Sunday, October 02, 2016

இலக்கியம் - சில அடிப்படைகள்

லக்கியம் என்பது என்ன?

புற உலகின் யதார்த்தங்கள் நம் மனதில் அதாவது சில சித்திரங்களை, எண்ணங்களை உருவாக்குகின்றன. அந்த மனம் படைபூக்கம் கொண்டதாக இருந்தால் அது தனது அகச் சித்திரத்தை படைப்பாக உருவாக்குகிறது. அது மொழி வழி வெளிப்படும் போது அதை இலக்கியம் என்கிறோம்

அக உணர்வுகள், சிந்தனைகள், குழப்பங்கள் இவை மாத்திரம் கொண்ட படைப்புகளும்  உள்ளனவே?

ஆம். அந்தப் படைப்புகளுக்கான தூண்டுதலும் பெரும்பாலும் புற உலகின் யதார்த்தங்களாகத்தானிருக்கும். உதாரணம் மரணம், காமம், காதல்,நோய்

புனைவுகள் மட்டும்தான் இலக்கியமா?
ஒருவர் தன் அகச் சித்திரத்தைப் படைப்பாக வெளியிடத் தன் வசம் உள்ள கருவிகளைச் சார்ந்திருக்கிறார். அவற்றில் ஒன்று புனைவு.அநேகமாக அது நம் எல்லோரிடமும் இருக்கிறது. சிறு வயது முதலே பயன்படுத்தி வந்திருப்பதால் நமக்கு அதில் நம்மை அறியாமலே ஒரு பயிற்சி இருக்கிறது. வாசிப்பு அதை செழுமைப்படுத்துகிறது. அதனால் பலர் அதைப் பயன்படுத்துகிறார்கள். நம்முள் உருவாகும் அகச் சித்திரத்தின் தெளிவற்ற பகுதிகளை இட்டு நிரப்பவும் அது பயனளிக்கிறது. இலக்கியத்தில் புனைவின் இடம் எந்தளவு இருக்க வேண்டும், அவை தர்க்கம் சார்ந்து இருக்க வேண்டுமா என்பது பலகாலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. 
முற்றிலும் புனைவு தவிர்த்த படைப்புக்களும் புனைவு குறைந்த படைப்புக்களும் கூட உண்டு

வடிவம், மொழி நடை, இவையும் கருவிகள்தானா?

புனைவு என்ற கருவியின் கருவிகள் இவை.கணினியும் மென்பொருளும் போல. கைபேசியும் appம் போல. தொலைக்காட்சி பெட்டியும் நிகழ்ச்சியும் போல. இலக்கியம் தன் புனைவுக்கும்  தேவைக்கும் ஏற்ப வடிவத்தையும் மொழியையும் தேர்ந்து கொள்கிறது

நவீன இலக்கியத்தில் கவிதை, ஒன்றை  - உணர்ச்சியோ, அனுபவமோ, தத்துவமோ, அல்லது இவற்றின் வழி அறிந்த கருத்தியலோ- உணர்த்தினால் போதுமானது எனக்கருதப்படுகிறது. பாரதியின் காக்கைச் சிறகினிலே பாடல் ஓர் சிறந்த உதாரணம்.இதை வேறு வடிவில் சொல்ல முடியாது. ஒரு சம்பவம், அதன் வழி பெறப்படும் தரிசனம் இவை சிறுகதைக்குத் தேவை.  வாழ்க்கை அனுபவம், அந்தப் பயணத்தில் மாறும் மனம், இவை நாவலுக்கு உகந்தவை. 

தர்க்கமற்ற மிகை புனைவு மாந்திரீக யதார்த்தத்திற்கு உதவும். குறைந்த புனைவு புனைவற்ற புனைவுக்குத் ( non fiction fiction)  தேவை. செறிவான மொழிநடை செவ்வியல் காவியங்களுக்கு உகந்தது வட்டார வழக்கை யதார்த்தவாத கதைகளில் காணலாம்

இலக்கியத் தரம் என்கிறார்களே அது என்ன?

பொருட்களின் தரத்தைப் போல புலன்களால் அறியப்படுவதல்ல இலக்கியத்தின் தரம். அது மனம் சார்ந்தது. தமிழ் இலக்கியம் பெரும்பாலும் ரசனை சார்ந்து மதிப்பிடப்படுகிறது. ரசனை என்பது ஆளுக்கு ஆள் வேறுபடக் கூடியது. ரசனையின் உட்கூறுகளாக அமையும், வாழ்வனுபவம், கலாசார மரபு,   அழகுணர்ச்சி, நம்பிக்கைகள், விழுமியங்கள், ஆளுக்கு ஆள், சமூகத்திற்கு சமூகம், நாட்டுக்கு நாடு. வேறுபடக்கூடியவை. 

