இன்றைய The New Indian Expressல் சென்னைப் பதிவர் பட்டறை பற்றி விரிவாக (முதல் பக்கத்திலேயே ) செய்திகள் சகபதிவர்களது புகைப்படங்களுடன் வெளிவந்திருக்கின்றன. 'மொக்கைப் பதிவு' 'கும்மிப் பதிவு' பாலபாரதியைக் கலாய்ப்போர் சங்கம், உள்குத்து எல்லாவற்றையும் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்கள்.
பட்டறையின் நிகழவுகள் குறித்தும், 71 வயதில் பட்டறையில் வந்து கலந்து கொண்டு பதிவுகள் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டிய நல்லபெருமாள் பற்றிய் செய்தியும் மூன்றாம் பக்கத்திற்குப் போய்விட்டது. (நல்ல பெருமாள் பற்றி அதிகம் பேர் எழுதவில்லை. அவர் பேசியது என் மனதைத் தொட்டது)
இணைப்புக்கள் இங்கே.
http://epaper.newindpress.com/default.aspx?selPg=730&page=06_08_2007_003.jpg&ed=396&BMode=100&artHigh=3
http://epaper.newindpress.com/default.aspx?selPg=730&page=06_08_2007_003.jpg&ed=396&BMode=100&artHigh=3
இதன் ஆங்கில வடிவததை என் யாஹூ பதிவில் வெளியிட்டிருக்கிறேன். அதன் முகவரி:
http://360.yahoo.com/maalan_narayanan)
அயலகத்தில் வசிக்கும் நண்பர்களுக்கும், சென்னையிலேயே இருந்து எகஸ்பிரசை தவறவிட்டவர்களுக்கும், இந்த நிகழ்வின் பதிவுகளை எதிர்காலத்தை முன்னிட்டு சேமிக்கவிரும்புவர்களுக்கும், தங்கள் ஊரில் இது போன்ற பயிலரங்கு (பட்டறை என்பதற்கு பதிலாக இதைப் பயன்படுத்தலாமே?) நடத்த விரும்புவர்களுக்கு ஓர் உந்துதலாகவும் இந்த இணைப்புக்கள் உதவகூடும்.

13 comments:
சூப்பர்.. பகிர்ந்தமைக்கு நன்றி
நன்றி மாலன் சார்.
வணக்கம் மாலன்,
பிரபலம் என்ற முக மூடியை கழட்டி விட்டு தாங்களும் பட்டறையில் கலந்துகொண்டது இணையத்தமிழின் மீது தங்களுக்குள்ள ஆர்வத்தைக்காட்டுகிறது. சிறப்பான பதிவு!
thanks . . .
Sir,
Excellent!
Thanks for Sharing!
தமிழ் உணர்வும், தமிழ் அறிவும் அதிகம் உள்ளவன் என்ற முறையில், என்னுள் எழுந்த கேள்வி
எதற்காக இந்த தமிழ் பட்டறை? தமிழை வளர்ப்பது இதன் நோக்கமா? அல்லது தமிழில் அதிகமான blogs உருவாகுவது இதன் நோக்கமா?
அல்லது தமிழ் தெரிந்தவர்கள் மட்டும் கூடி கருத்து பரிமாறி கொள்வது இதன் நோக்கமா?
தமிழில் அதிகம் blogs வருவதன் மூலம், தமிழ் வளர்ந்து விட போகிறதா?
ஒருவேளை சோற்றுக்கே வழியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு எதாவது செய்யலாமே?
அதற்கு உங்கள் பட்டறை எந்த வகையிலாவது உதவுமா?
தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் கூட படிக்க முடியாமல் தவிக்கும் ஏழை குழந்தைகளின் படிப்பிற்கு உதவுமா?
எனக்கு தெரிந்து ஒரு குழு, சென்னையில் உள்ள சேரி வாழ் குழந்தைகளுக்கு, எந்த விளம்பரமும் இன்றி மாலை வேளைகளில்,
படிப்பு சொல்லித் தருகிறார்கள்.
நீங்கள் பங்கெடுத்த பட்டறை, நீங்க செலவு செய்து உருவாக்கிய பட்டறை என்று மட்டும் உங்கள் போக்கில் இருந்திருந்தால், எனது கருத்தை நான் இவ்வாறு முன் வைத்திருக்க மாட்டேன்.
