ஒவ்வொரு கோடையிலும் சென்னையில் தவறாமல் கேட்கிற ஒரு வாசகம்:" ஸ்ஸ்ஸ் ...பா என்ன வெய்யில். எந்த வருஷமும் இந்த வருஷம் போல இப்படி வெயில் கொளுத்தியது இல்லை" ஓவ்வொரு வருஷமும் இதைக் கேட்கும் போதும் நான் எனக்குள் சிரித்துக் கொள்வேன். இந்த வருஷமும் இந்த வாசகத்தைக் கேட்க நேர்ந்தது. ஆனால் சென்னையில் இல்லை. கோடை வெயிலில் இருந்து தப்பிக்க பலர் ஓடும் காஷ்மீரில்!
இந்தியா முழுக்க இந்த முறை கோடை கடுமையாகத்தான் இருக்கிறது. இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் மாலை நான்கு மணிக்கு தில்லியின் வெயில் 46 டிகிரி செல்சியஸ்.காஷ்மீரில் 35 டிகிரி. காஷ்மீர் மாநிலத்தில் யமுனா நகர் என்றொரு இடம் இருக்கிறது. நெடிய மரங்கள் சூழ்ந்த பகுதியாக இருந்தது. இப்போது அங்கு நிறைய பிளைவுட் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வந்துவிட்டன. அந்த இடம் இப்போது தில்லியை விட சூடாக 49.9 டிகிரியில் இருக்கிறது.
சுற்றுச் சூழல் கெட்டுவருவதால் வெப்பம் அதிகரித்து வருவதாக தினந்தோறும் தில்லிப் பத்திரிகைகள் எழுதி வருகின்றன.இமயம் உருகிவிடும், கடல் மட்டம் அதிகரித்துவிடும் என்றெல்லாம் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. Global Warming என்றால் என்ன என்று ஒரு சுற்றுச் சூழல் விஞ்ஞானியிடம் கேட்டேன்.' "சூரியன் தன் கதிர்களை அனுப்பி பூமியை சூடாக்குகிறது. ஆனால் சூரியனிலிருந்து வரும் எல்லாக் கதிர்களும் பூமியின் மீது பாய்ந்துவிடுவதில்லை. அப்படித் தாக்கிவிடாமல் பூமிக்கு மேல் உள்ள வளி மண்டலம் தடுத்து தனக்குள் பல கதிர்களை வாங்கிக் கொள்கிறது. வளி மண்டலத்தைத் தாண்டி வ்ரும் சில கதிர்களால் பூமி சூடாகிறது. பூமி சூடாகும் போது அதுவும் சில கதிர்களை -infra red rays-வெளியிடுகிறது. இந்தக் கதிர்கள் வளிமண்டலத்தை சென்றடையாமல் சில வாயுக்கள் தமக்குள் வாங்கிக் கொண்டு பூமியை வெப்பமாக வைத்திருக்கின்றன.அந்த வாயுக்களை green house gases என்று சொல்கிறோம். இந்த green house gasesன் அளவு அதிகரிக்கும் போது அவற்றால் வாங்கிக் கொள்ளும் வெப்பத்தின் அளவும் அதிகரிக்கிறது. " என்று அவர் என் சிறிய மூளைக்கு எட்டுகிறமாதிரி சொன்னார். ஆனால் அவர் சொன்ன இன்னொரு விஷயம்தான் எனக்குள் திகிலைக் கிளப்பி விட்டது. அவர் சொன்னார் நம் வளி மண்டலத்தில் 78 சதவீத்ம் நைட்டிரஜன். 21 சதவீதம் ஆக்சிஜன். மீதம் உள்ள 1 சதவீதம்தான் இந்த கீரின் ஹவுஸ் வாயுக்கள். அவையும் ஒரே வாயு அல்ல. கரியமில வாயு, மீதேன், நீர் ஆவி எனப் பல." ஒரு சதவீதமே இந்தப்பாடு என்றால் இது இதைவிட அதிகமாக இருந்தால் எப்படி இருக்கும்? நினைத்துப் பார்த்தாலே எலும்பெல்லாம் உருகிவிடும் போலிருந்தது. கரியமில வாயு அதிகரிக்கப் பல காரணங்கள். மக்கள் தொகை அதிகரிப்பு, ஆலைகள் வெளியிடும் மாசு, மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது எனப் பல காரணங்கள்.