வைதீக மரபில் வந்தவர்களின் ரசனையும் வேறு மரபுகளில் வளர்ந்தவர்களின் ரசனையும் வேறு வேறாக இருப்பதைப் பல தருணங்களில் பார்க்கலாம். 
வெள்ளைத் தோல், கறுப்புத் தோல், நெடுங்கூந்தல், கத்தரிக்கப்பட்ட முடி, ஆழ்ந்த வர்ணங்கள், வெளிர் நிறங்கள் என ஆளுக்கு ஆள், சமூகத்திற்கு சமூகம், அழகுணர்ச்சி, அது சார்ந்த ரசனை வெளிப்படும். 

இதே போல்தான் இலக்கியமும். செவ்வியல் மரபில் தோய்ந்தவர்கள், செவ்வியல் இலக்கியம் எழுத விருப்பம் கொண்டவர்கள், நுட்பமான எழுத்தைக் கொண்டாடுவார்கள். நுட்பம் என்பது கலை ஞானத்தின் வெளிப்பாடு,ஞானம் வாய்க்கப்பட்டோர் மேலோர் (elite) என்பது அவர்களது நம்பிக்கை. இசையில் இதை வெளிப்படையாகக் காணலாம். ஒரு ராகத்தின் அழகை ரசிக்க அதன் நுட்பங்களை அறிந்திருக்க வேண்டும். அதனால் அது செவ்வியல் இசை (classical music) ஆனால் திரைப்பட இசையை ரசிக்க நுட்பங்களை அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. திரைப்பாடல்கள் பெரும் அதிக அளவில் மக்களைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டது. அதில் நுட்பத்திற்கோ, ஞானத்தை புலப்படுத்தவோ அதிக வாய்ப்பில்லை.திரைப்பாடல்களை ரசிப்போர் பெரும்பாலும் ஞானத்தின் அடிப்படையில் அன்றி , அது எழுப்பும் உணர்ச்சிகளின் அடிப்படையில் அதனை ரசிக்கிறார்கள். உணர்வுகளின் அடிப்படையில் அமைந்ததால் அது தாழ்ந்தது. அதாவது அது light music

இதே கண்ணோட்டத்தில் இலக்கியத்தை அணுகுவோர் இருக்கிறார்கள். நுட்பம், ஞானம், இவற்றிற்கு இடம் குறைவாகவும், உணர்ச்சி, வெகு ஜனங்களைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்ட எழுத்துக்கள் தாழ்வானது என்பது அவர்களது கருத்தாக இருக்கும்

இந்த  'எலிட்டிச' மனோபாவத்திற்கு இரையானோரின் பின்புலங்களை ஆராய்ந்தால் அவர்கள் வைதீக மரபில் வந்தோராக, அல்லது அது குறித்த பெருமித உணர்வு கொண்டோராக, குறைந்த பட்சம் அதற்கெதிரான உணர்வு அற்றவராக இருப்பதைக் காணலாம். காரணம், வேத மரபு, மேல் கீழ் என அதிகாரப்படிநிலை கொண்ட சமூக அமைப்பில் நம்பிக்கை கொண்டது

அவர்களுக்கு யதார்த்தத்தை விட தொன்மம் முக்கியமானதாகத் தோன்றும். இலக்கியம் தனிமனிதனுக்கானது எனக் கருதுபவர்கள் பிரசாரம்  கூடாது என்பார்கள். பிரசாரம் சமூக நோக்கம் கொண்டது .

ஞானம், நுட்பம் கொண்டவர்கள் எந்த சமூகத்திலும் எண்ணிக்கையில் குறைவாக இருப்பார்கள் என்பதால் எலைட்கள் குழுவாக இயங்குவார்கள். குழு நலன் கருதி ரசனை குறித்த அவர்களது விளக்க உரைகள் மாற்றம் கொள்ளும். குழுவின் இயக்கத்தை கேள்விக்குள்ளாக்குபவர்கள் இகழ்ந்துரைக்கப்படுவார்கள் அல்லது புறக்கணிக்கப்படுவார்கள்.

இதைத் தெளிவாக உணர்ந்து கொள்ள தமிழில் வெளியாகும் இலக்கியச் சிற்றேடுகளின் செயல்பாடுகளை அவதானித்தால் போதும்

சூழல், காலம், சமூக வரலாறு, கலாசார மரபு இவற்றால்
வேறுபடும்  ரசனையை ,இலக்கியத் தரத்தை அளவிடும் பொது அளவுகோலாக ஏற்றுக் கொள்ள இயலாது. அப்படி ஏற்றுக் கொள்பவர்களின் நோக்கம் இலக்கியம் அல்ல

அப்படியானால் இலக்கியத்தை மதிப்பிடுவது எப்படி?

