிறது. அதைத்தான் சுட்டுகிறேன்.
வாதத்திற்கு வசதியாக ராமிடம் மட்டுமே முரண்பாடு இருப்பதாக பேசுவதில் உள்ள அபத்தத்தைதான் சுட்டுகிறேன்.
முரண்பாடு இல்லாத தனி மனிதர்களே இல்லை. அந்த முரண்பாடுகள் ச்மூகத்தை பாதிக்காத வரையில் அதைப்பற்றி விவாதிக்க
வேண்டியதில்லை. இதுதான் என் நிலை.
மாலன்

>>

commenter said...

"என்னிடமிருந்து நீங்கள் அறிய விரும்பிய விளக்கங்களுக்கான கேள்விகளை, எனக்கு அனுப்பாமல் உங்கள் பதிவிலேயே இட்டுக் கொண்டது நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. என்னை விமர்சிக்கும் பதிவுகளையும் கூட நானே தேடிச் சென்று வாசிப்பேன், வாசித்து விட்டு அவற்றை அலட்சியம் செய்யாது விளக்கமும் அளிப்பேன் என்ற நம்பிக்கையை வெளிப்ப்டுத்தியிருக்கிறீர்களே, அதற்காக நன்றி."


என்று சொன்னது நான் இல்லை.

அது நீங்களும் இல்லை என்றால் சொல்லுங்கள் -நம்பிக்கையை கை விட்டு - நீண்ட பட்டியல் தருகிறேன்.

வவ்வால் said...

வணக்கம் மாலன்,

//நான் பேசிய விஷயம் நன்னடைத்தைக்குத் தொடர்பற்றதா?//

//அதை மீறி அவரைத் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது தவறு. அதையும் தாண்டி அவரது குடுமப உறுப்பினரது செயல்களைக் குறிப்பிட்டு விமர்சிப்பது தவறு.//


ஒரு பதிவரின் பின்னூட்டத்தில் யோவ் அடங்கமாட்டியா என்று கொஞ்சம் தமாஷாக சொல்வதும் ஒரு வகையில் நன்னடத்தைக்கு உட்பட்டதாகிவிடும். அவரே வயதில் மூத்தவரக இருக்கும் பட்சத்தில் ஆனால் எல்லாவற்றையும் நன்னடத்தை என்றே எடுத்துகொள்வது எதுவும் பேச விடாது வாய் பூட்டு தான் போடும்!




ஹிந்து ராம் பற்றியும் , அவரது மகள் அமெரிக்காவில் படிப்பது பற்றியும் பெசியது தேவையா என்பதற்கு வருவோம். நீங்கள் ஒரு ஊடகவியலாளர் உங்களுக்கு தெரியாதது அல்ல, ஜீவஜோதி என்பவர் சரவணபவன் அண்ணாச்சி- வழக்கை அறிவீர்கள், ஜீவஜோதி வீட்டில் 29 அங்குல புதிய தொலைக்காட்சி இருக்கிறது எப்படி அது என குமுதம் ரிப்போர்ட்டரில் கட்டுரை எல்லாம் போட்டாங்க, அது ஏன், காரணம் இதெல்லாம் பரபரப்பு நியுஸ் அப்படி தான் போடுவாங்க.அங்கே எங்கே பத்திரிக்கை தர்மம் , நன்னடத்தை கேட்கபடுமா?

எப்படி பத்திரிக்கைகளுக்கு மற்றவர்கள் செய்தி ஆகிறார்களோ அதே போல பெரும் பத்திரிக்கை அதிபர் , ஆசிரியரும் ஒரு செய்திக்கு அச்சாரம் ஆக தான் அமைந்தார்,அதனை தான் வலைப்பதிவர் பயன்படுத்திக்கொண்டார்கள். அச்சு ஊடகங்களுக்கு எல்லாம் நன்னடத்தை இல்லையா, வலைபதிவர்களுக்கு மட்டும் தானா? இதில் நன்னடத்தை பார்க்கபட வேண்டும் எனில் , எப்படி ஒரு வித்தியாசமான , செய்திகளோ , பதிவுகளோ வருமா! எல்லை மீராத வகையில் செய்தி ஆக்குவதில் என்ன பெரிய நன்னடத்தை மீறல் வந்து விட போகிறது!

பதிவர்கள் மத்தியில் பேசியதாக நினைத்து பேசியதில் தவறே இல்லை, ஆனால் ராம் பற்றிய தகவல் மட்டுமேவா நன்னடத்தை மீறல ஒன்றாக தெரியவந்தது தங்களுக்கு,அது ஒரு பலவீனமான கூற்றாக அல்லவா இருக்கிறது. வேறு எத்தனையோ நன்னடத்தை மீறல் சம்பவங்கள் இருக்க்றதே!

சரி உங்கள் பார்வையில் எதையும் பேச உரிமை தங்களுக்கு உண்டு, ஆனால் அதன் பிறகு பின் இணைப்பாக கடவு சீட்டு பற்றி பேசியது , இதை விட மேலும் மோசம் ஆயிற்றே, ஒரு தனி நபர், இன்னொரு தனி நபரின் அந்தரங்கத்தை பேசிவிட்டார் என்பதற்காக அவர் சார்ந்த சமூகத்தினை குற்றம் சாட்டி பேசுவது எவ்வகை நன்னடத்தை.

பொறுமையாக வேலைப்பளுவிற்கிடையேயும் விளக்கம் அளிக்க முற்பட்டதற்கு மிக்க நன்றி! உங்கள் உரையை "heat of the moment" இல் நடந்து விட்ட ஒன்றாக கருதி தான் அனைவரும் அச்சமய்த்தில் பார்த்து இருப்பார்கள் என நினைக்கிறேன் பின்னர் பதிவுலகில் எல்லாம் பிரித்து மேய்ந்து அலசும் போது பூதாகரமாக உருவெடுத்து விட்டது. நிதானம் இழக்காமல் விளக்கம் அளிக்கும் தங்கள் செயல் பாராட்டுக்குறியது!

மு. சுந்தரமூர்த்தி said...

மாலன்,
பெயரிலி தான் என்ன எழுதினார் என்பதை மேற்கோள் காட்டி, அதை விளக்கி பலமுறை, நீங்கள் பேசியதற்கு முன்னும், பின்னும், எழுதிவிட்டார். நீங்கள் மீண்டும், மீண்டும் தனிமனிதரை விமர்சித்தார், குடும்பத்தை இழுத்தார் என்று அதே மொன்னையான தர்க்கத்தை சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். அதை நன்நடத்தப் பிறழ்வுக்கு உதாரணமாக வேறு முன்வைக்கிறீர்கள். வலைப்பதிவுகளில் நன்நடத்தைக்குப் பிறழ்வுக்கு வேறு சரியான உதாரணங்கள் கிடைக்கவில்லையா? அல்லது உங்கள் முன்சாய்வுகள் உங்கள் தெரிவை நிர்ணயிக்கிறதா?

ராமின் மகள் கொலம்பியா பல்கலையில் படிப்பது ஒரு தனிமனிதரின் சொந்த விஷயம் என்றும், அதற்கும் அவருடைய தந்தை பெயருக்கும் முடிச்சு போடுவது ஏன் என்று சொல்கிறீர்கள். பொதுவில் வைக்கப்படாத ஒருவரின் தனிப்பட்ட அல்லது குடும்பவிஷயத்தை தோண்டித் துருவி யாரவது கிசுகிசுவாக எழுதினால் நீங்கள் சொல்வது நியாயம் தான். ஆனால் ராமுக்கு கொலம்பியாவில் ஊடகவியல் படிக்கும் மகள் இருக்கிறார் என்று தெரியவந்தேதே இந்து மூலமாகத் தான். ஒருவர் தன் வகுப்பில் முதல் மாணவராகத் தேறியது அதிமுக்கியமான செய்தியாக ஒரு தேசிய நாளிதழின் முதல் பக்கத்தில், அவருடைய குடும்ப, குடும்பத்து பத்திரிகை அடையாளங்களோடு வருகிறது. அதைப் பற்றி பேசக்கூடாதா?

பலதலைமுறைகளாக ஒரு குடும்பத்தின் பத்திரிகையாக இருக்கும், அதில் முக்கிய பதவிகள் வகிப்பவர்களாகவும், செய்தியாளர்களாகவும் அந்த அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பொறுப்பிற்கு அடுத்த தலைமுறையில் ஒருவர் தயாராகிறார். அதைப்பற்றி அறிவிப்பு அதே பத்திரிகையில் முதல் பக்கமாக வெளிவருகிறது. ராமின் மகள் பிற்காலத்தில் இந்துவில் முக்கிய பொறுப்பு வகிக்கப்போகிறார் என்றால் அவர் கொலம்பியாவில் ஊடகவியலில் முதல் மாணவராகத் தேறினார் என்பதால் மட்டுமா அல்லது ராமின் மகள் என்ற முடிச்சும் தானா?

இப்படிப்பட்ட விஷயங்கள் தொடர்ந்து பேசப்பட்டுதான் வருகின்றன. இங்கே அரசியல்வாதிகளின் அந்தரங்க விஷயங்கள் (நீங்கள் விதந்து குறிப்பிட்ட பெரியார் உட்பட) அவர்களுடைய பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்கள் போன்றன தாக்குதலுக்கும், கேலிக்கும் உள்ளாகின்றன. வலைப்பதிவுகளில் மட்டுமல்ல, நீங்கள் பெரிதாக நினைக்கிற இந்து போன்ற 150 வருட பாரம்பரிய பத்திரிகையிலேயே இப்படி அரசியல்வாதிகளின் கொள்கைமுடிவுகளையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் கேலி செய்து பெரிய மனிதர்களே எழுதுகிறார்கள். சில வருடங்களுக்கு முன், இடஒடுக்கீட்டை மூர்க்கத்தனமாக எதிர்க்கிற சென்னை ஐ.ஐ.டி. இன் முன்னாள் இயக்குனர் பி.வி. இந்திரேசன், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதை "இவருக்கு இடஒதுக்கீட்டில் படித்த மருத்துவர் இந்தியாவிலேயே கிடைக்கவில்லையா" என்று இதே இந்து நாளேட்டுக் கட்டுரையொன்றில் நக்கலடித்திருந்தார் (இதன் நகைமுரண் என்னவென்றால், இந்து இணையத்தில் படிக்கக் கிடைக்காத அந்த காலத்தில் அக்கட்டுரையில் SCI/SCT விவாதகளங்களில் பதிப்பித்தவர் இந்திரேசனின் மகன் ஆத்ரி இந்திரேசன். அவர் அப்போது ஆராய்ச்சி மாணவராக இருந்தது மிச்சிகன் பல்கலைக்கழகத்தில். இடஒதுக்கீடு இல்லாத, உலகக் கல்வி நிறுவனங்களுக்கு நிகரான ஐ.ஐ.டி. யில் அல்ல).

மு. சுந்தரமூர்த்தி said...

மாலன்,
என் முந்தைய பின்னூட்டம், சற்று நேரம் வெளியே செல்லவேண்டியிருந்ததால், பிழை திருத்தி முடிக்கப்படாமல் பதிப்பித்துவிட்டேன். பின்னூட்டம் வெளிவந்த பிறகு படித்துவிட்டு, தேவைப்படின் தொடர்கிறேன்.

தமிழ் குரல் said...

மாலன்,

நீங்கள் பேசியது எதுவும் தவறில்லை... இந்து ராம் பற்றி பேசிய வரை எல்லாம் நன்றாக இருந்ததது... ஆனால் இந்து ராம் பற்றி விமர்சிப்பவர்களுக்கு நீங்கள் கொடுத்த ஈழ தமிழர்கள் உதாரணம் மிகவும் தவறானது... நீங்கள் வசதி படைத்த கடவு சீட்டோடு இலங்கையில் இருந்து வருபவர்கள் பற்றி பேசுகிறீர்கள்... ஆனால் உடமைகளை இழந்து... உயிருக்கு பயந்து... படகில் வரும் ஈழ தமிழர்கள் எந்த கடவு சீட்டோடு ராமேஸ்வரதிற்கும் மற்ற தமிழக கடலோர ஊர்களுக்கும் வருகிறார்கள்... எங்களை போன்ற ஈழ தமிழ் ஆதரவாளர்களுக்கும் உங்கள் உதாரணம் நிச்சயமாக புண் படுத்த கூடிய ஒன்று...

மேலும் இந்து ராம்... சிங்கள பேரினவாதத்தின் மிக தீவிர ஆதரவாளர்... ஈழ தமிழர்களுக்கும்... ஈழ தமிழ்ர்கள் நலனுக்கும் எதிரானவர்... அவரை பற்றிய விமர்சனத்திற்கு ஈழ தமிழர்களை உதாரணதிற்கு இழுத்ததது... நிறைய பேரை புண்படுத்தியிருக்கலாம்...

ஒவ்வொருவருக்கும் உணர்வுகள் உண்டு... எப்படி இந்து ராம் அவர்களுக்கு சிங்கள பேரினவாதம்... நியாயமோ அது போல் எங்களுக்கு ஈழ தமிழர் ஆதரவு நியாயம்... அந்த நியாயம் உங்களை வசை பாடுவதாக தோன்றினால்... என்னிடம் பதில் இல்லை...

K.R.அதியமான் said...

Dear Sir,

I was there in the workshop and listened to your speech. Nothing wrong in your speech and it was inevitable to refer some examples to clarify the points.

A storm in a tea cup.

anbudan
Athiyaman
Chennai - 96
nellikkani.blogspot.com

TBCD said...

இது ஓசை செல்லா உங்களுக்கு ஒர் கடிதம் எழுதினதில் இட்ட பின்னுட்டம்.. அப்படியே படித்தாலும்..உங்களுகு புரியும் என்ற நம்பிக்கையில்..


"பொதுவா இது நம்ம மக்கள்க் கிட்ட இருக்கிறது தான்..ரஜினி ரசிகன உங்க் ஆளு மெண்டல் அப்படின்ன..அவன் கமல் ரசிகன உங்க ஆளூ தயிர் சாதம் அப்படின்னு சொல்லுவான்...

இப்ப மாலன் சொன்னத பார்த்தா..(40 நிமிடம்...முழுசா கேட்டேன்...கடைசி 5 நிமிடம் 3 தடவ கேட்டேன்..)

அவரு மொதல்ல பெரியாரப் பத்தி சொல்லுறரு..அதுல கூட ஒரு இக்கன்னா வச்சி...சிலரால ஏற்றுக்கொள்ளப் பட்டவருன்னு...அது அப்பறம்..பேசலாம்...

அப்புறம் பெயரிலி பத்தி, ராம் பத்தி பொங்குறாரு...இதுல கவனிக்க வேண்டிய விசயம் இந்த கேள்விய கேட்டது யாருன்னு எனக்கு தெரியாது..ஒரு அனுமானத்தில் ஒன்னு அனானியா இருக்கனும்..இல்ல திரவிடம் பேசுறவங்களா இருக்கனும்..இல்ல திராவிடம் பேசுறவங்க தான் அனானியா போய் சொல்லிருக்கனும்..

திராவிடம் பேசுறவங்க இலங்கை விடயத்தில் என்ன நிலையின்னு எல்லார்க்கும் தெரியும்..அட்லீஸ்ட் பதிவர்களில்..

. அப்போ...ராம்ம சொன்னா..அவருக்கு எதிர் அணி திராவிடம் பேசுறவங்க..அப்படின்னு அவரு..ஒரு பின்னுட்டம் போடுற மாதிரி...

திராவிடர் ஆதரிக்கின்ற இலங்கைத் தமிழ்ர்களிடம் முரன்பாடு இல்லையா..அப்படின்னு...

மேடையில அவ்சரப்பட்டு சொல்லிட்டார்...

அவருக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும்...வித்தியாசம்..காட்ட முடியாதபடி..பண்ணிட்டார்..

மேடை ஏறுறவங்க கடைப் பிடிக்க வேண்டியது...பொறுமை...ஒரு நெறி..இருக்கு..அத கடைப் பிடிக்க தவறிட்டாரு...

தவறே செய்யாதவர் யாரும் இல்ல..
ஆனா சொல்லிட்டு..நான் அப்படி சொல்லல அப்படின்னு...சப்பைக் கட்டுறது என்ன வகைன்னு தெரியல்ல...

அவருடைய மற்ற பண்புகளுக்காக அவருடைய இந்த தவற மன்னிக்கலாம்..ஆனா தவறு செஞ்சவர் மணம் வருந்தினா...

பத்திரிக்கையில தனிக்கைப் பண்ணிடலாம்...வலையில எல்லாரும் பாக்குற மாதிரி..பேசுனத வச்சிக்கிட்டு..எப்படித் தாம் இப்படி பேச முடியுதோ....

செல்லா..உங்க காத எதுக்கும் ஒரு தடவ கிளீன் பண்ணிட்டு கேட்டு பாருங்க...:))) ""

ஓகை said...

திரு மாலன் அவர்களே,

பதிவர் பட்டறையில் நன்னடத்தை என்ற தலைப்பில் ஓர் உரை நிரலில் சேர்க்கப்பட்டதே எனக்கு அபத்தமாக இருக்கிறது. முற்றிலும் தொழிநுட்பங்களும் மற்றும் நுட்பங்கள் தொடர்பான சில மிகப் பொதுவான சிறு விஷயங்கள் மட்டுமே பேசப்பட வெண்டிய பட்டறையில் இவ்வாறான சர்ச்சைக்குறிய ஓர் உரையை நீங்கள் நிகழ்த்தியிருப்பது எனக்கு சரியாகப் படவில்லை. என்னதான் நீங்கள் கீழரங்கு பதிவர்களுக்காகவும் மேல்தள நிகழ்வுகள் புதியவர்களுக்காகவும் என்று நீங்கள் சொன்னாலும் இந்தத் தலைப்பும் அதற்கான உங்கள் உரையும் பொருத்தமானதாக எனக்குத் தோன்றவில்லை.

நீங்கள் பேசியன யாவும் சரி என்று வலியுறுத்துவதற்காகவே இந்தப் பதிவு எழுதப்பட்டிருப்பதாக எனக்குத் தொன்றுகிறது.

மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்த வலைப்பதிவர் பட்டறையில் உங்கள் உரை ஒரு மருவாகத் தோற்றமளிப்பதை நீங்கள் நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.

என் மனதில் பட்டதை ஒளிக்காமல் அப்படியே சொல்லிவிட்டேன்.

அன்புடன்
நடராஜன்.

✪சிந்தாநதி said...

உங்களின் வேறெந்தக் கருத்தும் விமர்சிக்கப் படாதபோதும் பெயரிலி-ராம்-ஈழத்தமிழர் பற்றி பதிவர் பட்டறையில் நீங்கள் கூறிய கருத்துக்கள்தான் இன்று பெரும் விவாதமாகி இருக்கிறது. விவாதம் என்பதோ, கருத்து முரண் என்பதோ அவசியமற்றதல்ல. ஆனால் பதிவர் பட்டறையில் சற்றும் தொடர்பற்ற முரணாக உங்களின் இந்தக் கருத்து மட்டும் துருத்திக் கொண்டு நிற்கிறது. அந்த வேளையில் கூற அவசியமற்றதும் கூட. நீங்கள் திட்டமிட்டு அதைக் கூறவில்லை என்று சொல்வதை ஏற்றாலும் கூடஇது அவசியமற்றது தான்.

ஆனால் நீங்கள் முன்னரே இந்த விஷயத்தில் காட்டி வந்த தீவிரத் தன்மை தான் பட்டறையிலும் நீங்கள் திட்டமிட்டு இதை பேசியிருக்கலாம் என்று கருத்து உருவாக காரணமாகவும் இருந்திருக்கிறது.