புவியின் வெப்பம் அதிகரித்து வருகிறது என்பது உண்மைதானா இல்லை சும்மா பயம் காட்டுகிறீர்களா என்ற என் கேள்விக்குப் பின்னிருந்த திகிலைப் பொருட்படுத்தாமல் அவர் மேலே மேலே சொல்லிக் கொண்டு போனார்: அதற்கான அடையாளங்கள் இப்போதே தெரிய ஆரம்பித்து விட்டன. வெப்பக் காற்று, பருவம் தப்பிய கோடைகள், அதாவது வேனில் காலம் அல்லாத காலங்களிலும் கோடைக்காலம் போல வெயில், வெப்பம், கடலோரங்களில் கடல் மட்டம் உயர்வது, பனிப்பாறைகள் உருகுவது என்பதல்லாம் ஆரம்ப அடையாளங்கள். போகப் போக நிலைமை கடுமையாகும். எதிர்ப்பாராமல், மழைக்காலம் அல்லாத பருவங்களிலும் வெள்ளம், ஆறுகள் வரண்டு விவசாயத்திற்கு நீர் கிடைக்காமல் போய் உணவு உற்பத்தித் தட்டுப்பாடு, பஞ்சம் என அவர் அடுக்கிக் கொண்டே போனார்.
புவியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டு வருவது உண்மைதான். ஆனால் அவர் தீட்டுகிற சித்திரம் போல அவ்வளவு பயங்கரம் ஏற்பட்டுவிடவில்லை. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? புவி வெப்பம் தொடர்பாக ஜப்பான் நகரான கியோட்டா நகரில் உலக நாடுகள் 2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஓர் ஒப்பந்தம் கையெழுத்திட்டன. அந்த பிப்ரவரி மாதம் முப்பது வருடங்களாக இல்லாத அளவிற்கு பனி பொழிந்து காஷ்மீரில் 150 பேர் இறந்து போனார்கள். அந்த ஆண்டுதான் நாற்பது வருடங்களில் குறைந்த அளவு வெப்பம் மும்பை நகரில் பதிவாகியது" என்று அந்த விஞ்ஞானி சொன்னதற்கு நேர் எதிரிடையாக தகவல்களை அடுக்கிக் கொண்டே போனார் ஒரு பத்திரிகையாளர்.
அவர் ஒரு மேற்கோளையும் படித்துக் காட்டினார்: "இந்த விஷயத்தில் நாம் சூதாட்டம் போல ரிஸ்க் எடுத்துக் கொள்ள முடியாது. சும்மா இருக்க முடியாது. இந்தக் கருத்துடன் முரண்படும் அறிவியலாளர்கள், பொறுப்பற்றுச் செயல்படுகிறார்கள். நம் வானிலை மிக மோசமாக மாறப்போகிறது என்பதற்கான அடையாளங்கள் அலட்சியப்படுத்த இயலாத அளவிற்குத் தெரிய ஆரம்பித்துவிட்டன" 1972ம் ஆண்டு வாஷிங்டன் போஸ்ட் இதழில் வெளியான கட்டுரையிலிருந்து அவர் இந்த மேற்கோளைப் படித்துக் காட்டினார்.அந்தக் கட்டுரை புவி வெப்பம் அதிகரித்து வருவதைப் பற்றியது அல்ல. அது பூமி குளிர்ந்து வருவதைப் பற்றியது!
இன்று சுற்றுச் சூழல் என்பது பெரிய பிசினஸ் ஆகிவிட்டது. பல கோடி டாலர்கள் பன்னாட்டு அளவில் இதற்காக முதலீடு செய்ய்ப்பட்டிருக்கின்றன. என்று அவர் மேலும் மேலும் அடுக்கிக் கொண்டே போனார்.
இப்போது எனக்குத் தெரிய வேண்டியதெல்லாம் புவியின் வெப்பம் கவலைப்படும் அளவு அதிகரித்து வருகிறதா இல்லை மிகைப்படுத்துகிறார்களா?