ஒரு படைப்பு அது எடுத்துக் கொண்ட பொருண்மையை, அந்தப் பொருண்மையை புலப்படுத்த எடுத்துக் கொண்ட சூழலை, அதன் பிரதி எப்படி வெளிப்படுத்துகிறது - மேம்படுத்துகிறதா, கைவிடுகிறதா, சிதைக்கிறதா- என்பதை அளவிடுவதன் மூலமே படைப்பை அளவிட வேண்டும். Context, text இவைதான் விமர்சனத்தின் அடிப்படை.

இதில் context என்பது படைப்பினுள் இயங்கும் சூழல் மட்டுமல்ல, படைப்பு உருவாகும் சூழலையும் குறிக்கும். ஏனெனில் படைப்பு சமூக நோக்கம் கருதியது. சமூகம் சூழல் சார்ந்தது. 

பாரதியின் தேசியப்பாடல்களை மதிப்பிடுகையில் அதன் காலச் சூழலைக் கணக்கில் கொள்ளாத ரசனை விமர்சகர் அவை வெறும் மேடை முழக்கங்கள் (rhetoric) என்ற முடிவுக்கு வந்து சேர்வார். 
காலச் சூழலைப் போல இடத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். காலனி ஆதிக்கத்தின் போது அறுபட்ட கலாச்சார மரபை மீட்டெடுக்க தாய்த் தமிழகத்தில்  பாரதி, திருவிக, பாரதிதாசன் , போன்ற ஆளுமைகள் முன்னின்று வழிநடத்திய இயக்கங்களைப் போல மலேசிய, சிங்கையில் இயக்கங்கள் தோன்றவில்லை. கோ.சா. அப்படி ஓரு முயற்சியை மேற்கொண்டார். ஆனால் அது ஓர் குறுகிய காலத் தாக்கத்தையே ஏற்படுத்தி அரசியல் பலன்களைப் பெறுவது நோக்கித் திரும்பிற்று. 

சூழல் எனப் பேசும் போது படைப்பாளியின் பின்புலமும் கவனத்தில் கொள்ளத் தக்கதே. சிங்கையின் நிரந்திரவாசிகள் தமிழகத்தில் வாழ்ந்த போது, பன்முகத் தன்மை கொண்ட ஊடகங்களின் வழியே பன்முக வாசிப் பிற்குப் பழக்கப்படுத்தப்பட்டவர்கள். இலக்கியம், கலை என்பவை அவர்களுக்கு வீடு தேடிச் சென்று வழங்கப்பட்டன. வேளாண் சமூகங்களில் செவ்வியல் கலைகளுக்கு நிகரான நாட்டார் வழக்குகள் இருந்தன. இவையெல்லாம் சிங்கையில் பிறந்து வளர்ந்த சிங்கப்பூரியர்களுக்கு குறைவு

எனவே சூழலைப் பின்புலமாகக் கொண்டு பிரதியை அளவிடும் அணுகுமுறையைக் கைவிட்டு, தமிழகத்தில் தங்களை மேட்டுக்குடி மேலோர்களாக, eliteகளாக, நிறுவிக் கொள்ளப் பயன்பட்ட, ரசனைத் தராசு கொண்டு, செவ்வியல் பார்வையில் மதிப்பிட்டு  சிங்கை இலக்கியத்தை மட்டுமல்ல எந்த படைப்பையும் குப்பை எனப் புறந்தள்ளுவது முறையாகாது

நினைவில் கொள்ளத்தக்க சில யதார்த்தங்கள்

உலகம் பன்முகத்தன்மை கொண்டது. ஐந்து விரல்களும் ஒன்று போல் அமைந்தவை அல்ல. ஒரு மலரின் இதழ்களும் ஒரே அளவினால் அமைந்தவை அல்ல. ஒரே கனியே -எடுத்துக்காட்டாக மாங்கனி- பல்வேறு வகைகளும் சுவையும் கொண்டது.இந்த plurality, ஒரு பலம் என்பதை இயற்கை காலங்காலமாக மெய்ப்பித்திருக்கிறது.மாறாக ஒற்றைக் கலாசார ஆதிக்கம் (cultural  hegemony) தீதானது. 

சிங்கை மலேசிய தேசிய இலக்கியங்களை உருவாக்க விழையும் அரசு அமைப்புக்கள், கல்வி நிறுவனங்கள், எழுத்தாளர்கள், சிங்கை - மலேசிய இலக்கியங்கள் தமிழக இலக்கியங்களின் நகலாக இருக்க வேண்டியதில்லை என்ற யதார்த்தத்தை ஏற்க வேண்டும். 