இரு தனிநபர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரணை அங்கே பிரசன்னமில்லாத ஒருவரைப் பொது அரங்கு ஒன்றில் சுட்டியதும் உதாரணமாக கூறப்பட்டதும் ஒரு புறம், இன்னொரு புறம் ஈழத்தமிழரையும் அதே உதாரணத்துக்கு இழுத்ததும்...ஒரு பத்திரிகையாளராக இந்த விஷயங்கள் எத்தனை சென்சிடிவ் ஆனவை என்பது உங்களுக்கே தெரிந்திருக்கக் கூடியது தான்.

மாலன் said...

அன்புள்ள Commenter,
சில நடைமுறை செளகரியங்களுக்காகத்தான் உங்களை கேள்விகளை இங்கே அனுப்பச் சொல்கிறேன்.
1. நான் இந்தப் பதிவை எழுதும் முன்னரே பல பதிவுகளில் பட்டறையில் நான் பேசியது பற்றி பேசப்பட்டுவிட்டது. எல்லாப் பதிவுகளையும் படிக்க அவகாசம் இல்லை என்ற போதிலும் சில பொதுவான கேள்விகளை நான் அறிவேன். அவற்றில் சிலவற்றிற்கு என் பதிவிலும், நான் பின்னூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு ஆற்றியுள்ள எதிர்வினையிலும் விளக்கங்கள் இருக்கக் கூடும்.

2.ஒரு நேரத்தில் ஒன்றிரண்டு பதிவுகளில் என்னை பற்றிய விமர்சனங்கள் இருந்தால் எல்லாவற்றையும் சென்று பார்க்க இயலும். ஆனால் இந்தச் சர்ச்சை பல பதிவுகளில் விவாதிக்கப்படுகிறது. பணிச் சூழல் காரணமாக என்னால் ஒவ்வொருபதிவாகத் தேடிச் சென்று படித்து பதிலளிக்க அவகாசம் இல்லை.
3.நாளை இந்தப் பிரசினை குறித்த கேள்விகளையும் விவாதங்களையும் எவெரேனும் தேட முயலும் போது என் கருத்துக்கள் எல்லாம் ஒரே இடத்தில் இருப்பதுதான் எனக்கு ஏற்றது எனக் கருதுகிறேன்.

திங்கள் மாலைக்குள் எனக்குக் கேள்விகள் கிடைத்தால் பதிலலிக்கிறேன். அதன் பின் இயலாது. விவாதத்திற்கு நேரடித் தொடர்பில்லாத பொருளில் எழுப்பப்ப்டும் கேள்விக்களுக்கு இந்தப் பதிவில் பதிலளிக்க இயலாது என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

மாலன் said...

அன்புள்ள வவ்வால்,

>>தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது தவறு. அதையும் தாண்டி அவரது குடுமப உறுப்பினரது செயல்களைக் குறிப்பிட்டு விமர்சிப்பது தவறு.

இவை தவறு என்று ஏற்கறீர்களா என அறிய விரும்புகிறேன்<<
என்ற என் கேள்விக்கு உங்களிடமிருந்து நேரடியான பதில் இல்லை. மாறாக அடங்கமாட்டியா என்று எதிர்வினை வருவது வியப்பளிக்கிறது.

அச்சு ஊடகங்களின் நடத்தைக்கு வர்த்தகம், போட்டி எனப் பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் வலைப்பதிவுகளுக்கு அவை கிடையாது. அச்சு ஊடகங்களின் ஆரோக்கியமற்ற சில வழக்கங்களிலிருந்து மாறுபட்ட ஊடகமாக வலைப்பதிவுகளை வளர்த்தெடுக்கும் அக்கறையில்தான் அதைப் பற்றி விவாதிக்கிறோம்.

அச்சு ஊடகங்களில் அவதூறாக ஒன்ரு எழுதப்பட்டதாக சம்பந்தப்பட்டவர் கருதினால் Press Councilல் புகார் செய்யலாம். நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடரலாம். ஆனால் வலைப்பதிவுகளில் அந்த Regulatory Mechanism கிடையாது. அதிக சுதந்திரம் அதிக பொறுப்புக்களைக் கொண்டுவருகிறது.

ராம் பற்றிய உதாரணம் மட்டுமல்ல, வேறு சில உதாரணங்களையும் சுட்டினேன் சட்டம் பற்றிய வழக்கறிஞர்கள் பதிவில் உள்ள பின்னூட்டத்தையும் சுட்டியது பற்றி என் பதிவில் பார்க்கலாம்.

இலங்கைத் தமிழர்கள் அனைவரையும் 'குற்றம் சாட்டி'ப் பேசவில்லை. அவர்கள் செய்தது தவறு என்றோ சரி என்றோ வாதிடவில்லை. அவர்கள் செயலில் முரண்பாடு இருக்கிறது அது நடைமுறை யதார்த்தம் என்றுதான் சொல்லியிருக்கிறேன்.

ஒருவேளை பெயரிலி போன்றவர்கள் இலங்கைப் பாஸ்போர்ட்டில்தானே வெளியேறினார்கள் எனப் பெயர் சொல்லிச் சொல்லியிருக்க வேண்டுமோ? அப்படிச் சொல்லியிருந்தால் இத்தனை ஆரவாரம் எழுந்திருக்காதோ?

அப்போதும் கூடத் தனிமனிதத் தாக்குதல் நடத்திவிட்டதாகக் குரல்கள் எழுத்தான் செய்திருக்கும். அதுவும் தவிர அப்படி வெளியே போனவர் பெயரிலி மட்டுல்லவே. பல்ரில் அவரும் ஒருவர்.

முன்பே சொன்னது போல,
முரண்பாடு இல்லாத மனிதர்களே கிடையாது. அந்த முரண்பாடுகள் சமூகத்தை பாதிக்காதவரை அதை மற்றவர்கள் விமர்சிக்கத் தேவையில்லை என்பதுதான் என் நிலை.

வேறெதையும் ஏற்காது போனாலும் இதையாவது ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.

இராம.கி said...

அன்பிற்குரிய மாலன்,

நீங்கள் பேசத் தொடங்கும் போது "நன்னடத்தை என்ற சொல் வேண்டாம், சுய ஒழுங்கு, கட்டுப்பாடு ......." என்ற பொருளில் தொடங்கினீர்கள். பின்னால் "policy பற்றியெல்லாம் இங்கு பேசவேண்டாம்" என்றீர்கள்; "சரி, நன்றாகத் தொடங்கியிருக்கிறார் அவர் சொல்ல நினைக்கிற சுய கட்டுப்பாடுகள் பற்றிப் பேசப்போகிறார்" என்று நினைத்தேன். பேச்சு கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து, பெயரிலியின் வாசகத்துள் திடீரென்று நுழைந்து, புலம்பெயர் ஈழ மக்களின் கடவுச்சீட்டில் நுழைந்தது தேவையில்லாது என்றே நான் நினைத்தேன்; இப்பொழுதும் நினைக்கிறேன். [இராமின் மகள் பற்றிய பேச்சு "படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்" என்ற கருத்தில், அவருடைய நிலைபாட்டில் "ஒத்திசைவு இல்லாமை - inconsitency" பற்றிப் பெயரிலி கூற்றில் வந்தது. இன்றைக்கு இந்து ராம் வெறும் நாளிதழ்காரர் மட்டுமல்ல; பொதுவாழ்வில் பொள்ளிகை (policy) பற்றியெல்லாம் பேசிப் பொதுக்கருத்தைத் தன் கூற்றுகளால் திசைதிருப்பக் கூடியவர் தான். செயலலிதா அரசில் அவர் மேல் ஏற்பட்ட தாக்கத்தைப் பொதுத் தாளிகைத் துறையின் மேல் ஏற்பட்ட தாக்கமாக மாற்றிய போதே, அவருடைய நீட்சி எங்கெல்லாம் போகமுடியும் என்பது பலருக்கும் விளங்கியது. நண்பரே! எல்லோருக்கும் இலங்கா ரத்னா சட்டென்று கிடைத்துவிடாது. சிங்கள அரசு இவருக்கு நன்றி சொல்ல அடிப்படையில் விழைந்திருக்கிறது. பல தமிழர்கள் அந்தப் பட்டம் அவருக்குக் கிடைத்ததையும், அவர் அதை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டதையும் கூர்ந்து கவனியாது இருக்க முடியாது. அடுத்து, எப்படிக் கலைஞரின் மக்கள் பற்றிய கவனிப்பு தமிழ்க் குமுகாயத்தில் சிறிதும் குறையாதோ, அதே போல இந்துராமின் மகள் பற்றிய கவனிப்பு ஏற்படுவதும் தவிர்க்க முடியாதது. Mr. Ram is today a public person and not just a journalist or an editor. People tend to observe him closely, Sir.]

இந்த விதயங்களில் உங்கள் கருத்து மாறுபட்டு இருப்பதில் உங்களுக்கு உரிமை உண்டு. ஆனாலும், இப்படிப் பதிவர் பட்டறை போன்ற ஒரு நிகழ்ச்சியில் இந்த எடுத்துக் காட்டுக்கள் வேண்டுமா? பெயரிலி சொன்னது உங்கள் ஆழ்மனத்தில் தைத்திருப்பதால் சட்டென்று சொல்லிவிட்டீர்கள் போலும். அதே போல, புலம்பெயர் ஈழ மக்கள் இலங்கையில் இருந்து வெளிவந்து, உயிர்பிழைத்து, வாழ்வு கருதி, பல்வேறு நாடுகளுக்குப் பெயர்வதும், அதையொட்டித் தாங்கிக் கொள்ளும் சரவல்களும் சோகம் நிறைந்தவை என்று உங்களுக்குத் தெரியாததா? அப்படிப்பட்ட புலம் பெயர்வை ஒட்டிய கடவுச் சீட்டு பற்றிப் பேசுவது பொருத்தமாகத் தோன்றுகிறதா?

பல தமிழர்களுக்கும் இலங்கா ரத்னா இந்து ராமின் மேல் இருக்கும் கோவம் என்னவென்றும் உங்களுக்குத் தெரியாதா? ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளைத் தமிழர் பக்கத்தில் இருந்து பதியவே மறுக்கும் இந்தியத் தாளிகை உலகு எப்பேற்பட்ட கண்மறைப்பைச் செய்து கொண்டு இருக்கிறது? என்ன தான் ஹமாஸ் மீது கோவம் உள்ளூர இருந்தாலும், அரபுத் தாளிகைகளும், நாளிதழ்களும் பாலத்தீனச் செய்திகளை பாலத்தீன நோக்கில் இருந்து போடாமல் இருப்பதே இல்லை; வெறுமே இசுரேல் பக்கத்துப் பார்வைச் செய்திகள் மட்டுமே அங்கு வெளியாவதில்லை. அதே போல, ஒருகாலத்தில் அயர்லாந்துத் தாளிகைகள் ஸின் வெய்ன் செய்திகளை விடாது சொல்லிவந்தன.

உலகமெங்கும் தேச விடுதலைப் போர்களின் பக்கம் உள்ள பார்வை இந்த அளவிற்குத் தூக்கியெறியப் பட்டு ஓரப் பரப்புரை நடப்பதில்லை. தமிழ்நாட்டில் மட்டும் தான் இப்படி ஒரு கண்ணாம் பூச்சி தொடர்ந்து நடக்கிறது.

சரி, செய்திகள் தான் வெளியிடவில்லை. அவர்கள் இலங்கைக் கடவுச் சீட்டைக் கையில் வைத்திருப்பதையும் நீங்கள் முரணாகச் சொல்ல முயன்றால் என்ன சொல்வது? தமிழீழம் மலரும் வரை, இலங்கைக் கடவுச் சீட்டைக் கையில் வைத்திருக்காமல் அவர்கள் என்ன செய்ய முடியும்? ஏதிலிகளளகத் தொடருவது தான் வாழ்வா?

அய்யா, நமக்குள் தமிழ்நேயம் கூட வேண்டாம்; ஓர் அடிப்படை மனிதநேயம் இருந்தாலே, அவர்கள் படுகின்ற இழப்புக்கள் நமக்குப் புரியுமே? ஒரு 35 கி.மீ. தள்ளி உள்ள மக்களைப் பற்றிய செய்திகளை அறியவிடாமல், இவ்வளவு இருட்டடிப்பா?

இன்னொரு வகையில் பார்த்தால், எனக்கு வியப்பு இல்லை. அருகில் உள்ள கன்னடத்தில், வீரப்பனின் தேடுதல் வேட்டையின் போது, அவர்கள் எல்லைப்பக்கம் இருந்த தமிழர்களைப் பிடித்துக் கொண்டு போய் உள்ளே போட்டு, ஏழெட்டு ஆண்டுகளாய் வைத்து இருக்கிறார்களே? {இனக் கலவரம் செய்தவர்கள் வெளியே இருக்கிறார்கள்.] தமிழ்நாட்டு அரசியல் வாதிகளும், தாளிகைத்துறையும் இன்றுவரை என்ன கூப்பாடு போடுகிறார்கள்? நம்மூர் மக்களுக்கே நாம் குரல் கொடுக்கவில்லையே? இருட்டடிப்புத் தானே நடக்கிறது. அப்புறம் ஈழத்து மக்கள் பற்றியா ஆதரவாய்ப் பேசப் போகிறோம்?

நாமெல்லோரும் "ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்" என்று பாடிக் கொள்ள வேண்டியது தான். அய்யா, சில போதுகளில் தமிழர் என்று சொல்லிக் கொள்ள வெட்கமாகத் தான் இருக்கிறது.

நண்பரே! பொறுமையாகச் சிந்தியுங்கள், புலம்பெயர் ஈழ மக்களின் கடவுச்சீட்டு பற்றிய எடுத்துக் காட்டு, வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. உங்களிடம் இருந்து அது வந்திருக்க வேண்டாம்.

அன்புடன்,
இராம.கி.

மாலன் said...

அன்புள்ள சுந்தரமூர்த்தி,

>>பெயரிலி தான் என்ன எழுதினார் என்பதை மேற்கோள் காட்டி, அதை விளக்கி பலமுறை, நீங்கள் பேசியதற்கு முன்னும், பின்னும், எழுதிவிட்டார். நீங்கள் மீண்டும், மீண்டும் தனிமனிதரை விமர்சித்தார், குடும்பத்தை இழுத்தார் என்று அதே மொன்னையான தர்க்கத்தை சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்.<<

மக்கள் ஆதரவில்லாத புரட்சிகள் பற்றிய செல்வநாயகியின் பதிவில் சந்திப்பு எழுதிய கருத்துக்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்கும், தீவிர இடதுசாரிகளுக்குமிடையே ஆன உறவு பற்றியது. மார்க்சிஸ்ட் கட்சிக்காரர் என்கிற கோணத்தில் சந்திப்பு தன் பார்வையை எழுதியிருந்தார். அங்கு ராமின் மகள் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சிறப்பிடம் பெற்றுத் தேறியது குறித்தான பெயரிலியின் எள்ளல், விவாதப் பொருளுக்குத் தொடர்பற்றது. ராம் மீதான விமர்சனமாக அதைக்கொண்டாலும் கூட அது தொடர்பற்றது. ஏனெனில் ராம் மார்க்க்சிஸ்ட் கட்சியின் போக்கை நெறிப்படும் பொலிட்பீரோ உறுப்பினர் அல்ல. அப்படியிருக்கும் போது அவரது மகளைப் பற்றிய குறிப்பு அவசியமற்றது. அப்போது எழுதியதை இப்போது வெவ்வாறான தத்துவ முலாம் பூசி மழுப்பப் பார்க்கும் புத்திசாலித்தனத்தை மெச்சுகிறேன். ஆனால் அதன் core தனிமனிதர் மீது ஏற்கனவே இருந்த மனச்சாய்வின் காரணமாக அவரது குடும்பத்தை இழுத்து வீசப்பட்ட விமர்சனம்தான் என்பதால் அது தனிநபர் மீதான விமர்சனமே.

>> அதை நன்நடத்தப் பிறழ்வுக்கு உதாரணமாக வேறு முன்வைக்கிறீர்கள். வலைப்பதிவுகளில் நன்நடத்தைக்குப் பிறழ்வுக்கு வேறு சரியான உதாரணங்கள் கிடைக்கவில்லையா? அல்லது உங்கள் முன்சாய்வுகள் உங்கள் தெரிவை நிர்ணயிக்கிறதா?<<

வலைப்பதிவுகளில் எத்தனையோ உதாரணங்கள் இருக்கலாம். ஆனால் இது சமீபத்தியது. ப்லரது நினைவில் இருக்கக் கூடியது. அதுவும் தவிர என்னுடைய பார்வையில், நெறிப்படுத்தும் அமைப்புக்கள் இல்லாத வலைப்பதிவு என்ற ஊடகத்தில் ஒருநபர் மீதான தனிப்பட்ட தாக்குதல் மற்றெதையும்விட முக்கியத்துவம் வாய்ந்தது, போலிப்பின்னூட்டம் போன்ற நன்நடத்தைப் பிறழ்வுகளை தொழில்நுட்பத்தின் மூலம் தடுத்துக் கொள்ள முடியும். ஆனால் இது தொழில் நுட்பம் சார்ந்தது அல்ல. கலாசாரம் சார்ந்தது. அதைக் குறித்து தொழில்நுட்பவாணராக இல்லாத எழுத்தாளனாக இருக்கிற எனக்கு அக்கறை ஏற்படுவது இயல்பானது. என் பேச்சில் நான் எதைச் சுட்ட விரும்புகிறேன் என்பது என் மனச்சாய்வைச் சார்ந்ததுதான். அது உங்கள் பதிவில் நீங்கள் எதைப் பேசவிரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுப்பதில் உங்கள் மனச்சாய்வு பங்களிப்பதைப் போன்றதுதான். நாம் ஏன் ஜோதிகாவிற்குப் பிறந்த பெண்குழந்தையைப் பற்றிப் பேசாமல் ஒரிசாவில் கொல்லப்பட்ட பென்குழந்தைகளைப் பற்றிப் பேசுகிறோம்? நம் ஆர்வம் எதைப் பற்றியதோ அதைத்தான் பேசுவோம் அது இயல்பு.
ராமுக்கு கொலம்பியாவில் ஊடகவியல் படிக்கும் மகள் இருக்கிறார் என்று தெரியவந்தேதே இந்து மூலமாகத் தான். ஒருவர் தன் வகுப்பில் முதல் மாணவராகத் தேறியது அதிமுக்கியமான செய்தியாக ஒரு தேசிய நாளிதழின் முதல் பக்கத்தில், அவருடைய குடும்ப, குடும்பத்து பத்திரிகை அடையாளங்களோடு வருகிறது. அதைப் பற்றி பேசக்கூடாதா?<<
தாரளமாகப் பேசலாம். அதைப் பற்றித் தனிப்பதிவு போட்டுப் பேசலாம். ஆனால் வேறுஒருவர் பதிவில் அந்தப் பதிவில் பேசப்படும் விஷயத்திற்குத் தொடர்பில்லாமல் இதை இழுப்பது பின்னூட்டம் என்ற வாய்ப்பை விவாதத்திற்கு அல்லாமல், புறணி பேசுவதற்குப் பயன்படுத்திக் கொள்ளும் abuse.
பலதலைமுறைகளாக ஒரு குடும்பத்தின் பத்திரிகையாக இருக்கும், அதில் முக்கிய பதவிகள் வகிப்பவர்களாகவும், செய்தியாளர்களாகவும் அந்த அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பொறுப்பிற்கு அடுத்த தலைமுறையில் ஒருவர் தயாராகிறார். அதைப்பற்றி அறிவிப்பு அதே பத்திரிகையில் முதல் பக்கமாக வெளிவருகிறது<<

என்னவென்று அறிவிப்பு வந்தது? ராமின் மகள்தான் அடுத்த ஆசிரியர் என்றா? இந்துப் பத்திரிகையின் ஆசிரியர் யார் என்பதை அவர்களது இயக்குநர்கள் குழு தீர்மானிக்கிறது. அது யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என நாம் முடிவு செய்ய முடியாது. நாம் அந்தப் பத்திரிகையில் என்ன எழுதப்படுகிறது என்பதைக் குறித்து மட்டுமே விமர்சிக்கலாம்.
இந்துப் பத்திரிகையின் இயக்குநர் குழுவிலும் அரசியல் இருக்கிறது. ஒருமுறை ஸ்தாபனமே பிளவுபடக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டு அதை ஊழியர்கள் தடுத்து நிறுத்தி சமரசம் செய்தார்கள் என்பது ஊரறிந்த கதை. எனெவே வித்யா நாளை ஆசிரியர் ஆகலாம். ஆகாமலும் இருக்கலாம்.