ஆனால் பட்டறை நடத்தியதை பெரிய சாதனையாகவும், தமிழ் வளர்ச்சிக்காகான அடிக்கலை நாட்டியதை போலவும்,
தமிழில் blog வைத்திருப்பவர்கள் புத்திசாலிகள் மற்றும் உயர்ந்தவர்களை போலவும்,
அவ்வாறு இல்லாதவர்கள் தரம் தாழ்ந்தவர்கள் அல்லது சாதரண மனிதர்களை போன்று சித்தரிக்கும்
சில பதிவுகளை காண நேர்ந்ததால் தோன்றிய கருத்துக்கள் தான் இவை.
மேலும் நான் கடந்து வந்த சில பதிவுகள் தங்களுடைய புத்திசாலித்தனத்தை காண்பிப்பதற்காகவும்,
ஒரு தரப்பினரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்தை சார்ந்தவர்களை தாக்குவதற்காகவோ உருவாக்கியுள்ளனரே தவிர
தமிழ் வளர்ச்சி என்பதர்கான எந்த வித அறிகுறியும் தெரியவில்லை.
உண்மையில் இந்த பட்டறையின் நோக்கமென்ன?
இது என் கருத்து மட்டுமே... பதிலை பற்றிய எதிர்பார்ப்புடன்...............................
..............தமிழ் தெரிந்தவன்........................
நன்றி மாலன் அவர்களே!
விவரங்களை சேமித்து ஆவணப்படுத்துமாறு அமைப்பாளர்களிடம் நானும் கேட்டுக்கொண்டேன்;செய்வார்கள்!
i guess it is very impressive that this happened. my question is ,is this a social phenomenon very much reflective of our cultural background. by this i mean the colective nature of our society?because i havent comeacross anyother bloggers meet. may be i am wrong.also are there so many bloggers in any other language?english excluded.
தமிழ் விரும்பும் நண்பருக்கு ,இன்னொரு சக வலைப்பூ படிப்பவர் என்ற முறையில் இதை எழுதுகிறேன். உங்கள் கேள்வி ஞாயமாக இருந்தாலும், இத்தகய சந்திப்புகளில் நல்லகாரியங்களும் ஏற்படுகின்றன .இந்த சந்திப்பில் கூட அதைப் பற்றி பேசி உள்ளார்கள்.
எனக்கு தெரிந்த வரையில் நீங்கள் சொல்லும் சமூக நலந் உள்ள செயல்களை வலைப்பூவின் மூலமாக தான் அறிந்துக்கொண்டேன். கேள்வி என்னை கேட்கப்படாவிட்டாலும் உங்கள் கேள்வியில் இருந்த sincerity காரணமாக நான் பதில் எழுதியுள்ளேன் . மன்னிக்கவும். மாலன் நீங்களும் கூட.
திரு. மாலன், தமிழ் பதிவர் பட்டறை பற்றி பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
பகிர்ந்தமைக்கு நன்றி. கும்மிப் பதிவு, மொக்கைப் பதிவு குறித்து நான் பட்டறையில் பேசியதற்காக கோபமடைந்து இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் சிலர் தமிழ் வலையுலகின் immaturity activities காரணமாக வலையுலகில் இருந்து விலகிவிட்டார்கள் என்ற தொனியில் தாங்கள் பேசியதாக தெரிகிறது. அதுகுறித்தான ஒரு விரிவான விவாதத்தை தொடங்கமுடியுமா?
அன்புடன்
லக்கிலுக்
thanks for sharing; so nice of you!
பகிர்ந்தமைக்கு நன்றி. நன்றி மாலன்!நீங்கள் ஊக்கப் படுத்தித் தான் நான் வலையத்தில் எழுத வந்தேன். இதை என் நட்சத்திர பதிவில் கூட குறிப்பிட்டிருந்தேன். தாங்கள் சொல்வது போல் சில கசப்பான சம்பவங்கள், கட்சி கட்டுதல், சாதி தக்குதல் போன்றவற்றால், பல நல்ல எழுத்தாளர்கள் ஒதுங்கி விட்டனர். எழுதுபவர் அத்தனை பேரும் சமுதாயப் பணி அல்லது தமிழ் சேவை மட்டுமே செய்கிறார்களா? இவர்கள் எழுதுவதை இவர்கள் வருங்கால சந்ததியினர் பார்க்க லாயக்கா என்று சிந்தித்தி எழுதினாலே போதும். வலைஞர் தரம் உயர்ந்து விடும்.
Post a Comment