இங்கு வேண்டியது பன்முகத்தன்மையை அங்கீகரிக்கும் வழிகாட்டிகளேயன்றி சட்டாம்பிள்ளைகள் அல்ல

இலக்கியம் என்பது என்ன?

Thursday, May 26, 2016

பாடங்கள் பல. கற்பார்களா?

வாக்குப் பதிவு நாளிலிருந்து முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன் தினம்  வரை  வானம் பொழிந்து கொண்டிருந்தது. கதிரவன்  கண்ணில் அகப்படவில்லை.  ‘நாளை  சூரியன் உதிக்கும்என்று முகநூலில் சிலேடையாக எழுதி  மகிழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக,  மறுநாள் தேர்தல் முடிவுகள் வெளியாகின.
அவர்களுக்கு மட்டுமல்ல, கணிதப் புலிகளான கருத்துக் கணிப்பாளர்களின் கணிப்புக்களும் பொய்த்தன. ஒரு வட இந்திய நிறுவனம் , ஒரு தமிழ்த் தொலைக்காட்சி  ஆகிய இரு நிறுவனங்களின் கணிப்புக்கள் மாத்திரம் தப்பின.
எம்.ஜி.ஆருக்குப் பின், கடந்த 32 ஆண்டுகளில் நடைபெற்ற ஆறு தேர்தல்களில், ஆட்சியில் இருந்து கொண்டு தேர்தலைச் சந்தித்த முதல்வர்கள் யாரும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதில்லை. அந்த வரலாற்றை முறியடித்திருக்கிறார். ஆனால் அது மட்டுமல்ல அதன் சிறப்பு. தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றலும், உடல் நலிவுற்ற நிலையிலும் மக்களின்  தளராத நம்பிக்கையைப் பெற்றிருந்தவருமான எம்.ஜி.ஆர் கூட தேர்தல் என்று வரும்போது கூட்டணிகளைத் தவிர்த்ததில்லை. ஆனால் ஜெயலலிதா, கூட்டணியே வேண்டாம் என்ற தீர்மானத்தோடு களமிறங்கினார். இரண்டாண்டுகளுக்கு முன்னரே மக்களவைத் தேர்தலில் தனித்துக் களமிறங்குவதை அவர் பரிட்சித்துப் பார்த்திருந்தாலும் இந்த முறை ‘ரிஸ்க்’ அதிகமிருந்தது.
அவரைப் பதவியிலிருந்து இறக்க 10 கட்சிகள் கங்கணம் கட்டிக் கொண்டு  அணி வகுத்திருந்தன. பாலினம் சார்ந்தும், தோற்றம் சார்ந்தும், அவரது தனி வாழ்க்கை குறித்தும் கொச்சையான பேச்சுக்களைக் கூச்சமின்றி கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களே வீசிக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலான ஊடகங்களும், சமூக  ஊடகங்களும் அவருக்கு எதிரான மனநிலையைக் கட்டமைக்க முயன்றன. பெரும்பாலும் பெண்களைக் கொண்ட அவரது வாக்கு வங்கியை அசைத்துப் பார்க்கும் நோக்கோடு அரசியல் கட்சிகள் மதுவைக் கையிலேந்தின. ஆட்சியிலிருந்து கொண்டு தேர்தலைச் சந்திக்கும் சங்கடம் வேறு இருந்தது. இரண்டாம் நிலைத் தலைவர்களை வளர்த்தெடுக்காத காரணத்தால் பிரச்சாரத்தைப் பெரும்பாலும் அவரே செய்ய நேர்ந்தது. இன்று அவர் ஈட்டியிருக்கிற வெற்றி இத்தனை தடைகளையும் தாண்டி ஈட்டியிருக்கிற வெற்றி.
ஆட்சிக்கு வரவில்லை என்றாலும் இந்தத் தேர்தல் திமுகவிற்கும் வெற்றி தந்திருக்கும் தேர்தல்தான். 2014 மக்களவைத் தேர்தலில் பூஜ்யம் பெற்ற திமுக இன்று தொண்ணூறைத் தொட்டுக்  கொண்டு நிற்கிறது. தமிழகத்திலேயே மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவராகத் திகழ்கிறார் கருணாநிதி. சட்டமன்றத்தில் எதிர்கட்சி வரிசை முழுவதிலும்  திமுக கூட்டணியினரே  அமர இருக்கிறார்கள்.