ஒருவேளை நாளை அவர் ஆசிரியரானால், அப்போது அவர் என்ன எழுதுகிறார் என்பதைப் பார்த்து அவரது கருத்துக்களை விமர்சனம் செய்வதில் தவறில்லை. அதுவரை பொறூக்கக் கூடாதா? அவர் என்ன எழுதுவார் என்பதே தெரியாமல் விமர்சிக்க வேண்டுமா? அப்போதும் கூட அவரது தனி வாழ்வை விமர்சிக்க வாசகர்களுக்கு உரிமை இல்லை.

>>இப்படிப்பட்ட விஷயங்கள் தொடர்ந்து பேசப்பட்டுதான் வருகின்றன. இங்கே அரசியல்வாதிகளின் அந்தரங்க விஷயங்கள் (நீங்கள் விதந்து குறிப்பிட்ட பெரியார் உட்பட) அவர்களுடைய பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்கள் போன்றன தாக்குதலுக்கும், கேலிக்கும் உள்ளாகின்றன.<<

அரசியல்வாதிகள், மக்களின் வாக்குகள் மூலமாக அரசியல் அதிகாரத்தைக் கோருகிறார்கள். (இது பெரியாருக்குப் பொருந்தாது. ஏனெனில் அவர் 'அரசியல்'வாதி அல்ல) அதனால் அவர்களது நடத்தை பற்றி மக்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். அது அவர்கள் தங்கள் வாக்கை எப்படிப் பயன்படுத்துவது என்ற முடிவை எடுக்க அவர்களுக்கு உதவும். அதே அளவுகோல் பொது வாழ்வில் உள்ள மற்றவர்களுக்குப் பொருந்தாது.
ஒரு columnist ன் பத்தியில் காணப்படுகிற கருத்துக்களுக்கு அவர்தான் சொந்தக்காரர். பத்திரிகை அங்கு அதைக் கொண்டு சேர்க்கிற ஊடகம் மட்டுமே. தலையங்கம் மட்டுமே பத்திரிகையின் கருத்து.<<


இந்திரேசனின் பார்வையும் அவர் மகனது பார்வையும் வேறு வேறாக அமைந்திருந்த எடுத்துக்காட்டை கொடுத்து உதவியதற்கு நன்றி. அது ராமின் மகளும் பொருந்துமே?
மாலன்

மாலன் said...

அன்புள்ள தமிழ்க்குரல்,

>>நீங்கள் வசதி படைத்த கடவு சீட்டோடு இலங்கையில் இருந்து வருபவர்கள் பற்றி பேசுகிறீர்கள்... ஆனால் உடமைகளை இழந்து... உயிருக்கு பயந்து... படகில் வரும் ஈழ தமிழர்கள் எந்த கடவு சீட்டோடு ராமேஸ்வரதிற்கும் மற்ற தமிழக கடலோர ஊர்களுக்கும் வருகிறார்கள்... <<

நான் வசதி படைத்த,நிரம்பப் படித்த, தன் இனம் விடுதலைக்குப் போராடும் போது, தாய்நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாட்டில் குடியேறி சொந்தமாக வீடும் கட்டிக் கொண்டு வசதியான சூழ்நிலையில் இருந்து கொண்டு மற்றவர்களின் தனிப்பட்ட முரண்பாட்டை பெரிய சமூகப் பிரசினையாக பூச்சாண்டி காட்டி விமர்சிக்கிற பெரிய மனிதர்களைப் பற்றித்தான் கூறுகிறேன். நீங்கள் சொல்கிற ஏதிலார் மீது எனக்கு அனுதாபம் உண்டு. அது அவர்கள் தங்கள் உடமைகளை இழந்ததற்கு மட்டுமல்ல. தங்கள் நாட்டின் போர்ச்சூழ்லை மாற்ற ஓரு இயக்கமாகத் திரள இயலாதிருக்கிறார்களே என்பதையும் உள்ளடக்கிய அனுதாபம்.
எங்களை போன்ற ஈழ தமிழ் ஆதரவாளர்களுக்கும் உங்கள் உதாரணம் நிச்சயமாக புண் படுத்த கூடிய ஒன்று...<<

இலங்கைத் தமிழர்கள் இந்தியர்களைப் பற்றி முறையற்று விமர்சிப்பது என்னபுண்படுத்தக் கூடிய ஒன்றாக இருக்கிறதே! நான் மட்டும் மனமும் மெல்லிய உணர்வுகளும் இல்லாத கல்லா? எனது தேசமும், எனது தேசத்தில் உள்ளவர்களும் அன்னியர்களால் விமர்சிக்கப்படும் போது நான் அதை வாய்மூடி மெளனமாக ஏற்க வேண்டுமா?

>>எப்படி இந்து ராம் அவர்களுக்கு சிங்கள பேரினவாதம்... நியாயமோ அது போல் எங்களுக்கு ஈழ தமிழர் ஆதரவு நியாயம்...<<

நிச்சியமாக. அவரவர் நியாயங்கள் அவரவர்களுக்கு. அதை மற்றவர் ஏற்கவோ, அங்கீகரிக்கவோ வேண்டாம். ஆனால் அவரவர்களுக்கு அவரவர் நியாயம் என்ற யதார்த்தத்தை ஏற்க வேண்டும் என்றுதான் கோருகிறேன்.
மாலன்

>>

மாலன் said...

அன்புள்ள அதியமான்,

புரிந்து கொண்டதற்கு நன்றி. நேரில் வந்திருந்து கேட்ட நீங்கள், என் பேச்சில் தவறேதும் இல்லை எனத் தெரிவித்திருக்கும் கருத்து ஆறுதல் தருகிறது. நன்றி
மாலன்

மாலன் said...

அன்புள்ள tbcd,
>>ஆனா சொல்லிட்டு..நான் அப்படி சொல்லல அப்படின்னு<<

இப்படிப் பொத்தாம் பொதுவாக மட்டையடிப்பதை விட்டு விட்டு,
நான் எதைப் பேசிவிட்டு அப்படிப் பேசவில்லை எனச் சொல்கிறேன் எனச் சுட்டமுடியுமா?

மாலன்

மாலன் said...

அன்புள்ள நடராஜன்,
>>பதிவர் பட்டறையில் நன்னடத்தை என்ற தலைப்பில் ஓர் உரை நிரலில் சேர்க்கப்பட்டதே எனக்கு அபத்தமாக இருக்கிறது<<

அதற்கு நான் பொறுப்பல்ல. நிரலை வகுப்பதில் எனக்கு எந்தப் பங்குமில்லை என்பதை நான் ஏற்கனவே என் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

>> முற்றிலும் தொழிநுட்பங்களும் மற்றும் நுட்பங்கள் தொடர்பான சில மிகப் பொதுவான சிறு விஷயங்கள் மட்டுமே பேசப்பட வெண்டிய பட்டறையில்.....<<

வலைப்பதிவு என்பது தொழில்நுட்பமா? உள்ளடக்கமா? தொழில்நுட்பத்தை நாம் எங்கிருந்தும் பெற்று அதைத் தமிழ்ப்படுத்திக் கொள்ள முடியும்.ஆனால் உள்ளடக்கத்தை தமிழர்களாகிய நாம்தான் உருவாக்க வேண்டும்.

>>இந்தத் தலைப்பும் அதற்கான உங்கள் உரையும் பொருத்தமானதாக எனக்குத் தோன்றவில்லை.<<

அது உங்கள் அபிப்பிராயம். அதில் தவறேதும் இல்லை எனக் கருதுபவர்களும் இருக்கிறார்கள். அவரவர் அபிப்பிராயம் அவரவர்க்கு. நான் வலைப்பதிவுகளின் சிறப்புகள், அதன் இயல்புகள், சாத்தியங்கள், திரிபுகள் இவை பற்றித்தான் பேசியிரூக்கிறேன். அதைப் பதிவில் பார்த்தால் தெரியும்.

>> நீங்கள் பேசியன யாவும் சரி என்று வலியுறுத்துவதற்காகவே இந்தப் பதிவு எழுதப்பட்டிருப்பதாக எனக்குத் தொன்றுகிறது.<<

நான் பேசியவை திரிக்கப்படும் போது அதைக் குறித்து அமைப்பாளர்கள் தவறான அபிப்பிராயம் ஏற்படும் வண்ணம் பதிவு வெளியிடும்போது நான் என் நிலையை விளக்க உரிமை இல்லையா?

>>மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்த வலைப்பதிவர் பட்டறையில் உங்கள் உரை ஒரு மருவாகத் தோற்றமளிப்பதை நீங்கள் நிச்சயம் தவிர்த்திருக்கலாம்<<

வலைப்பதிவுலகில் மருவாகத் தோற்றமளிப்பது சிலரது நடத்தைதான். அதைப்பற்றிய பேச்சு அப்படித்தானே இருக்கும்?

மனதிலபட்டதை வெளிப்படையாகப் பேசியதற்கு நன்றி.

மாலன்

மாலன் said...

அன்புள்ள சிந்தாநதி,

>>அந்த வேளையில் கூற அவசியமற்றதும் கூட<<

நன்னடைத்தை பற்றிய உரையில் நான் நன்னடத்தைப் பிறழ்வு என்று கருதும் ஒரு விஷய்த்தைப் பற்றிப் பேசுவது எப்படி அவசியமற்றதாகும்? இது குறித்து மேலே நான் வவ்வாலுக்கும், சுந்தரமூர்த்திக்கும் கொடுத்துள்ள விளக்கங்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
இரு தனிநபர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரணை அங்கே பிரசன்னமில்லாத ஒருவரைப் பொது அரங்கு ஒன்றில் சுட்டியதும் உதாரணமாக கூறப்பட்டதும் ஒரு புறம்<<

இது குறித்தும் வவ்வாலுக்கு அளித்த பதிலில் விளக்கியிருக்கிறேன். அங்கு பிரன்னமாகி இல்லாத பெயரிலியைப் பற்றி நான் பேசியது தவறு என்றால் வலைப்பதிவுலகில் பிரசன்னமாகையிராத ராமின் மகளைப் பற்றிப் பேசியதும் தவறு. அது தவறில்லை என்றால் இதுவும் தவறில்லை.இப்போது இதைத் தவறு என்று வாதிட வரும் நண்பர்கள் அதைக் குறித்து ஏன் வாதிடவில்லை. நான் பெயரிலி எழுதியிருக்கிறார் என்ற ஒரு வாக்கியத்தைத் தவிர வேறெங்கும் அவரைப் பெயர் குறிப்பிட்டு ஏதும் சொல்லவில்லை

நண்பர் சிறில் எனக்கு எழுதிய தனி மடலில் சொல்லியிருப்பது போல பெயரிலி கொடுத்த மருநதை அல்லது விஷத்தை அவர்களுக்கே கொடுத்திருக்கிறேன். அவ்வளவுதான். (சிறிலும் நான் பேசியதைத் தவிர்த்திருக்கலாம் என்றுதான் அபிப்பிராயப்படுகிறார் என்பது வேறு விஷயம்)

>>இந்த விஷயங்கள் எத்தனை சென்சிடிவ் ஆனவை என்பது உங்களுக்கே தெரிந்திருக்கக் கூடியது தான்.<<

சென்சிட்டிவானவை என்பதால் எந்த விஷயமும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல.

மாலன்

TBCD said...

ஐயா,

தாங்கள் ராமைப்பற்றி பேசினீர்கள்..
அதில் முரண்பாடு பற்றி பேசினீர்கள்..
அதில்...இலங்கைத தமிழர்கள் ஏன் வந்தார்கள்..
வாழ்வில் முரண்பாடுகளுக்குப் பஞ்சம்..
ஏன்..ராம் சார்ந்த முரண்பாடுகளையே சொல்லி இருக்கலாமே...அதுக்கும் பஞ்சம் இல்லை என்றே அறிகிறேன்..

அது விடுத்து..ஏன்..அங்கே சென்றீர்கள்..

பதிவிலே..சம்பந்தமில்லாத ஒன்றெச் சொல்லுவது போல்.. இதை ஏன் சொன்னீர்கள்...

அது spontaneous வந்ததாக சொல்ல முடியாது..

நீங்கள்..
இலங்கைத் தமிழர்களின் நன்நடத்தைப் பற்றி சொல்லவில்லை..

ஆனால், அவர்களின் நிலைமையயெ எள்ளி நகையாடி விட்டீர்கள்..

(அவன நிறுத்தச் சொல்லு...நான் நிறுத்துறேன்...அதுக்கும் இதுக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை..)

மேடை ஏறுபவர்கள்..உணர்ச்சி வசப்படக்கூடாது..நீங்கள்..ராம் என்றதும் உணர்ச்சிவசப்பட்டு விட்டதாக்த் தான் இதை பார்க்க முடியும்...


மற்றபடி..உங்களின் உரை துறை (பதிவு நன்நடத்தை..) சார்ந்ததாகவே இருந்தது...


//*மாலன் said...
அன்புள்ள tbcd,
இப்படிப் பொத்தாம் பொதுவாக மட்டையடிப்பதை விட்டு விட்டு,
நான் எதைப் பேசிவிட்டு அப்படிப் பேசவில்லை எனச் சொல்கிறேன் எனச் சுட்டமுடியுமா?*//

thiru said...

அன்பு மாலன்,

//அவர்கள் இந்தியா அவர்களுக்கு சார்பாக இல்லை என்று நினைக்கிறார்கள், சொல்கிறார்கள். ஆனால் வருகிறார்கள். அவர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் முரண் இருக்கிறது. அதைத்தான் சுட்டுகிறேன்.//

உயிருக்கு பயந்து நாட்டைவிட்டு வெளியேறும் அகதிகள் இந்தியா வருவதில் என்ன முரண்? எல்லா இலங்கைத் தமிழர்களும் இந்தியாவை எதிராக/ஆதரவில்லாத நாடாக நினைப்பதான தோற்றம் உங்கள் பின்னூட்டம் வழி எழுகிறது. முதலில் அதில் எந்த உண்மையும் இல்லை. ஈழம் சென்று பாருங்கள், ஈழத்தமிழர்கள் இந்தியா/தமிழகம் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, எதிர்பார்ப்பு என அனைத்தும் விளங்கும். அரசியல் தஞ்சம் என்பது சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்ட உரிமை. பிரபல பத்திரிக்கையாளராக உள்ள நீங்கள் சர்வதேச சட்டங்களின் அடிப்படையிலான உரிமைகளை தெரிந்தவர் என நம்புகிறேன்.

ராம் மகள் அமெரிக்காவில் படிப்பு சம்பந்தமான கேள்வியும், விவாதமும் வலைத்தளத்தில் முடிந்த பிரச்சனை. இலங்கைத் தமிழர்களின் பாஸ்போர்ட் பற்றி வலைப்பதிவாளர் பட்டறையில் நீங்கள் பேசியது பொருத்தமோ, நியாயமோ இல்லாத பேச்சு. வலைப்பதிவு நன்னடத்தைக்கு உதாரணமாக நடந்த பல முக்கிய/மோசமான செயல்கள் (போலி,சல்மா அயூப் ஆபாச பதிவு என பல...) இருக்க பெயரிலியுடனான உங்கள் விவாதமும்...ஈழத்தமிழர் பாஸ்போர்ட்... என உதாரணமானது நுண்ணரசியல் என சொல்வதை தவிர வேறென்ன?

ஈழத்தமிழர் பிரச்சனை பற்றிய உங்கள் பதிவை எதிர்ப்பார்க்கிறேன். அது சம்பந்தமான எனது இடுகையை இங்கே இணைப்பதும் பொருத்தம் என நினைக்கிறேன். http://aalamaram.blogspot.com/2007/08/blog-post_08.html

பாரதி தம்பி said...

//பதிவர் பட்டறையில், நான் ஏதும் உரை நிகழ்தும் எண்ணத்தோடு பதிந்து கொள்ளவில்லை...... ஏதும் முன்கூட்டிய தயாரிப்புகள், திட்டங்களோடு நான் போகவில்லை//

//நண்பர் சிறில் எனக்கு எழுதிய தனி மடலில் சொல்லியிருப்பது போல பெயரிலி கொடுத்த மருநதை அல்லது விஷத்தை அவர்களுக்கே கொடுத்திருக்கிறேன். அவ்வளவுதான்.//

please explain..

மு. சுந்தரமூர்த்தி said...

மாலன்,

1. பொதுமக்களின் கருத்தை, சிந்தனையை பாதிக்கிறவர்கள்--அவர் அரசியல்வாதியாக, நடிகராக, எழுத்தாளராக, இதழாளராக என்று-- யாராக இருந்தாலும் கருத்தியல் ரீதியான விமர்சனத்துக்கு உட்பட்டவரே. இதில் பத்திரிகையாளருக்கு என்று விசேஷ அந்தஸ்து எல்லாம் தேவையில்லை. "தமிழ் தமிழ்" வாய் கிழியும் அரசியல்வாதிகள் தங்கள் பிள்ளைகளை ஆங்கிலப்பள்ளிகளுக்கோ, இந்தி படிக்கவோ அனுப்பப்படுவது விமர்சனத்துக்கு உட்படுபடுத்தப்படுவது போன்று மார்க்ஸியம், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று பேசும் பத்திரிகையாளரின் வாரிசு ஒருவர் ஏகாதிபத்திய நாட்டிற்கு கல்வி பயில அனுப்பபடுவது குறித்து கேள்வி எழுப்பப்படுவது ஒன்றும் பெரிய குற்றமில்லை. அதேபோல இட ஒதுக்கீட்டை அமல் செய்த வி.பி.சிங் அமெரிக்க மருத்துவர்களிடம் சிகிச்சை செய்துகொள்வதை விமர்சனம் செய்யும் இந்திரேசனின் மகன் இடஒதுக்கீடில்லாத, உலகத்தரமிக்க ஐ.ஐ.டிக்களை விட்டு வெளிநாட்டு பல்கலைக் கழகத்துக்கு அனுப்பப்படுவதும் "சொல்வது ஒன்று செய்வது ஒன்று" வகைதான். இவ்விஷயங்கள் பொதுவில் தெரியவரும்போது விமர்சனத்துக்கும், கேள்விக்கும் உள்ளாவது சாதாரணமாக அன்றாடம் நிகழக்கூடியது. இதுபோன்ற வாதங்கள் முதிர்ச்சியற்றவையாக வேண்டுமானால் கொள்ளலாமேயன்றி, எழுத்து நேர்மையின்மையாகவும், நன்நடத்தைப் பிறழ்வாகவும் முன்னிறுத்துவதும் முதிர்ச்சியற்ற செயல்தான்.