தெரியாவிட்டால், மூளைக்கு ஏதாவது ஆகிவிடக் கூடும். அப்படியானால் யாராவது இந்த தகிக்கும் வெயிலைக் கூடப் பழி சொல்லக்கூடும்!
சிங்கப்பூர் தமிழ் முரசுக்கு எழுதியது
1 day ago
10 comments:
சார், நீங்க் உண்மையான் மாலன் தானா?, இல்லை அந்த பெயரில் உலவும் போலியா?....
சந்தேகமே வேண்டாம். நான் நானேதான்
போலிகள் தொல்லை அதிகமாகி விட்டது. அதனால் தான் எழுத்தாளர் மாலனா என்று உறுதி படுத்தி கொள்கிறேன். அப்துல் கலாமுக்கு 66 பக்கங்களில் கடிதம் எழுதியிருக்கிறேன். நீங்கள் டெல்லி போனால் அவரிடம் கொடுத்து விடுகிறீர்களா?
//உண்மைத்தமிழன் said...
சார், நீங்க் உண்மையான் மாலன் தானா?, இல்லை அந்த பெயரில் உலவும் போலியா?....//
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
போலிகள் தொல்லை அதிகமாகி விட்டது. அதனால் தான் எழுத்தாளர் மாலனா என்று உறுதி படுத்தி கொள்கிறேன். அப்துல் கலாமுக்கு 66 பக்கங்களில் கடிதம் எழுதியிருக்கிறேன். நீங்கள் டெல்லி போனால் அவரிடம் கொடுத்து விடுகிறீர்களா?//
மாலன் ஸார்.. இந்த இரண்டு பேருமே என் பெயரில் உலா வரும் போலி உண்மைத்தமிழன்தான்.. நீங்கள் இப்போது புதியவர் என்பதால் என் விஷயம் உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இரண்டாவது உண்மைத்தமிழனின் பெயரோடு நம்பர் இருக்கிறதல்லாவா.. அதன் மீது உங்களது mouse வைத்தீர்களானால் screen-ல் bottom left side இதே பெயருடன் நம்பரும் display ஆகும். அங்கே தென்படுகின்ற நம்பரும் மேலே இருக்கின்ற நம்பரும் ஒன்றாக இருந்தால்தான் அது உண்மையான நபரிடமிருந்து வந்திருக்கும் மெயில்.. இதிலேயே நீங்கள் சோதனை செய்து பாருங்கள்.. நம்பர் 04330845515232444148 என்று வரும்..
கடந்த இரண்டு மாதங்களாக வலையுலகில் என் பெயரில் இந்த போலி பல இடங்களில் பதிவுகளைப் போட்டு என் உயிரை எடுத்துக் கொண்டிருக்கிறான். ஏதோ எழுதலாம் என்று வந்தால் இந்த கிறுக்குகளையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது..
தயவு செய்து மேலே இருக்கும் மூன்று பின்னூட்டங்களையுமே டெலீட் செய்து விடுங்கள்..
என் பொருட்டு தொந்தரவிற்கு மன்னிக்கவும்..
என் பெயருடன் வரும் நம்பரை சோதித்துப் பாருங்கள். அதே நம்பர்தான் கீழேயும் இருக்கும்.
ரொம்ப நாள் கழித்து மாலன் இப்போதுதான் உள்ளே வந்தார்.வந்தவுடன் பயமுறுத்தியாகிவிட்டதா?
மாலன்,
உங்கள் வரவு நல்வரவாகுக! :)
சகபதிவர் சி. ஜெயபாரதன் அவர்களும் இதைப்பற்றி விளக்கமாக ஒரு பதிவு போட்டிருக்கிறார். பாருங்கள்...
சூட்டு யுகப் பிரளயம் ! மாந்தர் பிழைப்ப தெப்படி ?
நீங்க குழம்பினது போதாதா? எங்களையும் குழப்பறீங்களே! :P நிஜமா பூமி குளிர்ந்து வருதா, அல்லது சூடாகி வருதான்னு கேட்டுச் சொல்லுங்க! :)
Arunagiri: Quotable quotes - Alternates on Global Warming « Snap Judgment
(இந்தப் பதிவை விட, பதிவில் இருக்கும் பின்னூட்டத்தில் சுட்டிகள் முக்கியமானவை :)
Post a Comment