ஆனால்-
இந்தத்  தேர்தல் அரசியல் கட்சிகளுக்குச் சில பாடங்களையும் முன் வைத்திருக்கிறது.
மக்கள் நலக் கூட்டணி : இடதுசாரிகளைப் போன்ற சித்தாந்திகள், விடுதலைச் சிறுத்தைகளின் களப்பணியாளார்கள், விஜயகாந்த் என்ற நட்சத்திர முகம், வைகோ, வாசன் என்ற கறைபடாத அரசியல்வாதிகள் எனத் தேர்தலில் வெல்வதற்கான அத்தனை கருவிகளையும் கொண்டிருந்த இந்த அணி  இந்தத் தேர்தலில் மிக மோசமான தோல்வியைக் கண்டது ஏன்?  ஊடகங்களைப் பார்த்து உமிழ்ந்தது, ‘எடுத்து அடிச்சேனா, தெரியுமா!’ என மிரட்டியது, தொலைக்காட்சிப் பேட்டியில் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பாதியில் எழுந்து ஓடியது, வேட்பு மனுத்தாக்கல் வரை போய் கடைசி நிமிடத்தில் பின் வாங்கியது எனப் பல செயல்கள் முகம் சுளிக்க வைத்தன என்ற போதும்  அவர்கள் மதிப்பிழக்கக் காரணமாக இருந்தது அவர்கள்  மேற்கொண்ட எதிர்மறையான பிரச்சாரம்.  தங்களுடைய செயல்திட்டங்களை முன்னிறுத்திப் பேசாமல், பொதுவாழ்வில்  80 ஆண்டுகளைச் செலவிட்ட கருணாநிதியையும், 30 ஆண்டுகளைச் செலவிட்ட ஜெயல்லிதாவையும் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியது  மக்களிடம் நன் மதிப்பை ஏற்படுத்தவில்லை.  கடந்த தேர்தல் வரை இரண்டு திராவிடக் கட்சிகளையும் சார்ந்து தேர்தலைச் சந்தித்து, பதவிகளும் பெற்றவர்கள்,  பெரிய  அரசியல் காரணங்களுக்காக இல்லாமல் சொந்த நலன்களுக்காக கூட்டணி கண்டதை மக்கள் அங்கீகரிக்கவில்லை.  எல்லா சமூகத்தினரும் அமைச்சரவையில் பங்கு பெறும் தமிழகத்தில், பல கட்சிகள் பங்கு பெறும் கூட்டணி ஆட்சிக்கு அவசியமிருப்பதாக மக்கள் கருதவில்லை. அந்தக் கருத்தியல் அதிகாரப் பசி கொண்ட சந்தர்ப்பவாதக் கூற்றாகவே பார்க்கப்பட்டது
பாமக:  தமிழகத்தின் பிரச்சினைகள் குறித்துத் தெளிவான திட்டங்களோடு ஓராண்டிற்கு முன்னரே  களமிறங்கிய பாமக ஏன் வெற்றி காணவில்லை? இரண்டு முக்கிய காரணங்கள். ஒன்று எதிர்காலத்தை மனதில் கொண்டு அது பேசிய போதும் மக்கள் மனதில்  அதன் கடந்தகாலமே பதிவாகியிருந்தது. இரண்டாவது அதன் பிரச்சார வடிவங்கள் புதுமையாக இருந்த போதிலும் இந்த மண்ணுக்குப் பொருந்தாது அன்னியமாக இருந்தன. ஒரு நபரை முன்னிறுத்தி வாக்குக் கேட்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் அவரை விளம்பரப்படுத்தும் சுவரொட்டிகள், பதாகைகள், வாசகங்கள் முக்கியத்துவம் பெறும். அதே உத்தியை இங்கு பயன்படுத்தினார் அன்புமணி. அவரது மாற்றம்  என்ற முழக்கம், 2008 ஆம் ஆண்டு அதிபர் பதவிக்கு முதல் முறையாகப் போட்டியிட்டபோது ஒபாமா வைத்த முழக்கம். அப்போது வடிவமைக்கப்பட்ட சுவரொட்டிகளின் டிசைனை அப்படியே பயன்படுத்தினார் அன்புமணி. அவரது மேடைகள் அங்கு நடக்கும் விவாத மேடைகளைப் போல அமைக்கப்பட்டன. வேண்டும் மாற்றம் வேண்டும் பாமக என்பதற்கு பதில் வேண்டும் அன்புமணி என்பது முழக்கமாக வைக்கப்பட்டது. மோடியின் உதாரணத்தைப் பின்பற்றி தனி நபரை முன்னிறுத்தி கட்சியை ஜெயிக்க வைக்க முடியும் என்ற அணுகுமுறை பிழையாக முடிந்தது 2021க்கு வெள்ளோட்டம் பார்க்கிறார்கள் என்ற எண்ணமே மிஞ்சியது