2. ஐ.ஐ.டி. யின் முன்னாள் இயக்குனரின் மகன் மேற்கல்விப் படிப்பை/கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதும், ஒரு பிரபல பத்திரிகையின் அதிபர்/ஆசிரியரின் மகள் இதழியல் படிக்க எந்த பல்கலையைத் தேர்ந்தெடுக்கிறார் என்பதும் முழுக்க முழுக்க அந்த குழந்தைகளுடைய முடிவு என்று நீங்கள் வேண்டுமானால் நம்பலாம். ஆனால் இந்தியச் சூழலில் நடைமுறை என்னவென்றால், இந்திராகாந்தியின் மகன் பிரதமராவதற்கும், கருணாநிதியின் மகன்/மகள் அரசியலில் இறங்குவதற்கும், டி.ராஜேந்தரின் மகன் நடிகராவதற்கும், சுந்தர ராமசாமியின் மகன் பத்திரிகை ஆசிரியராவதற்கும், இந்திரேசன், இராம் போன்றவர்களின் பிள்ளைகள் குறிப்பிட்ட துறையை/கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. (இப்படி "கருவிலேயே திருவுற்ற" பேராசிரியர்களின் பிள்ளைகளைக் இந்திய அறிவியற்கழகத்தில்ப் பார்த்து வாய் பிளந்திருக்கிறேன்). உங்கள் வாதம் முதல் தலைமுறையில் படிக்கவோ, அரசியல்/சினிமா/பத்திரிகைத் துறை என்று நுழைகிறவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இராம் இன் மகள் தன் குடும்பத்தில் முதல் தலைமுறையில் படிக்க வந்தவரல்ல. அவருடைய முடிவுகளுக்கு அவர் மட்டுமே காரணம், அவர் தந்தைக்கு எந்த பங்கும் இல்லை என்பது உண்மையாக இருக்காது என்று உங்களுக்கே தெரிந்திருக்கும்.

3. இங்கு விமர்சனத்துக்கு உள்ளானது வித்யா ராமின் சொந்த வாழ்க்கையோ, அவருடைய கருத்துக்களோ அல்ல. அவருடைய தந்தையின் அரசியலும், சொல்லுக்கும்-செயலுக்கும் உள்ள முரண்பாடும் தான் (இதை முரணாகப் பார்ப்பது எனக்கும் ஏற்புடையதல்ல என்பதையும் குறித்து வைக்கிறேன்). அது முரண்பாடல்ல என்று வாதிட்டால் பரவாயில்லை. ஆனால் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை சந்திக்கு இழுப்பதாக வாதிடுவது மிகையாக உள்ளது (குமுதம் வார இதழ், சன் தொலைக்காட்சிச் செய்திப்பிரிவுகளின் தலைமைப் பதவிகளை வகித்த உங்களுக்கு இது தெரியாமலிருக்க வாய்ப்பு இல்லை).

4. அரசியல், சினிமா, எழுத்துப் பத்திரிகை பிரபலங்கள் (உங்களைத் தவிர) வலைப்பதிவுகள் எழுதுவதோ, படிப்பதோ இல்லை. அதேபோல அவர்கள் இயங்கும் களங்களில் வலைப்பதிலகில் இயங்கும் பெருமான்மையானவர்களுக்கு தங்கள் கருத்தை விமர்சனத்தை வெளியிடவோ வாய்ப்பும் இல்லை. ஆகையால் பிரபலங்களைப் பற்றி இங்கு எழுப்பப்படும் கேள்விகள், செய்யப்படும் விமர்சனங்கள் எல்லாம், ஒன்று அவ்விஷயங்களில் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தவும், இரண்டு அப்பிரபலங்களின் ஆதரவாளர்கள் பதிலோ, விளக்கமோ அளிக்கலாம் என்ற நம்பிக்கையிலோ தான். அதன்படியே நிகழவும் செய்கின்றன. சில அரசியல் தலைவர்கள்/கட்சிகள் விமர்சிக்கப்படும்போது ஆதராவாளர்கள் அவர்களின்/அவற்றின் பிம்பங்களை தூக்கி நிறுத்த முயற்சிக்கிறார்கள். சில நடிகர்களுக்காக சிலர் பரிந்துகொண்டு வருகிறார்கள். ஆதரவாளர்களுக்கு அத்தகைய உந்துதலுக்கான தேவை இருக்கிறது. அதே போன்ற ஏதோ ஒரு தேவை ராமின் பிம்பத்தை தூக்கி நிறுத்த உங்களை உந்துகிறது. இது ராமின் அரசியலோடு நீங்கள் ஒத்துப்போவதலோ அல்லது மூத்த இதழாளர் என்றவகையில் அவர் உங்களுக்கு ஆதர்ஷ நாயகராகவோ இருக்கலாம். இராமின்/இந்துவின் பிம்பத்தை நீங்கள் தூக்கி நிறுத்துவது முதல் முறையல்ல. சமீபத்தில் உங்களுக்கும், பெயரிலிக்கும் நடந்த விவாதத்திலும் இது நடந்தது. நீங்கள் பட்டறையில் இதை முன் வைத்துப் பேசியது மீண்டும் அதன் நீட்சியாகவேத் தெரிகிறது. இது ஏதோ எதேச்சையாக கிடைத்த உதாரணமாகத் தெரியவில்லை. "மனம் திறந்து பேசலாம்" என்று சொல்லிவிட்டு மனம் திறந்திருக்கிறீர்கள். மனத்தில் உள்ளது தானாக வந்து விழுந்திருக்கிறது. இது முன்னேற்பாட்டோடு செய்யப்பட்டது என்றும் நான் நம்பவில்லை. இயல்பாக வெளிப்பட்டதாகவே கருதுகிறேன்.

இதுவே இவ்விவாதத்தில் என்னுடைய கடைசிப் பின்னூட்டம்.

commenter said...

அதிக நேரம் உங்களுக்கு இல்லாதிருப்பதால் சில கேள்விகள் மட்டும் [நேரம் இருப்பின் சொல்லுங்கள், உண்மையான, முழுமையான பட்டியலுடன் வருகிறேன் ;) ]
[கேள்விகள் உங்கள் இந்தப்பதிவிலிருந்து மட்டுமே]

1. ஒரு பெண் இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்கிறார் என முழங்கும் தலைப்புச் செய்திகளும், பிறக்கும் போதே பெண் குழந்தைகள், அவர்கள் பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்திற்காகக் கொல்லப்படும் கொடூரமான செய்திகளும் ஒரே நேரத்தில் காதை நிறைக்கும் தேசமாக இருக்கிறது இந்தியா!
இது எம் தாய் நாடு இந்தியாவினை விமர்சிப்பதாக கொள்ளலாமா? வருங்கால வல்லரசின் பெயரை கெடுப்பதாக சொல்லலாமா?

2. எமக்கிடையில் [நானும் மனிதன் தான்;) ] உள்ள முரண்பாடுகள் - விமரிசனங்களுக்கு அப்பாற்பட்டதா?
[எனக்கு அமெரிக்காவில் வெறுப்பு....ஆனால் இப்போதுதான் mcdonaldsல் சாப்பிட்டேன். ;) ]

3.
7 ஒருவர் தனியாக வலைப்பதிவு எழுதும் போது பிரச்சினை ஏதும் இல்லை.அது ஒரு திரட்டியின் மூலம் திரட்டப்படும் போது அது ஒரு பொது
அரங்கமாக ஆகிறது.
8. வலைப்பதிவுகள் பற்றிய கற்பனைகளில் ஒன்று அது கட்டற்ற சுதந்திரம் கொண்டது என்பது. கம்யூனிகேஷன் என்பதில் கட்டற்ற சுதந்திரம்
கிடையாது, இருக்க முடியாது. மொழி மூலமாக வெளிப்படுத்துவது என்னும் போதே சில விதிகளுக்கு உட்படுகிறீர்கள்.அதன் இலக்கணம் சார்ந்து
எழுதுகிறீர்கள்.இரண்டு பஸ்கள் மோதிக் கொண்டது என்று எழுத முடியாது. மோதிக் கொண்டன என்றுதான் எழுத வேண்டும். I is coming என்று எழுத
முடியாது. I am coming You is going அல்ல. You are going. நீங்கள் ஏற்றுக் கொண்ட விதிகளுக்கு


என்னை பொறுத்தவரை வலைப்பதிவு வாசகன் மட்டுமே தான் வசிப்பதை தெரிந்தெடுக்கிறான்.[பதிப்பு/ தொலைக்காட்சி போலல்லாது ]
திரட்டி ஒரு தற்காலிக வடிவம்/கருவி. ஒத்த பண்புள்ள பதிவுகளை [இங்கு தமிழ்! ] திரட்டுவது மட்டுமே [வேண்டுமென்றால் பதிவுகளுக்கு கொஞ்சம் நிறம் தீட்டலாம் ;) ]. நான் எனது சொந்த திரட்டியையும் மிக இலகுவாக உருவாக்கலாம். விருப்பமானால் அதில் நீல/பச்சை/மஞ்சல் இடுகைகளை மட்டும் சேர்க்கலாம். ;)

google search resultsல் உங்களுக்கு தேவைபடாததை சும்மா விட்டு விடுவதில்லையா? அல்லது எனக்கு தேவையானதை மட்டும் தேவையான போது மட்டும் வலையிட உலகை கேட்கலாமா?
[உண்மையில் அன்னப்பறவை பால் பிரித்து குடிக்காவிடினும்] அன்னம் போலல்லாது நல்லவற்றை வலைகளில் பிரித்தல் இலகு.
வசிப்பவரை அடையவைப்பதுடன் திரட்டியின் பணி முடிகிறது. இப்போது இங்கே நான் வந்தது திரட்டிவழி அல்ல.
இணைய கலாச்சாரத்தை பதிப்புலக கலாச்சாரமாக கருத முடியுமா? நான் எழுத்து/ இலக்கண/கருத்து பிழையுடன் எழுதி திரட்டி திரட்ட முடியாதா?
அதற்காக திரட்டி என்னை வலை உலகிலிருந்து திரத்த வேண்டுமா? திரட்டிக்காக தான் வலைநெறியா?


4. 10. கட்டற்ற சுதந்திரம்:
ஒரு தனி மனிதராக இருக்கும் வரை சுதந்திரத்திகுக் கட்டுக்கள் கிடையாது. ஒன்றுக்கு மேற்பட்டவர்களாக ஆகிறபோது சில கட்டுப்பாடுகளுக்கு
உட்பட்டாக வேண்டியிருக்கிறது. தனியாக இருக்கும் போது ஒருவர் நிர்வாணமாகக் கூட இருக்கலாம். ஆனால் வீட்டில் இன்னொருவர் இருந்தால், அது
அம்மாவோ, சகோதரிகளோ, குழந்தைகளோ, ஏன் மனைவியாக இருந்தால் கூட ஒரு பெர்முடாவாவது போட்டுக்க்கொண்டுதான் அலைய
வேண்டியிருக்கிறது. வீட்டை விட்டு வெளியே வரும் போது அதற்குத் தகுந்த மாதிரி உடை அணிய வேண்டியிருக்கிறது. ஒரு சமூகத்தில் ஒன்றுக்கு
மேற்பட்டவர்களோடு சேர்ந்து இயங்கும் போது சில நெறிகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எப்படி ஒரு மொழியை சில
நெறிகளுக்குட்பட்டு வெளிப்படுத்துகிறோமோ அது போல நம் வெளிப்பாடு சில நெறிகளுக்குட்பட்டு இயங்க வேண்டியிருக்கிறது. எனவே எந்த
ஊடக்மும் கட்டற்ற ஊடகமாக இருக்க முடியாது. அப்படி இருக்க வேண்டும் என்பது நம் விழைவு.

நீக்கள் உடை உதாரணம் எடுத்ததால் மட்டும் - நிர்வாண பூக்காக்களுக்கு / topless கடற்கரைகளுக்கு போயிருக்கிறீர்களா? அந்த உலகில் உடை கட்டுபாடுகள் இல்லை. இணைய உலகில் இல்லாத சிலவற்றைப் போல.
அந்த உலகை எமது நெறிமுறைகளுக்கு உட்படுத்த முடியாதது போல, வெள்ளையரை வேட்டி கட்டி மணமுடிக்கவைக்க முடியாததுபோல, வலையுலகை பதிப்புலக நெறிமுறைகளுக்கு உட்படுத்த முடியுமா?
[ ஒரு அறைக்கு உள்ளேயான நெறி, அறைக்கு வெளியே வேறுபடுவதைப் போல]
இணையத்தில் எத்தனை வீதம் நெறிகளுக்குட்பட்ட விடையக்கள் உள்ளன?

5. இலங்கை பிரச்சனையில் மாற்றப்படமுடியாத உங்கள் நிலை தெரிவதால் - பரிதாபப்படுவதை தவிர ஒரு கேள்வியும் இல்லை.
வலையில் நெறிபட எழுதி பின்னோட்டங்களுக்கும் பதிலளிக்கும் வலி எனக்கில்லை - அகதியாய் அலையும் வலையைபோல [not in comparable terms] . அதனால் அதை பற்றி கொச்சைப்படுத்த விரும்பவில்லை.
நான் அறிந்திருப்பதை பிழை என்று யாரும் சொன்னால் - நான் அது ஏன் பிழை என்றுசொல்கிறார்கள் என அறிய முயல்வேன். அப்படி மற்றவர்களும் இருக்கவேண்டும் என நான் நினைப்பது தவறா? அல்லது நான் நினைப்பதை மற்றவர்கள் மீது அழுத்துகிறேனா?

மாலன் said...

அன்பிற்குரிய மாலன்,

நீங்கள் பேசத் தொடங்கும் போது "நன்னடத்தை என்ற சொல் வேண்டாம், சுய ஒழுங்கு, கட்டுப்பாடு ......." என்ற

பொருளில் தொடங்கினீர்கள். பின்னால் "policy பற்றியெல்லாம் இங்கு பேசவேண்டாம்" என்றீர்கள்; "சரி,

நன்றாகத் தொடங்கியிருக்கிறார் அவர் சொல்ல நினைக்கிற சுய கட்டுப்பாடுகள் பற்றிப் பேசப்போகிறார்" என்று

நினைத்தேன். பேச்சு கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து, பெயரிலியின் வாசகத்துள் திடீரென்று நுழைந்து,

புலம்பெயர் ஈழ மக்களின் கடவுச்சீட்டில் நுழைந்தது தேவையில்லாது என்றே நான் நினைத்தேன்; இப்பொழுதும்

நினைக்கிறேன். [இராமின் மகள் பற்றிய பேச்சு "படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்" என்ற

கருத்தில், அவருடைய நிலைபாட்டில் "ஒத்திசைவு இல்லாமை - inconsitency" பற்றிப் பெயரிலி கூற்றில்

வந்தது. இன்றைக்கு இந்து ராம் வெறும் நாளிதழ்காரர் மட்டுமல்ல; பொதுவாழ்வில் பொள்ளிகை (policy)

பற்றியெல்லாம் பேசிப் பொதுக்கருத்தைத் தன் கூற்றுகளால் திசைதிருப்பக் கூடியவர் தான். செயலலிதா அரசில்

அவர் மேல் ஏற்பட்ட தாக்கத்தைப் பொதுத் தாளிகைத் துறையின் மேல் ஏற்பட்ட தாக்கமாக மாற்றிய போதே,

அவருடைய நீட்சி எங்கெல்லாம் போகமுடியும் என்பது பலருக்கும் விளங்கியது. நண்பரே! எல்லோருக்கும்

இலங்கா ரத்னா சட்டென்று கிடைத்துவிடாது. சிங்கள அரசு இவருக்கு நன்றி சொல்ல அடிப்படையில்

விழைந்திருக்கிறது. பல தமிழர்கள் அந்தப் பட்டம் அவருக்குக் கிடைத்ததையும், அவர் அதை மகிழ்வோடு

ஏற்றுக் கொண்டதையும் கூர்ந்து கவனியாது இருக்க முடியாது. அடுத்து, எப்படிக் கலைஞரின் மக்கள் பற்றிய

கவனிப்பு தமிழ்க் குமுகாயத்தில் சிறிதும் குறையாதோ, அதே போல இந்துராமின் மகள் பற்றிய கவனிப்பு

ஏற்படுவதும் தவிர்க்க முடியாதது. Mr. Ram is today a public person and not just a journalist or an editor.

People tend to observe him closely, Sir.]

இந்த விதயங்களில் உங்கள் கருத்து மாறுபட்டு இருப்பதில் உங்களுக்கு உரிமை உண்டு. ஆனாலும், இப்படிப்

பதிவர் பட்டறை போன்ற ஒரு நிகழ்ச்சியில் இந்த எடுத்துக் காட்டுக்கள் வேண்டுமா? பெயரிலி சொன்னது

உங்கள் ஆழ்மனத்தில் தைத்திருப்பதால் சட்டென்று சொல்லிவிட்டீர்கள் போலும். அதே போல, புலம்பெயர் ஈழ

மக்கள் இலங்கையில் இருந்து வெளிவந்து, உயிர்பிழைத்து, வாழ்வு கருதி, பல்வேறு நாடுகளுக்குப் பெயர்வதும்,

அதையொட்டித் தாங்கிக் கொள்ளும் சரவல்களும் சோகம் நிறைந்தவை என்று உங்களுக்குத் தெரியாததா?

அப்படிப்பட்ட புலம் பெயர்வை ஒட்டிய கடவுச் சீட்டு பற்றிப் பேசுவது பொருத்தமாகத் தோன்றுகிறதா?

பல தமிழர்களுக்கும் இலங்கா ரத்னா இந்து ராமின் மேல் இருக்கும் கோவம் என்னவென்றும் உங்களுக்குத்

தெரியாதா? ஈழத்தில் நடக்கும் நிகழ்வுகளைத் தமிழர் பக்கத்தில் இருந்து பதியவே மறுக்கும் இந்தியத் தாளிகை

உலகு எப்பேற்பட்ட கண்மறைப்பைச் செய்து கொண்டு இருக்கிறது? என்ன தான் ஹமாஸ் மீது கோவம்

உள்ளூர இருந்தாலும், அரபுத் தாளிகைகளும், நாளிதழ்களும் பாலத்தீனச் செய்திகளை பாலத்தீன நோக்கில்

இருந்து போடாமல் இருப்பதே இல்லை; வெறுமே இசுரேல் பக்கத்துப் பார்வைச் செய்திகள் மட்டுமே அங்கு

வெளியாவதில்லை. அதே போல, ஒருகாலத்தில் அயர்லாந்துத் தாளிகைகள் ஸின் வெய்ன் செய்திகளை விடாது

சொல்லிவந்தன.

உலகமெங்கும் தேச விடுதலைப் போர்களின் பக்கம் உள்ள பார்வை இந்த அளவிற்குத் தூக்கியெறியப் பட்டு

ஓரப் பரப்புரை நடப்பதில்லை. தமிழ்நாட்டில் மட்டும் தான் இப்படி ஒரு கண்ணாம் பூச்சி தொடர்ந்து நடக்கிறது.

சரி, செய்திகள் தான் வெளியிடவில்லை. அவர்கள் இலங்கைக் கடவுச் சீட்டைக் கையில் வைத்திருப்பதையும்

நீங்கள் முரணாகச் சொல்ல முயன்றால் என்ன சொல்வது? தமிழீழம் மலரும் வரை, இலங்கைக் கடவுச்

சீட்டைக் கையில் வைத்திருக்காமல் அவர்கள் என்ன செய்ய முடியும்? ஏதிலிகளளகத் தொடருவது தான்

வாழ்வா?