பாஜக: மாநிலத்தில் கட்சியை வழி நடத்தும் பொறுப்பை ஏற்றவர்கள் கட்சிகுத் தனித்துவமான அடையாளம் ஏற்படுத்தும் விழைவில் மேற்கொண்ட முயற்சிகள் அதைத் தனிமைப்படுத்துவதாக முடிந்தன. ஆனால் அதைக் குறித்த கவலைகளின்றி  தமிழகக் கிளை இயங்கிக் கொண்டிருந்தது. உறுப்பினர் சேர்க்கையின் போது 50 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்திருப்பதாக அதன் அகில இந்தியப் பொதுச் செயலாளர் முரளிதரராவ், 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று  பெரம்பலூரில் நடைபெற்ற  பண்டிட் தீனதயாள் உபாத்யாய பயிற்சியாளர் முகாமில் பேசும் போது தெரிவித்தார். அப்படியானால் இந்தத் தேர்தலில் பாஜக 50 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அது பெற்ற வாக்குகள், சுமார் 12 லட்சம் மட்டுமே (12,28,692 வாக்குகள்) அதாவது 38 லட்சம் பாஜக உறுப்பினர்களே பாஜகவிற்கு வாக்களிக்கவில்லை! மிகைபடப் பேசும் குழந்தைத்தனமான மனோபாவத்தைக் கைவிட்டு, நடைபயில்கிற குழந்தைக்கு நடை வண்டி சிறிது காலத்திற்குத் தேவை என்பதை பாஜக உணர வேண்டும்
திமுக; அதிமுகவிற்கு மாற்று நாங்கள்தான் என்பதை நிரூபித்திருக்கிற திமுக செய்து கொள்ள வேண்டிய சுய பரிசோதனைகள் ஏராளம். 2006-11 காலகட்டத்தில் அது நடத்திய ஆட்சி மக்களிடம் சில கசப்பான நினைவுகளை விட்டுச் சென்றிருக்கிறது. அதனால்தான் அந்தக் காலகட்டத்திற்குப் பின் அதனால் ஆட்சியைப் பிடிக்க இயலாமல் திணறிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை அது ஏற்க வேண்டும். அதனுடைய எதிர்காலம் அது எத்தகைய எதிர்கட்சியாகச் செயல்படுகிறது என்பதைப் பொறுத்தது. எதற்கெடுத்தாலும் குறை சொல்லிக் கொண்டிருக்காமல், முட்டுக் கட்டை போடாமல், தமிழ்நாட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு உழைத்தால் அது மக்களிடம் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறும்
அதிமுக; ஆட்சியை மக்கள் தங்கத் தாம்பாளத்தில் வைத்து நீட்டிவிடவில்லை என்பதை எப்போதும் நினைவில் கொள்வது நல்லது. இந்தத் தேர்தலில் இரண்டு பெரிய கட்சிகளுக்குமிடையே உள்ள வாக்கு வித்தியாசம் மிகக் குறைவு. நூலிழைதான். கடந்த ஆட்சியில் முக்கியப் பொறுப்பு வகித்த அமைச்சர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். நிர்வாகத்தில் கடுமையான சவால்கள், குறிப்பாக நிதித்துறையில், காத்திருக்கின்றன. செயல் திறன் மேம்பட வேண்டும். கெட்டிக்காரத்தனமான முடிவுகள் எடுப்பதில் மட்டுமல்ல, அதை நிறைவேற்றுவதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது. சட்டமன்றத்தில் வலுவான எதிர்கட்சி. எனவே விமர்சனங்களை ஏற்கும் பக்குவம் வேண்டும். எதிர்காலம் என்பது இரண்டாம் நிலைத் தலைவர்களை வளர்த்தெடுப்பதில் இருக்கிறது..    

தினமணி - 24.5.2016

Monday, April 04, 2016

ஏன் இந்த சரணாகதி

ஊருக்கு நடுவே ஒரு நதி. பரந்து கிடக்கும் பசும் வயல்கள். சுற்றிலும் குளங்கள். தொலைவில் முகில்கள் உரசிச் செல்லும் மலை முகடுகள். ஊரில் ஒன்பது நிலைகளோடு நெடிதுயர்ந்து நிற்கும் ஒரு பழங்காலச் சிவன் கோயில். அதிலொரு மணி மண்டபம். கல்லெடுத்து அதன் தூண்களில் தட்டினால் இசை உதிரும் அழகான ஊர்தான் களக்காடு. தீட்டிய திலகம் கலைந்ததைப் போல அதன் வரலாற்றில் சிறிது ரத்தக் கறையும் உண்டு.
அங்கு தலித்களின் குடிசைகளுக்கு அருகில் விரிந்து கிடந்த வயல்களில் பயிர் வேலை செய்து கொண்டிருந்தான் ஒரு கரிய இளைஞன்; 21 வயதிருக்கும். களை பறித்து நிமிர்ந்த போது கண் எதிரே காவல்துறை வந்து நின்றது. எதிர்பார்த்ததுதான்; எனவே, பதற்றமடையவில்லை. தன்னுடைய தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு வருகிறது; அது இனிச் சிறை வாழ்க்கையாகத் தொடரும் என அந்தக் கம்யூனிஸ்ட்டுக்குத் தெரியும்.
ஆனால், எதிர்பாராதது சித்திரவதை. அள்ளிக் கொண்டு போன காவலர்கள், காவல் நிலையத்தில் அவரைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டார்கள். மீசை முடிகளை ஒவ்வொன்றாக ரத்தம் கசியக் கசியப் பிய்த்தெறிந்தார்கள். காரணம்? தேடப்பட்டு வந்த தனது சகாக்களைக் காட்டிக் கொடுக்க மறுத்ததுதான்.
அந்த இளைஞன் அப்பழுக்கற்ற அரசியல்வாதி என்று இன்று எல்லோராலும் கொண்டாடப்படும் ஆர்.நல்லக்கண்ணு. அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பியதற்காக சுதந்திர இந்தியாவில் (1952) தண்டிக்கப்பட்டவர்களில் ஒருவர். அரசால் புனையப்பட்ட திருநெல்வேலி சதி வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்.
வசீகரமான சத்தியங்களோடு மக்கள் நலக் கூட்டணி உருவானபோது அதன் முதல்வர் வேட்பாளராக நல்லக்கண்ணு அறிவிக்கப்பட வேண்டும் என அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆவல் தொனிக்கும் முணுமுணுப்புகள் முளைத்தன. ஆனால், "முதல்வர் வேட்பாளர் என ஒருவரை அறிவிக்கும் நடைமுறையை நாங்கள் ஏற்கவில்லை. தேர்தல் முடிந்து சட்டப் பேரவை உறுப்பினர்கள் அதை முடிவு செய்வார்கள்' எனக் கூட்டணியின் தலைமை அறிவித்ததும், அதுவும் சரிதானே என்று அந்தக் குரல்கள் அடங்கிப் போயின.
ஆனால் சில வாரங்களுக்குப் பிறகு, நடிகராகத் தொழில் செய்து, திரையில் பயங்கரவாதிகளைப் பந்தாடி, புள்ளிவிவரங்களால் தன் புலமையை வெளிப்படுத்திய விஜயகாந்த் எங்கள் முதல்வர் வேட்பாளர் என அந்தக் கூட்டணி பிரகடனப்படுத்தியது. தங்கள் கூட்டணியின் பெயரோடு அந்த நட்சத்திரத்தின் பெயரையும் பிணைத்துக் கொண்டது.
அந்தக் கூட்டணி ஏற்கெனவே ஒரு வரைவுச் செயல்திட்டத்தை அறிவித்திருந்தது. அதை நட்சத்திரத் தலைவர் ஏற்றுக் கொண்டதாக ஏதும் அறிவிப்பு வரவில்லை. அவர் ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தார். அது பல துறைகளில் தனியார்மயத்தை வரவேற்றிருந்தது. அதை இடதுசாரிகள் ஆட்சேபித்ததாகத் தகவல் ஏதும் இல்லை.
தனது வரலாற்றுப் பெருமை, தத்துவம் சார்ந்த எளிமையான அரசியல் நடைமுறை, லட்சியங்கள், கொள்கைகள் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு இடதுசாரிகள் விஜயகாந்த் கட்சியோடு கூட்டணி அமைத்துக் கொள்ள ஆர்வம் கொண்டதன் பின்னுள்ள ரகசியம் என்ன? திராவிடக் கடசிகளுக்கான மாற்று அரசியல் என்று அவர்கள் சொன்ன போதிலும் இப்படி ஒரு கூட்டணி உருவானதற்கான அடிப்படைக் காரணம் என்ன?
உண்மையான நோக்கம் ஆட்சியைப் பிடிப்பதல்ல, கட்சியைக் காப்பாற்றுவது. அரசியல் கட்சிகளைப் பதிவு செய்து கொள்வதற்கும், தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் என அங்கீகரிப்பதற்கும் அவற்றுக்குச் சின்னங்களை ஒதுக்குவதற்கும் சில விதிமுறைகளை வகுத்து தேர்தல் ஆணையம் 1968-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி ஓர் ஆணை வெளியிட்டது.
1997-ஆம் ஆண்டு அந்த ஆணையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. தற்போதுள்ள ஆணை கட்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்க, அளிக்கப்பட்ட அங்கீகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள, சில விதிகளை வகுத்துள்ளது.