அய்யா, நமக்குள் தமிழ்நேயம் கூட வேண்டாம்; ஓர் அடிப்படை மனிதநேயம் இருந்தாலே, அவர்கள் படுகின்ற

இழப்புக்கள் நமக்குப் புரியுமே? ஒரு 35 கி.மீ. தள்ளி உள்ள மக்களைப் பற்றிய செய்திகளை அறியவிடாமல்,

இவ்வளவு இருட்டடிப்பா?

இன்னொரு வகையில் பார்த்தால், எனக்கு வியப்பு இல்லை. அருகில் உள்ள கன்னடத்தில், வீரப்பனின் தேடுதல்

வேட்டையின் போது, அவர்கள் எல்லைப்பக்கம் இருந்த தமிழர்களைப் பிடித்துக் கொண்டு போய் உள்ளே

போட்டு, ஏழெட்டு ஆண்டுகளாய் வைத்து இருக்கிறார்களே? {இனக் கலவரம் செய்தவர்கள் வெளியே

இருக்கிறார்கள்.] தமிழ்நாட்டு அரசியல் வாதிகளும், தாளிகைத்துறையும் இன்றுவரை என்ன கூப்பாடு

போடுகிறார்கள்? நம்மூர் மக்களுக்கே நாம் குரல் கொடுக்கவில்லையே? இருட்டடிப்புத் தானே நடக்கிறது.

அப்புறம் ஈழத்து மக்கள் பற்றியா ஆதரவாய்ப் பேசப் போகிறோம்?

நாமெல்லோரும் "ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்" என்று பாடிக்

கொள்ள வேண்டியது தான். அய்யா, சில போதுகளில் தமிழர் என்று சொல்லிக் கொள்ள வெட்கமாகத் தான்

இருக்கிறது.

நண்பரே! பொறுமையாகச் சிந்தியுங்கள், புலம்பெயர் ஈழ மக்களின் கடவுச்சீட்டு பற்றிய எடுத்துக் காட்டு, வெந்த

புண்ணில் வேல்பாய்ச்சுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. உங்களிடம் இருந்து அது வந்திருக்க வேண்டாம்.

அன்புடன்,
இராம.கி.




Posted by இராம.கி to என் ஜன்னலுக்கு வெளியே... at 12:13 PM


பெருமதிப்பிற்குரிய இராம்.கி ஐயா அவர்களுக்கு

வணக்கம். நீங்கள் இந்த விவாதத்தில் வந்து கல்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியும், மன ஆறுதலும் அளிக்கிறது.

நீங்கள் உணர்ச்சிவசப்படாமல், என் கருத்து உங்களுடைய கருத்துக்களோடு உடன்படாமல் போனாலும் கூட

அது ஒருவரது கருத்து என்கிற அளவிலே புரிந்து கொள்வீர்கள், அப்படி ஒரு கருத்துக் கொண்டிருப்பதற்க்காக்

என்னை ஏளனம் செய்ய்வோ, வசைபாடவோ மாட்டீர்கள் என்பது ஆறுதலுக்குக் காரணம். எனவே உங்களுட்ன்

ஒரு விவாதம் சாத்தியம். என் சிந்தனைகளை அச்சமின்றி உங்களுடன் பகிர்ந்து கொள்வது சாத்தியம்.

என் பேச்சில் எதன் தொடர்ச்சியாக, எந்த context ல் நான் இலங்கைத் தமிழரின் கடவுச் சீட்டுப் பற்றி

குறிப்பிட்டேன் என்பதை சற்று நினைவுபடுத்திப் பாருங்கள். இலங்கை அரசியல் பற்றிப் பேசுமபோது அல்ல.

இன்னும் சொல்லப்போனால் அன்று இலங்கை அரசியல்பற்றியோ, இந்திய அரசியல் பற்றியோ நான்

பேசவில்லை. அதற்கான களம் அதுவல்ல என்கிற புரிவு எனக்குண்டு.

கருத்து ரீதியாக எதிர் எதிர் நிலை கொண்டவர்கள், வாழ்க்கை யதார்த்தத்திற்க்ளின் காரணமாக தனிப்பட ஓர்

உறவு நிலையை மேற்கொள்வதுண்டு என்பதற்கு பல உதாரணங்கள் கொடுத்தேன். அதில் ஒன்று இலங்கைத்

தமிழர் இலங்கை அரசு அளித்த கடவுச்சீட்டைக் கொண்டு நாட்டைவிட்டு வெளியேறுவது.

அகதிகளாக படகேறி இந்தியக் கரைக்கு வருகிறவர்கள், விமானமேறி அய்லகங்களுக்குச் செல்பவர்களைப்

போல குடியேறல், சுங்க கடமைகளை (Formalities) ஏறும் இறங்கும் இடங்களில் நிறைவு செய்து அதன்

பின்னர்தான் அனுமதிச் சீட்டின் அடிப்படையில் வருகிறார்களா என்பது எனக்கு உறுதியாகத் தெரியாது.

அவர்கள் அவசரமான சூழலில் கிடைக்கிற படகில் (சில சமயம் நிறையப் பணம் கொடுத்து) வருகிறார்கள்

என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். என்வே என் பேச்சில் நான் குறிப்பிட்டது அவர்களை அல்ல.

படித்த நடுத்தர வர்க்கம், மேல்தட்டு வர்க்கம்தான் , ஆங்கிலத்தில் inteligensia என்று சொல்வார்களே

அவர்களும் அவர்கள் குடும்பத்தினரும்தான், உதாரணத்திற்குச் சொல்வதென்றால் பெயரிலி போன்றவர்கள்தான்,

விமானம் பிடித்து அயல்கங்களுக்குக் குடியேறுகிறவர்கள். அவர்களது செயலுக்கும் அவர்களது

அரசியல்நிலைக்குமிடையே ஒத்திசைவு இல்லை. முரண்பாடுதான் இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் ராமின்

முரண்பாடுகளை விவாதப் பொருளுக்குத் தேவையற்று பின்னூட்டத்தின் மூலம் விமர்சித்து எழுதுகிறார்கள்!

ராம் ஒரு பொது நபர் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவர் ஒரு பத்திரிகையாசிரியர் என்பதைத் தவிர வேறு

எந்த வகையில் பொதுநபர்? ராம் மட்டுமல்ல, செல்வாக்குள்ள எல்லாப் பத்திரிகையாசிரியர்களும் பொதுக்

கருத்தை உருவாக்கக் கூடியவ்ர்கள்தான். Influencing the public opinion என்பதுதான் பத்திரிகைகளின் கையில்

இருக்கக் கூடிய ஒரே பலம். ஜெயலலிதா அரசு அவருக்கெதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளை

பொதுத்தாளிகைகள் மீதான நடவடிக்கையாக சித்த்ரிக்கப்பட்டபோதே அது உறுதியாக வெளிப்பட்டது என்பது

போல் கருத்துத் தெரிவித்துள்ளீர்கள். அது சட்டமன்றத்திற்கும் பத்திரிகைத்துறைக்கும் இடையே நடந்த

மோதல். பத்திரிகைத்துறையில் எவர் மீது அரசு அதிகாரம் நியாயமற்றுப் பாய்ந்தாலும் அதைப் பத்திரிகைத்

துறை தன்மீது பாய்ச்சப்பட்டதாகவே கருதி ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இது எமெர்ஜன்சியிலிருந்து

நாங்கள் கற்ற பாடம். ஓர் எடுத்துக்காட்டு. விழுப்புரத்தில் தமிழக அரசுக் கிட்டங்களில் பொதுவிநியோகத்திற்காக

சேமிக்கப்பட்டிருந்த அரிசி தரம் குன்றியதாக இருப்பதாக்க் கேள்விப்பட்டு அன்று எதிர்கட்சி சட்டமன்ற

உறுப்பினராக இருந்த டாக்டர்.பொன்முடி சோதனைக்குப் போனார். அதைப்படமெடுக்க சன் தொலைக்காட்சியின்

நிருபர் திரு சுரேஷும் உடன் சென்றிருந்தார். சுரேஷை காவல்துறை கைது செய்து கடலூர் சிறையில்

அடைத்தது. அதை எதிர்த்து நான் உள்பட சென்னையிலுள்ள பல்வேறு பத்திரிகைகயாளர்கள் தினமணி

ஆசிரியராக இருந்த சம்பந்தம் உள்பட வீதியில் இறங்கிப் போராடினேம். நாங்கள் வேப்பேரிக்

காவல்நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டோம். நான் இறங்கிப் போராடியதையாவது என் சகா

ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிரான போராட்டமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் மற்ற

பத்திரிகையாளர்கள் ஏன் வந்தார்கள்? ஏனெனில் அது பத்திரிகைத்துறைக்கு எதிரான போராட்டம். இதனால்

சுரேஷ் செல்வாக்குள்ள பொது ந்பராகிவிட்டாரா? இன்னொரு எடுத்துக்காட்டு: நக்கீரன் இதழ் நிருபரை,

வீரப்பனுக்கு உளவு சொல்பவர் எனக் காரணம் காட்டி கைது செய்துவிட்டது. அவரை விடுவிக்கக் கோரி,

அன்றைய கர்நாடக முதல்வர் எஸ். எம். கிருஷணாவை சந்திக்க ஒரு தூதுக் குழு சென்றது. ராம், நான்,

வாசந்தி, கல்கி ராஜேந்திரன் ஆகியோர்தான் அந்த தூதுக் குழு. எங்களில் எவருக்கும் நக்கீரன் பாணி இதழியலில்

உடன்பாடு கிடையாது. ஆனால் நாங்கள் ஏன் சென்றோம்? எங்களைப் பொறுத்தவரை அது பத்திரிகைகள்

மீதான தாக்குதல்.

விமர்சன்ம் ராமைப் பற்றியது மட்டுமல்ல. ராமின் மகள் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படிக்கச்

சென்றதைப்பற்றி. ராமின் மகள் தன் வாழ்வைத் தானே தீர்மானித்துக் கொள்ளும் வயதை எட்டியவர். அது ஏன்

அவர் எடுத்த முடிவாக இருகக்கூடாது? அவரும் ராமைப் போல மார்க்சீயக் கொள்கை கொண்டவர்தானா என

பெயரிலிக்குத் தெரியுமா? ராம் சீன ஆதரவாளர், எனவே அவரது மகள் அமெரிக்காவிற்குப் படிக்கச் சென்றது

அவருடைய inconsitencyயைக் காட்டுகிறது என்பதுதான் வாதமானால், அந்த முடிவு ராமின் மகளால்

எடுக்கப்பட்டிருந்தால் அந்த வாதமே அர்த்தமற்றதாகிவிடுகிறது. ராமின் மகள் இங்கிலாந்து பிரஜையான

சூசனின் ம்களுமாவார். இது ஒருவேளை சூசன் எடுத்த முடிவாக இருந்திருந்தால்? இங்கிலாந்தும்

அமெரிக்காவும் ஒன்றை ஒன்று ஆரத் தழுவிக் கொண்டுதானே இருக்கிறது?

இலங்கைத் தமிழ்ர்கள் அகதிக்ளாக அலையும் நிலைமை அனுதாபத்திற்குரியதுதான். வருத்தமளிப்பதுதான்.

அரசியல் தலைமைகள் மேற்கொள்ளும் தொலைநோக்கற்ற முடிவுகளால் அல்லல்களுக்கு உள்ளாவது

எப்போதுமே சாதாரணப் பொதுமக்கள்தான். இது இலங்கையில் மட்டுமல்ல, வங்க தேசத்தில், காஷ்மீரில்,

இராக்கில், இன்னும் பலப்பல பகுதிகளில். இதற்கு மாற்று அந்த அரசியல் சூழலை மாற்றுவதுதான். அதை மாற்ற வேண்டுமானால் அரசியல் தலைமையை மாற்ற வேண்டும்.

1840-1850 காலகட்டத்தில், இலங்கை மலையகத்தில் காபித் தோட்டங்களை அமைக்கவும் அவற்றில்

உழைக்கவும், தமிழகத்திலிருந்து பல ஆயிரக்கணக்கில் தமிழர்கள் பிரிட்டீஷ்காரர்களால் ஆசைகாட்டியும்

மிரட்டியும் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு அவர்கள் சந்தித்த துன்பங்கள் ஏராளம். பிரிட்டீஷ் அரசிற்குப்

பணியாற்ற யாழ்ப்பாணத் தமிழர்களிடமிருந்து ஆங்கிலக் கல்வி மூலம் படித்த நடுத்தர வர்க்கம்

உருவாக்கப்பட்டதைப் போல இவர்களிடம் ஒரு வகுப்பு தோன்ற இடமளிக்கப்படவில்லை. அதனால்

அவர்களுக்குப் பொதுவிஷயங்களில் குரல் ஏதும் இல்லை. 1948ல் ஆங்கிலேயர் வெளியேறியபோது

இவர்களுக்கு வாக்குரிமைகள் அளிக்கப்படவில்லை. அப்போது இந்தத் தமிழர்களுக்காக யாழ்ப்பாணத்

தமிழார்கள் போராடினார்களா? இலங்கையிம் முதல் பொதுத் தேர்தலில் இவர்கள் வாக்களிக்க

அனுமதிக்கப்பட்டார்கள். அதன் விளைவாக இந்தப் 10 லட்சம் இந்தியா வம்சாவளியினர் 7 பேரை

நாடாளுமன்றத்திற்கு அனுப்பினர்.இந்த அரசியல் விழிப்பு இலங்கை அரசியல் தலைமைகளிடம் (Political

Establishment) அச்சத்தை ஏற்படுத்தியது. அடுத்த தேர்தலில் அந்தப் பத்து லட்சம் பேரின் வாக்குரிமைகளும்

பறிக்கப்பட்டன. இதை எதிர்த்து யாழப்பாணத் தமிழ் அரசியல்வாதிகளிடம் எந்தக் கொந்தளிப்பும் ஏற்படவில்லை.

அப்போது எங்கே போயிற்று தமிழ்நேயம்? அன்று அந்தப் பத்து லட்சம் தமிழர்களும் வாக்குரிமை பெற்றிருந்தால் ஒரு வேளை இன்று இலங்கை அரசியலின் போக்கைத் தீர்மானிக்கும் சாவி தமிழர்கள் வசம் இருந்திருக்கக் கூடும்.இன்று இந்திய அரசின் உறுதிப்பாட்டைத் தீர்மானிக்கும் ஆற்ற்ல் தமிழக அரசியல் கட்சிகளிடம் இருப்பதைப் போல. ஆனால் நாடாளுமன்றத்திற்கு ஏழு பேரை அனுப்பும் வல்லமை கொண்ட

இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றேனும் ஒருநாள் நம்மோடு போட்டியிடக் கூடிய ஒரு அதிகார மையமாக

உருவாகக் கூடும் என்ற சுயநலம்தான் இலங்கைத் தமிழ்ப் பிரசினையின் முக்கிய திருப்பம்.

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் யோசித்துப்பாருங்கள். இதே போல தென்னாப்ரிக்காவிற்குக் கூலித்

தொழிலாளர்களாகக் கொண்டு செல்லப்பட்டவர்களை ஒன்றாகத் திரட்டித்தான் காந்தியும் அவரது அறிவுலக

நண்பர்களும் சிவில் உரிமைக்குப் போராடினர். மொழி, பிராந்தியம் ஜாதி, வர்க்கம், இந்து முஸ்லீம் பேதங்கள்

இவ்வாறு பல்வேறு காரணங்களால் பிரிந்து கிடந்தவர்களை இந்தியர் என்ற ஒரு அடையாளத்தின் கீழ் திரட்டி

அவர்களுக்குக் குரல் கொடுக்க காந்தியால் முடிந்தது. ஒரே மொழி பேசுபவர்களது உரிமைக்குக் குரல் எழுப்ப

இயலாமல் யாழ்ப்பாணத் தலைமை கிடந்தது.

இன்று இவர்கள் இந்தியாவை விமர்சிக்கிறார்கள்.காந்தி எந்தப் பாஸ்போர்ட்டில் இங்கிலாந்து சென்றார் என்கிறார்கள்! காந்தியின் தென்னாப்ரிக்க முயற்சிகளுக்கு இங்கிருந்து ஆதரவளித்த் சுதேசமித்ரனைப் பழிக்கிறார்கள்!.

இன்றும் கூட 25 ஆண்டு ய்த்த்த்திற்குப் பின்னும் இலங்கைத் தமிழ்ர்களும் சிங்களவர்களும் ஒருவரை

யொருவர் போரில் முற்றாக வென்றுவிடமுடியவில்லை.போரின் மூலம் இரண்டு தரப்புமே தங்கள்

இலக்குகளை இறுதியாக எட்டமுடியாது என்பதுதான் இன்றைய யதார்த்தம். இந்த யுத்த்தில் இறந்தவர்கள்,

முடமானவர்கள், புலம் யெர்ந்தவர்கள், கல்வி வாய்ப்பை இழந்தவர்கள், தொழில், வேளாண் ஆதாரங்களை

இழந்தவர்கள் எல்லாம் கூட்டிப்பார்த்தால் லட்சக்கணக்கில் இருக்கும். போருக்கு மாற்றான ஒரு குரலை

உருவாக்க புலம் பெயர்ந்து போன பெயரிலி போன்ற அறிவுஜீவிகளால் முடிந்திருக்கிறதா? அதற்காக ஒரு

துருமபைக் கூடக் கிள்ளிப் போடாமல், செள்கரியமாக அமர்ந்து கொண்டு இந்திய ஊடகங்களை, ஊடக

ஆசிரியரின் குடும்பத்தை, இந்திய அரசியல் தலைவர்களை நக்கலடித்துக் கொண்டும் நையாண்டி பேசிக்

கொண்டும் இருக்கிறார்கள். இந்திய ஜனநாயகம் பிழையற்றதல்ல. ஆனால் அதை நெறிப்படுத்துவதில் இந்திய

ஊடகங்களும் இந்திய அறிவுலகமும் அவ்வப்போது பங்களித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

ஒரே மொழி பேசும் இரு நாட்டினரது அரசியலும் ஒன்றே போலானது அல்ல. என்வே மொழியைத் தாண்டிய

அரசியல் நிலைகள் அவசியமாகிறது.இதை நீங்களும் சிந்திப்பீர்கள் என்று நம்புகிறேன்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

மாலன்,

வலைப்பதிவுலகத்தையே முடக்குவது போல் பிரச்சினைக்குள்ளாக்கிய விசயங்கள் போலி டோண்டு, சல்மா அயூப் போன்றவை. அதைப் பற்றி பேசாமல் அண்மைய பிரச்சினை என்ற அடிப்படையில் ராம் மகள் குறித்த பெயரிலி கூறிய கூற்றை எடுத்துக்காட்டாக வைத்து இருக்கிறீர்கள். தனி நபர், குடும்பத்தை விமர்சிப்பது தான் பிரச்சினை என்றால் ஒவ்வொரு நாளும் ராமதாஸ் முதல் ஜார்ஜ் புஷ் குடும்பம் வரை தமிழ் வலைப்பதிவுகளில் விமர்சிக்கப்படுகிறது. அவற்றைக் குறிப்பிட்டு இருக்கலாம். ராம் மகள் பற்றிய கூற்று உங்களைத் தவிர யாருக்கும் பிரச்சினையாகத் தோன்றியதாகத் தெரியவில்லை. அப்படியே அது விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினை என்றானாலும், இது போன்ற குடும்பம் சார்ந்து குறிப்பிடுவதைத் தவிர்க்கலாம் என்று கூறியிருந்தால் அது கவனிக்கப்பட வேண்டிய கருத்தாக இருந்திருக்கும். அதை விடுத்து ராம் மீது எந்தத் தப்பும் இல்லை என்று நிறுவுவதற்கான களமாகப் பதிவர் பட்டறையின் நேரத்தை நீங்கள் விழுங்கி இருக்க வேண்டாம்.

//அவர்களது தனிநடத்தைகள் அவர்கள் கொண்டுள்ள கருத்தின் மீது நம்பிக்கைக் குறைவை ஏற்படுத்துகிறது என்றால் அந்தக் கருத்தை நிராகரிக்கும் உரிமை மக்களுக்கு உண்டு.
//

அவருடைய தனி நடத்தை என்ன என்று நாலு பேர் இப்படி பொதுவில் எடுத்துரைத்தால் தான் மக்களுக்குத் தெரியும். எடுத்துரைப்பவர்கள் கூறுவது உண்மை தானா என்று மக்கள் பகுத்துணர்ந்து பிறகு ராம் மீதான தீர்மானத்துக்கு வரலாம். ஆனால், யாருமே எடுத்துரைக்காவிட்டால் அவரின் பொது வாழ்க்கைக் கருத்துக்களுக்கும் தனி வாழ்க்கைச் செய்கைகளுக்கும் உள்ள ஒத்திசைவை எப்படி அறிவது?

பெயரிலியின் செய்கையை மட்டும் விமர்சிக்காமல் அவரின் பின்புலத்தை குறிப்பிட்டு (அதாவது வெளிநாட்டில் வீடு கட்டி நன்றாக இருக்கிறார் என்று)நீங்கள் விமர்சிப்பது கூட என் பார்வையில் தனி நபர் தாக்குதல் தான்.

சிறில் உங்களுக்குத் தனி மடலில் எழுதியதை பொதுவில் மேற்கோள் காட்டி மறுமொழி எடுப்பது கூட வலைநெறிப் பிறழ்வு தான்.

// ஓகை said...
திரு மாலன் அவர்களே,

பதிவர் பட்டறையில் நன்னடத்தை என்ற தலைப்பில் ஓர் உரை நிரலில் சேர்க்கப்பட்டதே எனக்கு அபத்தமாக இருக்கிறது.
//

இதே போன்ற கருத்தை இன்னும் சில இடங்களிலும் வேறு சிலர் சொல்லப் பார்த்த நினைவு. ஐயா, பட்டறை நிகழ்ச்சி நிரல் கிட்டத்தட்ட ஒரு மாதமாகப் பொதுவில் தான் வைக்கப்பட்டிருந்தது. அப்போது இதைச் சொல்லி இருக்கலாமே? ஆலோசித்து முடிவெடுத்து இருக்கலாம். இப்ப ஒரு சர்ச்சை வந்த பிறகு தலைப்பு வைத்ததே தவறு என்று சொல்வது எளிது.

மாலன், இப்பின்னூட்டம் உங்கள் கவனத்திற்காகவே. உங்கள் நிலைப்பாடு, விளக்கம் தெளிவாகப் புரிகிற நிலையில் தொடர்ந்து வாதிட விரும்பவில்லை. இது குறித்து இதுவே என்னுடைய கடைசி மொழி. பொறுமையாக உங்கள் நிலையை விளக்கியதற்கு நன்றி.

மாலன் said...

அன்புள்ள திரு,

>>உயிருக்கு பயந்து நாட்டைவிட்டு வெளியேறும் அகதிகள் இந்தியா வருவதில் என்ன முரண்?<<

என் கருத்து அகதிகள் இந்தியா வருவதைப் பற்றி அல்ல என்பதை போதுமான அளவிற்கு விளக்கிவிட்டேன்.மேலே உள்ள விளக்கங்களைக் காண்க.

>>எல்லா இலங்கைத் தமிழர்களும் இந்தியாவை எதிராக/ஆதரவில்லாத நாடாக நினைப்பதான தோற்றம் உங்கள் பின்னூட்டம் வழி எழுகிறது. முதலில் அதில் எந்த உண்மையும் இல்லை. ஈழம் சென்று பாருங்கள், ஈழத்தமிழர்கள் இந்தியா/தமிழகம் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, எதிர்பார்ப்பு என அனைத்தும் விளங்கும்.<<

உண்மை இல்லை என்றால் மகிழ்ச்சி. ஆனால் இந்தியாவைப் பற்றிய எதிர்மறையான எண்ணங்கள் இலங்கைத் தமிழர் பதிவுகளிலும், இலங்கை ஊடகங்களிலும் ஏராளமாகவே விதைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியா உதவி செய்தால் உள்நோக்கத்தோடு செய்வதாகச் சொல்வதும், இந்தியா தலையிடாமல் சும்மா இருந்தால், அலட்சியம் காட்டுவதுமான தோற்றங்கள் கட்டியெழுப்பட்டிருக்கின்றன.

நாம் பேசுவது இலங்கையை விட்டு வெளியேறி, செளகர்யமாக விடுதலைப் புலிகளை தடை செய்த நாடுகளில் உட்கார்ந்து கொண்டு, இந்தியாவை நக்கலடிக்கிற இலங்கைத் தமிழர்களைப் பற்றி. ஈழத்தில் போரைத் திணித்த தலைமையை எதிர்க்கவும் முடியாமல், நிராகரிக்கவும் துணியாமல், மார்றுக் குரலைக் கூட எழுப்ப சக்தியற்றுக் கிடக்கும் தமிழர்களைப் பற்றி அல்ல். விவாதம் வேறு ஒரு தளத்தில் நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

>>ராம் மகள் அமெரிக்காவில் படிப்பு சம்பந்தமான கேள்வியும், விவாதமும் வலைத்தளத்தில் முடிந்த பிரச்சனை. இலங்கைத் தமிழர்களின் பாஸ்போர்ட் பற்றி வலைப்பதிவாளர் பட்டறையில் நீங்கள் பேசியது பொருத்தமோ, நியாயமோ இல்லாத பேச்சு. வலைப்பதிவு நன்னடத்தைக்கு உதாரணமாக நடந்த பல முக்கிய/மோசமான செயல்கள் (போலி,சல்மா அயூப் ஆபாச பதிவு என பல...) இருக்க பெயரிலியுடனான உங்கள் விவாதமும்...ஈழத்தமிழர் பாஸ்போர்ட்... என உதாரணமானது நுண்ணரசியல் என சொல்வதை தவிர வேறென்ன?<<

எனக்கு எது முக்கியம் என்று தோன்றுகிறதோ அதைப் பற்றிப் பேசுகிறேன். அதைக் குறித்து சுந்தரமூர்த்திக்கு அளித்த விளக்கதில் எழுதியிருக்கிறேன். அவரவர் அவரவருக்கு முக்கியமான விஷய்த்தைப் பற்றிப் பேசுவது முதலில் பேசுவது இயல்பு. வேறு விஷயங்கள் முக்கியமானவை என்று மற்றவர்கள் கருதினால் அதைப் பற்றி அவர்கள் அங்கு கேள்வி எழுப்பியிருக்கலாம். ஆனால் யாரும் அன்று எழுப்பவில்லை.

>>ஈழத்தமிழர் பிரச்சனை பற்றிய உங்கள் பதிவை எதிர்ப்பார்க்கிறேன்<<

எழுதுகிறேன். ஒரு நெடுந்தொடராக, குறைந்த பட்சம் நான்கைந்து பதிவுகளாக, எழுதப்பட வேண்டிய விஷய்ம் என்பதால் ந்வம்பர் இறுதியிலோ, புத்தாண்டிலோ எழுத்லாம் என்றிருக்கிறேன். (இன்ஷா அல்லாஹ்) ஆனால் பதிவுகளில் காணப்படும் உனர்ச்சித் தீவீரங்களும், மிகை எதிர்வினைகளும் அதை எழுதுவதற்கான ஊடகம் பதிவுகள்தானா என்ற கேள்வியையையும் என்னுள் எழுப்பியிருக்கிறது. எனவே யோசித்துவிட்டு முடிவெடுக்கிறேன். ஆனால் என்றேனும் ஒரு நாள், எதேனும் ஒரு ஊடகத்தில், எனக்குத் தெரிந்த மொழி ஒன்றில், இலங்கைப் பிரசினையை இந்தியப் பார்வையில் எழுதுவேன்.

அன்புடன்,
மாலன்

வெற்றி said...

மாலன் ஐயா,

/* இவர்களுக்கு வாக்குரிமைகள் அளிக்கப்படவில்லை. அப்போது இந்தத் தமிழர்களுக்காக யாழ்ப்பாணத்

தமிழார்கள் போராடினார்களா? */

வரலாற்றைத் தெரியாவிட்டால், தயவு செய்து தெரிய முயலுங்கள். இல்லாத பொய்யை அவிட்டு விடாதீர்கள். வழமை போல வரலாற்றைத் திரிக்காதீர்கள். தந்தை செல்வநாயகம் எதிர்த்துப் பேசியது மட்டுமல்ல நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவுக்கு எதிராகவும் வாக்களித்தார். அது தெரியுமா உங்களுக்கு?

தந்தை செல்வா இச் சட்டத்தின் போது பேசிய நாடாளுமன்ற உரையைப் படித்திருக்கிறீர்களா?

"இன்று எமது சகோதரர்களான மலையகத் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப் படுகிறது. நாளை இது எமக்கும் நடக்கும்" என்று நாடாளுமன்றத்தில் முழங்கியது இலங்கை நாடாளுமன்றக் குறிப்பிலேயே உள்ளது.

மலையக மக்களின் உரிமை பறிக்கப்படும் மசோதவை எதிர்ப்பதற்காக 'அடங்காத் தமிழன்' என அழைக்கப்படும் C.சுந்தரலிங்கம்
அவர்கள் தனது அமைச்சர் பதவியையே துறந்தார் என்பது தெரியுமா?

1958ல் பண்டாரநாயக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திலேயே தந்தை செல்வா அவர்கள் இலங்கையில் வசிக்கும் அனைத்துத் தமிழர்களுக்கும்[மலையகத் தமிழர்கள்] இலங்கைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று வாதிட்டு ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது.

எப்படித்தான் தெரியாத விடயங்களை எல்லாம் உறுதி செய்யாமல் உங்களால் எழுத முடிகிறதோ?
இதுதான் உங்களின் 35 வருட பத்திரிகைத் துறை அனுபவமா?

enRenRum-anbudan.BALA said...

திரு.மாலன்,

திரு கூறியதைப் போல் நன்னடத்தை என்பதற்கு நீங்கள் குறிப்பிட்டதை விட தீவிரமான உதாரணங்கள் பல இருந்தாலும், "எனக்கு எது முக்கியம் என்று தோன்றுகிறதோ அதைப் பற்றிப் பேசுகிறேன்" என்று நீங்கள் கூறிவிட்டபடியால், ஏன் மற்றவர் யாரும், இன்னபிற தீவிரமானவற்றைப் பற்றி பட்டறையில் வாய் திறக்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது! கடவுச்சீட்டு விஷயத்தில் நீங்கள் குறிப்பிடுபவர் ராமேஸ்வரத்திற்கு வரும் "அகதிகள்" அல்ல என்பது சுலபமாக புரியக்கூடிய ஒன்றே. அதை புரிந்து கொண்டே (ஆனால் புரியாத மாதிரி!) பரிதாபத்துக்குரிய அகதிகள் மேல் உங்களுக்கு இரக்கம் இல்லாது போலவும், 'இவர்கள்' தான் இலங்கைத் தமிழர்களை ரட்சிக்க வந்தவர்கள் போலவும் நம்மில் சிலர் துள்ளிக் குதிப்பது வேடிக்கையாக இருக்கிறது.

ஒரு சாதாரண விஷயத்தை இத்தனை பெரிதாக்கி விவாதிப்பதில் யாருக்கு என்ன பயன் ? ஏற்பாட்டாளர்கள் / இன்னும் சிலர் போட்ட விளக்கப்பதிவுகளும், மன்னிப்புப் பதிவுகளும், அனாவசிய கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டன. மற்றபடி,அன்று நீங்கள் பேசியதை நுண்ணரசியல் என்பதெல்லாம் சற்று டூ மச்! I think WE should move on. சீக்கிரம் கடந்து போக வேண்டிய ஒன்றை கடக்க நாம் ஏன் இத்தனை நேரம் எடுத்துக் கொள்கிறோம் ?????

எ.அ.பாலா

சிறில் அலெக்ஸ் said...

//சிறில் உங்களுக்குத் தனி மடலில் எழுதியதை பொதுவில் மேற்கோள் காட்டி மறுமொழி எடுப்பது கூட வலைநெறிப் பிறழ்வு தான். //

ரவி,
தனிமடலானாலும் அதை வெளியிடலாம் என நான் சொல்ல்லியிருந்தேன்.

மேலும் பின்னூட்டங்களை படித்தபின்பு தேவையானால் என் பக்க விளக்கங்களை முன்வைக்கிறேன்.

மாலன் said...

அன்புள்ள் tcbd-2,

முதலில், >>பத்திரிக்கையில தனிக்கைப் பண்ணிடலாம்...வலையில எல்லாரும் பாக்குற மாதிரி..பேசுனத வச்சிக்கிட்டு.. எப்படித் தாம் இப்படி பேச முடியுதோ....<< என்று எழுதி நான் ஏதோ அரங்கில் பேசியதை இங்கே மறைத்து விட்டதைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயன்றீர்கள்.

நான் அது குறித்து >>இப்படிப் பொத்தாம் பொதுவாக மட்டையடிப்பதை விட்டு விட்டு,
நான் எதைப் பேசிவிட்டு அப்படிப் பேசவில்லை எனச் சொல்கிறேன் எனச் சுட்டமுடியுமா?<< எனக்
கேட்டிருந்தேன். அதற்கு பதிலளிக்காமல், இப்போது வேறு ஏதோ பேசி மழுப்புகிறீர்கள்.

>>மேடையில அவ்சரப்பட்டு சொல்லிட்டார்...<< இது உங்கள் முதல் பின்னூட்டத்தில் நீங்கள் சொன்னது.
>>அது spontaneous வந்ததாக சொல்ல முடியாது..<< இது இப்போது நீங்கள் சொல்வது. ஒருநாளுக்குள்
இப்படி ஒரு தலைகீழ் மாற்றமா!

>>ராம் சார்ந்த முரண்பாடுகளையே சொல்லி இருக்கலாமே<<
சொல்லியிருக்கலாம், ராம் பதிவு எழுதுபவராக இருந்திருந்தால். எனக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு பதிவு
நன்னடத்தை. பத்திரிகை நன்னடத்தை அல்ல.

>>..உங்களின் உரை துறை (பதிவு நன்நடத்தை..) சார்ந்ததாகவே இருந்தது...<<

நன்றி

மாலன் said...

அன்புள்ள சுந்தரமூர்த்தி,

>> பொதுமக்களின் கருத்தை, சிந்தனையை பாதிக்கிறவர்கள்--அவர் அரசியல்வாதியாக, நடிகராக, எழுத்தாளராக, இதழாளராக என்று- யாராக இருந்தாலும் கருத்தியல் ரீதியான விமர்சனத்துக்கு உட்பட்டவரே. இதில்
பத்திரிகையாளருக்கு என்று விசேஷ அந்தஸ்து எல்லாம் தேவையில்லை<<

சிந்தனையை பாதிக்கிறவர்கள் எல்லோரும் விமர்சனத்திற்குரியவர்கள் என்றால், பதிவர்களும்
விமர்சனத்திற்குரியவர்களே. அவர்களும் தங்கள் கருத்துக்களின் மூலம் வாசிப்பவர்களின் சிந்தனையைக்
குறிவைத்துத்தானே கருத்துக்களை விதைக்கிறார்கள்?

>>"தமிழ் தமிழ்" வாய் கிழியும் அரசியல்வாதிகள் தங்கள் பிள்ளைகளை ஆங்கிலப்பள்ளிகளுக்கோ, இந்தி
படிக்கவோ அனுப்பப்படுவது விமர்சனத்துக்கு உட்படுபடுத்தப்படுவது போன்று மார்க்ஸியம், ஏகாதிபத்திய
எதிர்ப்பு என்று பேசும் பத்திரிகையாளரின் வாரிசு ஒருவர் ஏகாதிபத்திய நாட்டிற்கு கல்வி பயில அனுப்பபடுவது குறித்து கேள்வி எழுப்பப்படுவது ஒன்றும் பெரிய குற்றமில்லை.<<

1.ராமின் மகள், பள்ளிக்குப் போகும் வயதில் இருப்பவர் அல்ல. பள்ளிக்குப் போகும் குழந்தைகள் சார்பில் அவர்களது பெற்றோரோ, காப்பாளரோதான் முடிவெடுக்க முடியும். 2. அரசியல்வாதிகள் மக்களின் வாக்கின் மூலம் அதிகாரம் பெறுகிறார்கள். சிந்தனையாளர்கள் மக்க்ள வாக்களிப்பின் பேரில் அதிகாரம் பெறுவதில்லை. தங்க்ள் கருத்துக்களின் அடிப்படையில் செல்வாக்குப் பெறுகிறார்கள்.

>> அவருடைய முடிவுகளுக்கு அவர் மட்டுமே காரணம், அவர் தந்தைக்கு எந்த பங்கும் இல்லை என்பது
உண்மையாக இருக்காது <<
ஊகத்தின் அடிப்படையில் முடிவுகளுக்கு வருவது அறிவியல் பூர்வமானதல்ல என்பது உங்களுக்கும்
தெரிந்திருக்கும்.

>>"மனம் திறந்து பேசலாம்" என்று சொல்லிவிட்டு மனம் திறந்திருக்கிறீர்கள். மனத்தில் உள்ளது தானாக வந்து விழுந்திருக்கிறது<<
நாம் எல்லோருமே மனதில் உள்ளதைத்தான் பேசுகிறோம், எழுதுகிறோம். சிலர் மற்றவருக்கு எளிதில் புரிந்துவிடக்கூடாது என்ற நோக்கிலோ அல்லது தன்னை அறிவுசீவி என்று நிறுவிக் கொள்ளும் அவஸ்தைகளினாலோ, அல்லது வேறு காரணங்களாலோ, ஒரு செயற்கையான் திருகல் நடையில் எழுதுவார்கள். நான் நேரடியாக எழுதுவேன். நேர்படப் பேசு எனப்து பாரதியார் சொல்லிச் சென்றது எழுதுபவனுக்கும்தான்.

>>இதை முரணாகப் பார்ப்பது எனக்கும் ஏற்புடையதல்ல என்பதையும் குறித்து வைக்கிறேன்<<
முரண் இல்லை என்பதுதான் என் நிலையும். முரண் இல்லை என்பதை ஏற்றுக் கொண்டுவிட்டால் இந்தப்
பொருள் குறித்து விவாதத்திற்கு அவசியமில்லை. என் நிலையை ஏற்றதற்கு நன்றி.

>>அரசியல், சினிமா, எழுத்துப் பத்திரிகை பிரபலங்கள் (உங்களைத் தவிர) வலைப்பதிவுகள் எழுதுவதோ,
படிப்பதோ இல்லை<<

இதற்கும் நன்றி

மாலன் said...

அன்புள்ள Comenter,

>>ஒரு பெண் இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்கிறார் என முழங்கும் தலைப்புச் செய்திகளும்,
பிறக்கும் போதே பெண் குழந்தைகள், அவர்கள் பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்திற்காகக் கொல்லப்படும்
கொடூரமான செய்திகளும் ஒரே நேரத்தில் காதை நிறைக்கும் தேசமாக இருக்கிறது இந்தியா!
இது எம் தாய் நாடு இந்தியாவினை விமர்சிப்பதாக கொள்ளலாமா? வருங்கால வல்லரசின் பெயரை
கெடுப்பதாக சொல்லலாமா?<<

எனக்கும் தாய்நாடு இந்தியாதான். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்த வரிகள் பெண்சிசுக்கொலை குறித்து நான்
எழுதிய பதிவில் உள்ளவை. பெண்சிசுக் கொலைகளும், மக்கள் தொகையில் சரிபாதி இருக்கும் பெண்கள் அதிகாரம் பெறுவதைத் தடுக்கும் முயற்சிகளும், இந்தியாவிற்குப் பெருமை சேர்க்காது. எனக்கு இந்தியா வல்லரசாக இருப்பதைவிட நல்லரசாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை.

அதன் பொருட்டு நான் இதை விடத் தீவிரமாகக்க்கூட நம் அரசியல் அமைப்பை விமர்சித்திருக்கிறேன். ஒரு
பிரஜை தனது அரசை விமர்சிப்பதற்கும் அந்நியர்கள் விமர்சிப்பதற்கும் நோக்கில், காரணங்களில்
வித்தியாசங்கள் உண்டு.

>>எமக்கிடையில் [நானும் மனிதன் தான்;) ] உள்ள முரண்பாடுகள் - விமரிசனங்களுக்கு அப்பாற்பட்டதா?
[எனக்கு அமெரிக்காவில் வெறுப்பு....ஆனால் இப்போதுதான் mcdonaldsல் சாப்பிட்டேன். ;) <<

முரண்பாடுகள் இல்லாத மனிதர்களே கிடையாது. ஒரு தனிமனிதனின் சொந்த் வாழ்வில் உள்ள் முரண்பாடுகள், சமூகத்தைப் பாதிக்காத வரை அவற்றை விமர்சிக்க அவசியமில்லை என்பதே என் நிலை. இதை மேலே உள்ள விள்க்கங்களில் எழுதியிருக்கிறேன். நான் mcdonalds சாப்பிடுவதில்லை :(

>>எனக்கு தேவையானதை மட்டும் தேவையான போது மட்டும் வலையிட உலகை கேட்கலாமா? <<

எதை வேண்டுமானாலும் எழுதுங்கள் ஆனால் எழுதுவதை கண்ணியமாக எழுதுங்கள் என்று அரங்கிலேயே
செல்வாக்கு அளித்த விளக்கத்தில் சொன்னேன். அதுதான் இதற்கும் பதில்.
>>இணைய கலாச்சாரத்தை பதிப்புலக கலாச்சாரமாக கருத முடியுமா? நான் எழுத்து/ இலக்கண/கருத்து

பிழையுடன் எழுதி திரட்டி திரட்ட முடியாதா?அதற்காக திரட்டி என்னை வலை உலகிலிருந்து திரத்த வேண்டுமா? திரட்டிக்காக தான் வலைநெறியா?<<

திரட்டிதான் வலைநெறி என்று நான் எப்போது சொன்னேன்?. ஒருவர் எழுதும் பதிவு திரட்டி மூலம்

திரட்டப்படும் போது, திரட்டி ஓர் பொது அரங்காக ஆகிறது. பொது இடத்தில் சில கண்ணியமான நடத்தைகள் தேவை. இதுதான் என்நிலை. கூகுள் மூலம் பதிவை வந்தடையலாம்தான். அதனால் பொது இடத்தில் நடந்து கொள்ள் வேண்டிய நடத்தைகள் மாறாது.பொது இடத்தில் கண்ணியமாக நடந்து கொள்வதில் உங்களுக்கு அப்படி என்ன பிரசினை?

Nudist Camp, topless beaches, இதெல்லாம் தனி ஒரு குழுவாக், ஊருக்குள்ளோ, ஊருக்கு வெளியேயோ தனி ஒரு அமைப்பாக (community) இருக்கின்றன. நீங்கள் சொல்ல்கிற நாடுகளில் கூட், அந்த அமைப்புக்களுக்கு வெளியே ஒருவர் முழு நிர்வாணமாக வீதியில் தனியாக செல்லமுடியாது, அரங்குகளில் ஆடையைக் கழற்றி வீசிவிட்டு ஓட முடியாது (Streaking) அப்படிச் செய்பவர்களைபோலீஸ்காரர்கள் 'தள்ளிக் கொண்டு' போவதைப்
பார்த்ததில்லையா நீங்கள்?

மாலன் said...

அன்புள்ள ரவிசங்கர்,

என் பேச்சில் எதைப் பேச வேண்டும் எதைத் தவிர்க்க வேண்டும் என்பது என்முடிவு. அதை யாரும் என் மீது

திணிக்க முடியாது. நான் பேசுவதை ஏற்பதும் நிராகரிப்பதும் கேட்பவர் உரிமை. நான் ஏன் இதைப் பேசத்

தேர்ந்த்டுத்துக் கொண்டேன் என்பதை ஏற்கனவே பலமுறை விளக்கிவிட்டேன் (மேலே உள்ள விளக்கங்களைக்

காண்க)

>>அவருடைய தனி நடத்தை என்ன என்று நாலு பேர் இப்படி பொதுவில் எடுத்துரைத்தால் தான் மக்களுக்குத்

தெரியும்<<

அதுதான் நோக்கம் என்றால், வலைப்பதிவுகளைவிட அதிகம் பேரைச் சென்றடையும் ஊடகங்களில் வெளியிட்டிருக்கலாமே?அச்சு இதழ்கள், இணைய இதழ்கள், ராமை அவரது அரசியல் நிலைக்காக வெறுக்கும் இணைய தளங்கள், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான வானொலிகள், வெப் ஒலிப்ப்ரப்புகள் இவற்றில் ஏதேனும் ஒன்றில் வெளியிட்டு இருக்கலாம். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஊடகங்களில் எழுதியிருக்கலாம். குறைந்த பட்சம் ஒரு பதிவாகவேனும் எழுதியிருக்கலாம். பல பின்னூட்டங்களுக்கு நடுவே, வேறு சில கருத்துகளோடு, எளிதில் புரியாத மொழிநடையில் எழுதி மக்களுக்கு எடுத்துரைக்கப் போகிறீர்களா?

>>பெயரிலியின் செய்கையை மட்டும் விமர்சிக்காமல் அவரின் பின்புலத்தை குறிப்பிட்டு (அதாவது வெளிநாட்டில் வீடு கட்டி நன்றாக இருக்கிறார் என்று)நீங்கள் விமர்சிப்பது கூட என் பார்வையில் தனி நபர் தாக்குதல் தான்.<<

பெயரிலி தான் வீடு கட்டியுள்ள விஷயத்தைத் தனது பதிவில் அவரே வெளியிட்டு இருக்கிறார். அதைத்தான் நான் குறிப்பிட்டு இருக்கிறேன். அதில் என் விமர்சனம் என்ன? பெயரிலி இலங்கையைச் சேர்ந்தவர். கனடாவிற்கோ, அமெரிக்காவிற்கோ அவர் இலங்கையிலிருந்து சென்ற போது இலங்கை பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தித்தான் விமானம் ஏறி இருக்க முடியும். அவர் அமெரிக்காவில் வீடு கட்டி இருக்கிறார். வீடு, தமிழ்மணம் போன்றவற்றில் முதலீடு செய்யும் அளவிற்கு செளகர்யமாக இருக்கிறார். இவை அனைத்தும் உண்மைகள், இவற்றைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன். தரக்குறைவாக ஒரு வார்த்தை கிடையாது. இந்த இடத்தில் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்:
>>ஒரு வரி கூட்டியோ குறைத்தோ அவர் மகளைப் பற்றியோ ராமைப் பற்றியோ தரம் குறைந்த சொற்களால் தாக்குதல் ஏதும் இல்லை. இவை இரண்டும் முற்றிலும் உண்மை. இருவரையும் தனித்தனியாக எந்த விதத்திலும் தரக்குறைவாகக் காட்டாத உண்மை. இவற்றை ஒன்றாகச் சுட்டிக் காட்டுவதில் எந்தத் தனி நபர் தாக்குதலும் இருப்பதாகத் தெரியவில்லை. இவற்றில் உள்ள முரண், உண்மையை வாசகர் எளிதாகவே உணர்ந்து கொள்ளலாம்<
இந்த வரிகளை எழுதியது யார் தெரியுமா? சந்தேகமில்லாமல் நீங்களேதான்!. சற்று மேலே சென்று நீங்கள் முன்னால் எழுதிய பின்னூட்டத்தைப் பாருங்கள்.

இந்துப்பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையிலே பெயரிலி ராமின் மகளைப் பற்றிய தகவலைப் பயன்படுத்திக் கொண்டார் என்று சுந்தரமூர்த்தி ஒரு கருத்து தெரிவித்திருக்கிறார். அவரது அந்த வாதத்தையே இங்கு இரவல் வாங்கிக் கொள்கிறேன். பெயரிலி வீடு கட்டி செள்கரியமாக இருக்கும் விவரம் அவரே பதிவில் வெளியிட்டது. அதைத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

மாலன் said...

அன்புள்ள வெற்றி,

ஆத்திரப்படாமல் இந்தத் தரவுகளைப் பாருங்கள்:

" இவர்கள் (மலையகத் தமிழர்கள்) தமிழர்களாயிருந்தும், இலங்கைத் தமிழரின் கண்களில் இவர்கள் சிங்களவரை விடவும் அன்னியமானவர்களாகவே தென்பட்டார்கள் என்பது ஒரு பயங்கர உண்மை.இதற்குக் காரணம் இவர்கள் 'கீழ் ஜாதியினர்' என்றும், 'பாமரர்' என்றும் இலங்கைத் தமிழர்களால் கணிக்கப்பட்டமைதான்........


.........இலங்கையின் முதலாவது பொதுத் தேர்தலில் மட்டும் இவர்கள் (மலையகத் தமிழர்கள்) வாக்குரிமை பெற்றிருக்கிறார்கள்.இதன் விளைவாகப் பத்து லட்சம் இந்திய வம்சத் தொழிலாளிகள் ஏழு பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பி இருக்கின்றனர். இந்த அரசியல் விழிப்பு இலங்கை சிங்களத் தலமைக்குக் கலக்கம் தந்திருக்கிறது. அடுத்த பொதுத் தேர்தலில் பத்து லட்சத்தில் ஒருவர் கூட வோட்டிட முடியாதபடி இவர்களுடைய வாக்குரிமை பூஜ்யமாக்கப் பட்டது.

இந்தக் கணம்தான் இலங்கையின் இன்றைய தலைவிதியையே நிர்ணயித்த கணமாகும்.மேற்படி முடிவை எதிர்த்து எந்தவிதமான கொந்தளிப்பும் இலங்கைத் தமிழ் தலைமையிடமிருந்து கிளம்பவில்லை.ஒரு சில வாதப் பிரதிவாதங்கலைத் தவிர. இதற்கு முழுப் பொறுப்பும் இலங்கைத் தமிழ்த் தலைமையின் குருட்டுத்தனம்தான்"

இதை எழுதியவர் ராமலிங்கம் என்ற தர்முசிவராம் என்று பரவலாக அறியப்பட்ட பிருமிள் தர்மோத் ஜீவராமு என்று தன்னை அழைத்துக் கொண்ட இலங்கையைச் சேர்ந்த கவிஞர்/ இலக்கியவாதி. பெயரிலின் ஊரில், தெருவில் வசித்தவர். இது இடம் பெற்றுள்ள நூல்: ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை. பரிவர்த்தனா பப்ளிஷர்ஸ் வெளியீடு.

இன்னொரு தரவையும் பாருங்கள்:

"The Citizenship Act which deprived the Hill Country Tamils (then known as Indian Tamils) was supported by several Tamil MPs for various inducements offered by the UNP leadership, but was opposed by the entire left"

இது மிக அண்மையில் எழுதப்பட்டது. எழுதியிருப்பவர். பேராசிரியர் சிவசேகரம்.இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில், மெககானிகல் இன்ஜீயரிங் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழ்லும் ஆங்கிலத்திலும் எழுதும் கவிஞர். விமர்சகர். இது இடம் பெற்றது http://radicalnotes.com/ என்ற இணையதளத்தில். இந்த ஆண்டு ஜுன் மாதம் 7ம் தேதி எழுதப்பட்டது.

இலங்கையின் அறிவுலகைச் சேர்ந்த இந்த இருவரும் மிகச் சினத்தோடு பயன்படுத்தியுள்ள குருட்டுத்தனம், விலைபோனார்கள் எனற கடுமையான சொற்களை நான் பயன்படுத்தியிருக்கவில்லை என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

இந்தப் பிரசினையின் காரணமாக செல்வா தனது கட்சியிலிருந்து வெளியேறி பெடரல் கட்சியைத் தோற்றுவித்தார் என்பது உண்மைதான். ஆனால் அந்தக் கட்சி அடுத்த தேர்தலில் யாழ்ப்பாணத் தமிழர்கள் வாழும் பகுதியில் இரண்டே இடங்களைத்தான் பெற்றது என்ற வரலாற்று உணமை, அவரது நிலைக்கு யாழ்ப்பாணத் தமிழர்களிடையே பேராதரவைப் பெற்றிருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.

திரு. சுந்தரலிங்கம் அமைச்சர் பத்வியைத் துறந்து குறித்து தமிழ்நேஷன் தளத்தில் உள்ள குறிப்பு இது:

"He was the Minister of Commerce and Trade in the first Parliament of independent Ceylon and was dismissed from the Cabinet for not voting with the government on the Indian and Pakistani Residents Citizenship Bill."

அவர் ராஜினாமா செய்தாரா? இல்லை தமிழ்நேஷன் பதிவில் உள்ளதைப் போல 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டாரா? ஆனால் இதைவிட், அந்தக் குறிப்பில் உள்ளது உண்மை என்றால், அவர் அரசிலிருந்து வெளியேறியது 1949ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட Indian and Pakistani (Residents) Citizenship Bill என்ற் சட்டம் முன்மொழியப்பட்டபோது. இது Ceylon Citizenship Act க்குப் பிறகு அதிலிருந்த ஓட்டைகளை அடைக்கக் கொண்டுவரப் பட்ட இரண்டாவது சட்டம்.Ceylon CitizenshipAct 1948ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டு வரப்பட்டது .இந்த இரண்டாவது சட்டம் 1949ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

சுந்தரலிங்கம் டிஸ்மிஸ் செய்யப்படவில்லை, ராஜினாமா செய்தார் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால்
அரசுப் பணிகளில் யாழ்பாணத் தமிழருக்குள்ள உரிமையைப் பறிக்க ஏதுவாக SWRD பண்டாரநாயக சிங்களம் மட்டும் என்ற மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்திய போது, 1956ம் ஆண்டு ஜீன் 5ம் தேதி இலங்கை நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு எதிரே அறப்போர் நடத்தியதைப் போல, மலையகத் தமிழர்களது வாக்குரிமை பறிக்கப்பட்டபோது ஏதும் போராட்டங்கள் நடத்தவில்லை.தங்களது மத்தியதர வாழ்க்கையின் ஆதாரம் பறிக்கப்பட்டபோது கொந்தளித்து எழுந்தவர்கள் இந்திய வம்சத் தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டபோது பொங்கி எழவில்லை.

செல்வா அவர்கள் வைத்த தமிழ் அரசில், வடக்குக் கிழக்குப் பகுதிகளே இடம் பெற்றிருந்தன. மலையகம் இடம் பெறவில்லை என்ற கருத்தை பேராசிரியர் சிவசேகரம் இவ்வாறு சுட்டுகிறார்,

"The FP claimed to speak for all the Tamil-speaking people (including the Muslims and Hill Country Tamils) and sought a federal form of government with the Northern and Eastern Provinces constituting a federal state for the Tamil-speaking people and the rest of the country a predominantly Sinhala state. The kind of federal solution proposed by the FP showed a lack of vision since it was inadequate to address the problems faced by the Muslims who were distributed throughout the island with pockets of large concentrations in the east and along the west coast of the island. The FP demanded the restoration of citizenship to the Hill Country Tamils, but abandoned the Hill Country Tamils to the putative Sinhala dominated federal state"

70களில் பல்வேறு காரணங்களால் மலையகத்திலிருந்து வெளியேறி, வேலை தேடி யாழ்ப்பாணம் வந்த மலையகத் தமிழர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள்? பேராசிரியர் சிவசேகரம் விளக்குகிறார்:
The plantation workers are still the lowest-paid wage labourers in the country with a normal daily wage less than half that for casual unskilled labour in urban areas. The nationalisation of the plantations in 1972 under land reform legislation, falsely hailed by the parliamentary left as a socialist measure, led to Sinhala nationalists taking control of the plantations at various managerial levels and brought further misery to the plantation workers. Some tea estates were closed, the workers expelled, and the land distributed to Sinhalese villages for political gain. The drought conditions that followed in 1973-75 led to a shortage of working days. This combination of circumstances drove a sizeable section of the plantation workers out of the tea estates and a large number were reduced to begging on the streets. Those who moved to the North in search of agricultural and farm work found that life was no better under Tamil employers"

யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு மலையகத் தமிழர்களிடமிருந்த தமிழ்நேய்த்திற்கு இந்த தரவுகள் போதுமா?

மாலன் said...

சிறிலுக்கும் எனக்குமிடையே நடந்த கடிதப் பரிமாற்றம்:

ஆகஸ்ட் 11ம் தேதி சிறில் எழுதியது:

மாலன்,
உங்கள் பேச்சை படித்துக்கொண்டு வரும்போது் அதிலிருக்கும் அத்தனை உண்மைகலையும் ஒருவித வேதனையுடனேயே ஜீரணிக்க இயன்றது. பயம் இருக்கும் இடத்தில் சுதந்திரம் இல்லை எனும் கருததை உங்கள் பேச்சின் சாரமாய் எடுத்துக்கொள்கிறேன். ஆனால் ரவிசங்கர் சொல்லியிருப்பதுபோல இதை தெளிவு செய்ய நீங்கள் எடுத்துக்கொண்ட உதாரணம் போதுமானதாயில்லை மட்டுமல்ல பொருந்துவதாயும் இல்லை.

இதற்கடுத்து நீங்கள் ஈழத்தமிழர்களின் நிலைப்பாடுகளைப் பற்றி பேசுவதை நிச்சயம் தவிர்த்திருக்கலாம். இதுகுறித்து ரவி பின்னூட்டியிருப்பது முற்றிலும் சரியானதே. பொதுவாக தயாரிப்பில்லாமல் பேசும்போது நம் நுண்ணரசியல் வெளிப்பாடுகளை தவிர்க்க இயலுவதில்லை. தொடர்புள்ளதாக நாம் கருதும் தகவல்கள் தொடர்ந்து வந்துகொண்டுதானிருக்கும்.

உங்கள் பேச்சில் உதாரணங்களையே தவிர்த்திருக்கலாம். ஒரு பொது அரங்கில் ஒருவரை குறித்து உதாரணப் படுத்துவது கவனமாகச் செய்யவேண்டியது என நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. அதுவும் பெயரிலி போன்ற பெயர் அறியப்பட்ட பதிவரை (Pardon the pun). இதை முற்றிலுமாக தவிர்த்திருக்கலாம்.

புல்லட் பாயிண்ட் போல சில முக்கிய அம்சங்களை கோட்டிட்டுக் காட்டிவிட்டிருந்தால் இன்னும் சிறப்பாயிருந்திருக்கும்.

ஒரு அருமையான நிகழ்விலிருந்து இப்படி ஒரு எதிர்வினை வருகிறதே என்பதை நீங்களும் எதிர்பார்த்திருக்கமாட்டீர்கள்.

அன்புடன்
சிறில் அலெக்ஸ்

அதே ஆகஸ்ட் 11ம் தேதி நான் எழுதிய பதில் மடல்:
சிறில்,

1) உங்கள் கடிதம் பதிவில் பிரசுரிப்பதற்கானதா அல்லது தனிப்பட்ட ஒன்றா? பிரசுரிக்கலாம் என்றால் வெளியிடுகிறேன்.எனக்குத் தயக்கங்கள் இல்லை.

2) ரவிக்கு நான் பின்னூட்டங்களில் கொடுத்துள்ள விளக்கங்களைப் படிதத பின்னர் உங்கள் கடிதம் எழுதப்பட்டதா? அல்லது அதற்கு முன்ன்ரா?

பின்னர்தான் என்றால் நான் விளங்கிக் கொள்வதற்காகக் கேட்கிறேன்:

இலங்கைத் தமிழ்ர் செய்கையில் முரண்பாடுகள் இல்லை என்று கருதுகிறீர்களா? இல்லை என்றால் எப்படி என்று விளக்குவீர்களா? அவர்கள் செயலுக்கு வெளித் தெரியும் நியாயங்கள் இருக்கலாம். ஆனால் அது முரண்பாடுகளை இல்லையென்று ஆக்கிவிடுமா? இதே போல் ராமின் மகள் செயலிலும், வெளித் தெரியாத நியாயங்கள் இருக்கலாம் அல்லவா?

உங்கள் விடைகள் எனக்கு உதவியாக இருக்கும்.

இந்த விஷய்த்திர்கு இத்தனை தீவிரமான எதிர்வினைகள் பதிவுலகில் தேவைதானா? இது கோஷ்டியாக சேர்ந்து வேறு நோக்கங்களுடன் நடத்தப்படும் தாக்குதல் என்பதை உங்களால் புரிந்து கொள்ளப்படுகிறதா?

அன்புடன்
மாலன்

ஆகஸ்ட் 11ம் தேதி சிறில் அனுப்பிய மறுமொழி:
மாலன்,
நீங்கள் பதிவில் வெளியிடலாம்.

ஈழத் தமிழர் குறித்த எந்தவித கோட்பாடும் கொள்கையும் என்னிடம் கிடையாது. ஆக உங்கள் கேள்விக்கு பதிலளிக்காமல் விடுகிறேன்.

ஆனால் ஈழம் போன்ற ஒரு சென்சிட்டிவ் விஷயத்தைவைத்து ஒரு பொது அரங்கில் பேசியது நிச்சயம் எதிர்வினைகளைத் தரக் கூடியதுதான். தனிநபர் தாக்குதலுக்கென எத்தனையோ உதாரணங்கள் இருக்கையில் இது (பெயரிலி Vs. ராம்) ஒரு சிறிய விஷயமாகவே படுகிறது. அதுவும் ஈழத் தமிழரின் மனநிலையை வைத்து இதை விவாதிப்பது அவர்(பெயரிலி)தந்த மருந்தையே(விஷத்தையே) அவருக்கு சுவைக்கத் தந்ததுபோலாகிவிட்டது.

உங்கள் பேச்சு பற்றிய விவாதங்கள் தீவிரமாக முன்னிலைப்படுத்தப்படுகிறது என்பது வருந்தத்தக்கதே என்றாலும் அதுகுறித்த விவாதங்களே தேவையில்லை எனச் சொல்வதற்கில்லை. இதில் நீங்களும் உடன்பட்டிருப்பீர்கள் இல்லையேல் பதிவிட்டிருக்கமாட்டீர்கள்.

கோஸ்்டியாகச் சேர்ந்து தாக்குவது இப்போதல்ல, முன்பிருந்தே நடைபெறுகிறது அதுவும் சில பிரபலங்களைத் தாக்குவதில் பதிவுலக மக்களுக்கு செம கிக் (எனக்கும் இதில் பங்கிருக்கிறது எனச் சொல்லலாம் :))

செல்லாவி பதிவில் சொல்லவந்ததையே நானும் சொல்கிறேன்... உங்கள் பேச்சின் பெரும்பகுதி என்னை யோசிக்கச் செய்தது ஆனால் கடைசியில் ஈழத்தமிழர்களைப் பற்றிய பேச்சு தவிர்க்கப்பட்டிருக்கலாம். தனிநபர் தாக்குதல் எனும் எளிதான ஒன்றை விளக்க ஈழம் போன்ற ஒத்த வேறுபட்ட கருத்துக்களிலான ஒரு எடுத்துக்காட்டை எடுத்தாள்வது சிறப்பானதாக இல்லை. அப்படிச் செய்வதன்மூலம் நீங்கள் பெயரிலிக்கு வேண்டுமானால் பதில் சொல்லலாம் (அது அவருக்கு புரியுமென்பதால்) மற்றவர்களுக்கல்ல.

ஆக உங்கள் பேச்சு பெயரிலிக்கான எதிர்வினையாகவே பார்க்கப்படுகிறது.

இதுபோல எதிர்வினைகள் பதிவுலகில் மலிவு என்பதால் இதுவும் கடந்துபோகும் என்றே நம்புகிறேன்.

என் மடலுக்கு மதிப்பளித்து பதில் தந்தமைக்கு நன்றி.

சற்றுமுன்.. தளம் குறித்த உங்கள் கருத்துக்களைச் சொல்ல இயலுமா. சில மேம்பாடுகளைச் செய்ய இருக்கிறோம்.


அன்புடன்
சிறில் அலெக்ஸ்









Maalan சிறில், 1) உங்கள் கடிதம் பதிவில் பிரசுரிப்பதற்கானதா அல்லது தனிப்பட்ட ஒன்றா? ப...
11-Aug (2 days ago)



மாலன்,
நீங்கள் பதிவில் வெளியிடலாம்.

ஈழத் தமிழர் குறித்த எந்தவித கோட்பாடும் கொள்கையும் என்னிடம் கிடையாது. ஆக உங்கள் கேள்விக்கு பதிலளிக்காமல் விடுகிறேன்.

ஆனால் ஈழம் போன்ற ஒரு சென்சிட்டிவ் விஷயத்தைவைத்து ஒரு பொது அரங்கில் பேசியது நிச்சயம் எதிர்வினைகளைத் தரக் கூடியதுதான். தனிநபர் தாக்குதலுக்கென எத்தனையோ உதாரணங்கள் இருக்கையில் இது (பெயரிலி Vs. ராம்) ஒரு சிறிய விஷயமாகவே படுகிறது. அதுவும் ஈழத் தமிழரின் மனநிலையை வைத்து இதை விவாதிப்பது அவர்(பெயரிலி)தந்த மருந்தையே(விஷத்தையே) அவருக்கு சுவைக்கத் தந்ததுபோலாகிவிட்டது.

உங்கள் பேச்சு பற்றிய விவாதங்கள் தீவிரமாக முன்னிலைப்படுத்தப்படுகிறது என்பது வருந்தத்தக்கதே என்றாலும் அதுகுறித்த விவாதங்களே தேவையில்லை எனச் சொல்வதற்கில்லை. இதில் நீங்களும் உடன்பட்டிருப்பீர்கள் இல்லையேல் பதிவிட்டிருக்கமாட்டீர்கள்.

கோஸ்்டியாகச் சேர்ந்து தாக்குவது இப்போதல்ல, முன்பிருந்தே நடைபெறுகிறது அதுவும் சில பிரபலங்களைத் தாக்குவதில் பதிவுலக மக்களுக்கு செம கிக் (எனக்கும் இதில் பங்கிருக்கிறது எனச் சொல்லலாம் :))

செல்லாவி பதிவில் சொல்லவந்ததையே நானும் சொல்கிறேன்... உங்கள் பேச்சின் பெரும்பகுதி என்னை யோசிக்கச் செய்தது ஆனால் கடைசியில் ஈழத்தமிழர்களைப் பற்றிய பேச்சு தவிர்க்கப்பட்டிருக்கலாம். தனிநபர் தாக்குதல் எனும் எளிதான ஒன்றை விளக்க ஈழம் போன்ற ஒத்த வேறுபட்ட கருத்துக்களிலான ஒரு எடுத்துக்காட்டை எடுத்தாள்வது சிறப்பானதாக இல்லை. அப்படிச் செய்வதன்மூலம் நீங்கள் பெயரிலிக்கு வேண்டுமானால் பதில் சொல்லலாம் (அது அவருக்கு புரியுமென்பதால்) மற்றவர்களுக்கல்ல.

ஆக உங்கள் பேச்சு பெயரிலிக்கான எதிர்வினையாகவே பார்க்கப்படுகிறது.

இதுபோல எதிர்வினைகள் பதிவுலகில் மலிவு என்பதால் இதுவும் கடந்துபோகும் என்றே நம்புகிறேன்.

என் மடலுக்கு மதிப்பளித்து பதில் தந்தமைக்கு நன்றி.

சற்றுமுன்.. தளம் குறித்த உங்கள் கருத்துக்களைச் சொல்ல இயலுமா. சில மேம்பாடுகளைச் செய்ய இருக்கிறோம்.

அன்புடன்
சிறில் அலெக்ஸ்.

மாலன் said...

நிறையப் பேசிவிட்டோம். நிறைய நேரமும் செலவிடப்பட்டிருக்கிறது. அநேகமாக் ஒவ்வொருவரது கேள்விகளுக்கும் விடையளித்திருக்கிறேன். சட்னி வடை அனுப்பியிருந்த பின்னூட்டங்கள் அவரது மொழிநடையின் காரணமாகவும், தனிநபர்கள் மீதான தாக்குதலை அனுமதிப்பதில்லை என்ற கொள்கை காரணமாகவும் இடம்பெறவில்லை. அதற்காக் அவருக்கு என் வருத்தங்களைத் தெர்வித்துக் கொள்கிறேன், ஆனால் அவர் அவற்றைத் தனிப் பதிவுகளாக வெளியிட்டு இருக்கிறார். ஆர்வம் உள்ளவர்கள் அங்கே சென்று பார்த்துக் கொள்ளலாம்.

நான் ஒவ்வொருவருக்கும் அவர்கள் கருத்தை மறுத்து பதிலளித்துக் கொண்டிருந்தால் நான் பதிவுலக நண்பர்களை இழக்க நேரிடலாம் என சில நண்பர்கள் கவலைப் பட்டார்கள். ஆனால் நான் அப்படிக் கருதவில்லை. விவாதம் வேறு, நட்பு வேறு. மாற்றுக் கருத்துடையவர்கள் நண்பர்களாக இருக்க முடியாதா, என்ன?

பன்முகத் தன்மை, ஜன்நாயகம் ஆகியவை கொண்ட இந்திய நாட்டிலிருந்து நான் பதிவுலகிற்கு வருகிறேன். அந்தத் தன்மை மற்றவர்களிடமும் இருக்கும் என ஆக்கபூர்வமாக நம்பிக்கை எனக்குண்டு. அப்படி இல்லாவிட்டாலும் கற்றுக் கொடுத்தால் போச்சு. இந்தியா உலகிற்கு அளித்துள்ள கொடைகள்தான் எத்தனை!

சக இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்!
-------------------
இத்துடன் இந்தப் பொருளில் விவாதம் முடிவுற்றது.

கொழுவி said...

//பெயரிலி வீடு கட்டி செள்கரியமாக இருக்கும் விவரம் அவரே பதிவில் வெளியிட்டது. அதைத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.//

பெயரிலி வீடு கட்டியிருப்பதாக சொன்னதில் நீங்கள் கொஞ்சம் இடறி விட்டீர்கள். பெயரிலி இவ்வாறுதான் தான் எழுதியிருந்தார்.

//ஒவ்வொரு கோடைக்கும் ஊருக்குப் போயோ, அமெரிக்காவிலே கட்டிய புதுவீட்டுக்குப் பெற்றோரை வரவழைத்துப்பார்க்கவோ வசதிப்பட்ட உங்களைப் போன்றோரைவிட, என் நிலை எண்ணிப்பார்த்தால் உறவுகள், ஊர் தொடர்பாக எல்லாவிதத்திலும் கவலைக்கிடமேதான்...//

அதாவது
//அமெரிக்காவிலே கட்டிய புதுவீட்டுக்குப் பெற்றோரை வரவழைத்துப்பார்க்கவோ வசதிப்பட்ட உங்களைப் போன்றோரைவிட,//

அதாவது புது வீடுகட்டிய பிறரைப் போலவோ.. என அர்த்தத்தில் அது வரும்.

பொதுவாகவே பெயரிலியின் தமிழ் மீது பிரச்சனை. ஆனால் அது உங்களுக்குமா..? ஆனால் இது சாதாரணனுக்கும் புரியக் கூடிய தமிழில்தானே உள்ளது ?

இதனை வெளியிடாவிட்டாலும் பரவாயில்லை. இது உங்களின் அறிதலுக்காகவே மட்டுமே. உங்களின் கவலையீனத்தை அடுத்தவர்களும் அறிந்து கொள்ளலாம் என நீங்கள் விரும்பினால் தாராளமாக வெளியிடலாம்.

வெற்றி said...

மாலன் ஐயா,
பதிலுக்கு மிக்க நன்றி. நான் ஆத்திரப்படவில்லை. நான் எழுதியது ஆத்திர தொனியில் இருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்.

ஐயா, நான் நீங்கள் சொல்லியுள்ள விடயங்கள் குறித்து பதிவு தயாரித்துக் கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் அப் பதிவை இவ் வார இறுதியில் பிரசுரிக்கிறேன்.

/* ஆனால்
அரசுப் பணிகளில் யாழ்பாணத் தமிழருக்குள்ள உரிமையைப் பறிக்க ஏதுவாக SWRD பண்டாரநாயக சிங்களம் மட்டும் என்ற மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்திய போது, 1956ம் ஆண்டு ஜீன் 5ம் தேதி இலங்கை நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு எதிரே அறப்போர் நடத்தியதைப் போல, மலையகத் தமிழர்களது வாக்குரிமை பறிக்கப்பட்டபோது ஏதும் போராட்டங்கள் நடத்தவில்லை */

நீங்கள் சொல்வது தவறு. அறப்போராட்டங்களை லங்கா சமஜமாஜக் கட்சி, தமிழரசுக் கட்சி, இந்திய காங்கிரஸ் ஆகியன சேர்த்து நடாத்தின. அந்த அறப் போராட்டத்தின் நூறவது நாள் போராட்டம் பெரிய கூட்டத்துடன் நடந்தது. அதில் செல்வநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

"When parliament was dissolved and new elections were scheduled in 1952, based on the 1950 register, from which the preponderant majority of Indians were excluded the Ceylon Indian Congress and Federal Party launched a campaign to obtain voting rights for those Indian who had opted, under the law, to become citizens of Sri Lanka...A meeting at the Town Hall on August, 1952 to mark the 100th day campaign, united the opposition parties....Representative of the Communist Party[Pieter Keuneman], Federal Party [S.J.V. Chelvanayagam] and plantation labour leaders, S.Thondaman and A.Aziz also spoke on this occasion.
[Kumari Jayawardene, Sri Lanka - The Ethnic Conflict, p.159]

/* செல்வா அவர்கள் வைத்த தமிழ் அரசில், வடக்குக் கிழக்குப் பகுதிகளே இடம் பெற்றிருந்தன. மலையகம் இடம் பெறவில்லை என்ற கருத்தை பேராசிரியர் சிவசேகரம் இவ்வாறு சுட்டுகிறார், */

ஐயா, இலங்கை வரைபடத்தைப் பார்த்தீர்கள் என்றல் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் மலையகம் சிங்களப் பகுதியில் உள்ள இடம். வடக்குக் கிழக்குத் தான் தமிழர்களின் பூர்வீக தாயகம். மலையகம் கண்டி இராச்சியத்தின் பகுதியில் இருந்த பகுதி. ஆகவே சிங்கள மக்களின் மண்ணை எமக்குத் தா என்று கேட்க முடியாது.

மலையகத் தமிழ்த் தலைவர்களும், இலங்கைத் தமிழ்த் தலைவர்களும் என்ன கோரிக்கையை முன் வைத்துப் போராடினார்கள் என்றால், தமிழர்களின் பூர்வீக மண்ணில் மாநில சுயாட்சி, மலையகத் தமிழர்களுக்கு மற்றைய பிரசைகள் போல், வாக்குரிமை, குடியுரிமை, சமவுரிமை. இந்த கருத்தொற்றுமையில் தான் ஜி.ஜி. பொன்னம்பலத்தின் தமிழ்க்காங்கிரஸ், செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சி, தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆரம்பித்தனர்.

/* அவர் ராஜினாமா செய்தாரா? இல்லை தமிழ்நேஷன் பதிவில் உள்ளதைப் போல 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டாரா? */

"C.Sunderalingam...refrained from speaking in the debate ...but Sunderalingam who had serious reservations about the question resigned from the government..."

[Kumari Jayawardene, Sri Lanka - The Ethnic Conflict, p.158]

தற்போது பணிமனையில் இருக்கிறேன். நான் மேலே சொன்னது போல உங்கள் அனைத்துக் கருத்துக்களுக்கும் இந்த வார இறுதியில் பதில் எழுதுகிறேன்.

ஐயா, மீண்டும் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, உங்கள் மீது எனக்கு ஆத்திரம் இல்லை. நான் உங்கள் மீது ஆத்திரப்படுவதாக நீங்கள் கருதுமளவுக்கு நான் ஏதாவது சொல்லியிருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்.

ஐயா, நீங்கள் என்னைவிட வயதில் முதிர்ந்தவர். அந்த வகையில் உங்கள் மீது எனக்கு மரியாதையும் மதிப்பும் உண்டு. உங்கள் கருத்துக்களுக்குத் தான் மாற்றுக் கருத்தைச் சொல்கிறேனே தவிர உங்கள் மீது தனிப்பட்ட தாக்குதல் இல்லை.

நான் அப்படித் தவறி, வரம்புமீறீ ஏதாவது சொன்னால் தயவு செய்து தயங்காது சுட்டிக் காட்டுங்கள்.

இக் கருத்துப் பரிமாற்றத்தின் மூலம் தவறான புரிதல்களை களையலாம் என நம்புகிறேன்.

/* யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு மலையகத் தமிழர்களிடமிருந்த தமிழ்நேய்த்திற்கு இந்த தரவுகள் போதுமா? */

மேலே சொன்னது போல், இவ் வார இறுதியில் பதிலளிக்கிறேன்.

மிக்க நன்றி.

மாலன் said...

விவாதம் முடிவுற்றது என்ற அறிவிப்பிற்குப் பின்னும் சில பின்னூட்டங்கள் வந்தன. அவற்றில் இரண்டை,மட்டும் அவசியம் கருதி வெளியிடுகிறேன். ஒன்று வெற்றி அவர்களுடையது. அவ்ர் வைக்கும் வாதங்களுக்கு ஏற்ற தரவுக்ளை அது முன் வைக்கிறது. விவாதம் முடிந்து விட்டதெனினும் அவற்றைத் தாமதமாகக் பெறப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக அவ்ற்றின் பிரசுரத்தை மறுப்பது, அவருக்கு நியாயம் செய்ததாகது என எனக்குத் தோன்றுவதால் அதனை வெளியிடுகிறேன்.

மற்றொன்று கொழுவியின் பின்னூட்டம். அது வாதங்களில் இடம் பெற்றுவிட்ட ஒரு தகவல்பிழையைச் சுட்டுகிறது. அதை நேர் செய்யும் நோக்கோடு அது வெளியாகிறது.தவ்று என்னுடையதுதான். பெயரிலி எழுதியதை நான் தவ்றாகப் புரிந்து கொண்டுவிட்டேன். அதற்காக வருந்துகிறேன். பெயரிலி, விரைவிலேயே சொந்த வீடு கட்டிக் குடியேற வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன்.
மாலன்