ஒரு கட்சி தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்பட குறைந்தது நான்கு மாநிலங்களில் ஆறு சதவீத வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். அத்துடன், மக்களவையில் குறைந்தது நான்கு இடங்களையாவது பெற்றிருக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாவிட்டால், தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்பட இன்னொரு வழியும் உண்டு. மக்களவையில் 11 இடங்களைப் பெற்ற கட்சி (மக்களவையில் உள்ள மொத்த இடங்களில் 2%) தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்படும். ஆனால், அந்தப் 11 இடங்கள் குறைந்தது மூன்று மாநிலங்களிலிருந்தாவது பெறப்பட்டிருக்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்களவையில் 9 எம்.பி.கள் இருக்கிறார்கள் (கேரளத்திலிருந்து 5, திரிபுராவிலிருந்து 2, மேற்கு வங்கத்திலிருந்து 2) அதாவது மூன்று மாநிலங்களிலிருந்து அது எம்.பி.களைப் பெற்றிருந்தாலும் 11 எம்.பி.களைப் பெறவில்லை. சரி, நான்கு மாநிலங்களில் 6 சதவீத வாக்குகளையாவது அது பெற்றிருக்கிறதா?
2011 சட்டப் பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு வங்கத்தில் பெற்ற வாக்குகள் 30.08%, கேரளத்தில் 28.18%. சரி, இரண்டு மாநிலங்கள் ஆயிற்று. இன்னும் இரண்டு? அங்குதான் சிக்கல். 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் அது தமிழ்நாட்டில் பெற்ற வாக்குகள் 2.4% (அதாவது 6 சதவீதத்திற்கும் கீழ்).
2011-க்குப் பிறகு 2014-ஆம் ஆண்டு தெலங்கானா, மகாராஷ்ட்டிரம், ஒடிஸா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றன. அந்த மாநிலங்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளையே அது பெற்றது. எனவே, வாக்கு சதவீதத்தின் படியும் மார்க்சிஸ்ட் கட்சி தேசியக் கட்சி என அங்கீகரிக்கப்படத் தகுதி பெறவில்லை.
இந்தத் தேர்தலில் அது கேரளத்திலோ, மேற்கு வங்கத்திலோ எத்தனை சதவீத வாக்குகள் பெற்றாலும் மேலும் இரு மாநிலங்களில் 6 சதவீத வாக்குகளைப் பெற்றால்தான் அது தேசியக் கட்சி என்ற அங்கீகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். அந்த வகையில், இந்தத் தேர்தல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முக்கியமானது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை இதைவிட மோசம். அது 2011 தேர்தலில் கேரளத்தில் 8.72% வாக்குகளையும், மேற்கு வங்கத்தில் 1.84%, தமிழ்நாட்டில் 1.97% வாக்குகளையும் பெற்றது. மக்களவையில் கேரளத்திலிருந்து ஒரே ஒருவர் எம்.பி.யாக உள்ளார்.
ஒரு கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமானால் அந்த மாநிலத்திற்கு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலிலோ, மக்களவைத் தேர்தலிலோ 6 சதவீத வாக்குகளையும், குறைந்தது 2 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஒருவேளை, 6 சதவீத வாக்குகளைப் பெறவில்லை என்றாலும், குறைந்தது 3 சதவீத வாக்குகளையும் 3 இடங்களையும் பெற்றிருந்தால் மாநிலக் கட்சி என்ற அங்கீகாரம் கிடைக்கும்.
2011 தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடவில்லை. எனவே, சட்டப் பேரவையில் உறுப்பினர்கள் இல்லை. வாக்கு சதவீதம் பற்றிய பேச்சே இல்லை. 2014 மக்களவைத் தேர்தலிலும் அது போதுமான வாக்கு சதவீதத்தைப் பெறவில்லை. எனவே அங்கீகாரம் என்ற நோக்கில், அதற்கும் இந்தத் தேர்தல் முக்கியமானது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலையும் இதைப் போன்றதுதான். 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. 1.5% வாக்குகளைப் பெற்றது. 2014 மக்களவைத் தேர்தலிலும் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை.
இடதுசாரிகளுக்கும், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கும் அங்கீகாரம் என்ற கோணத்தில் இந்தத் தேர்தல் முக்கியமானது. பெரிய கட்சிகளோடு கூட்டணி வைத்துக் கொண்டால், அந்தக் கட்சிகள் ஒற்றை இலக்கத்தில், அதிகம் போனால் 20, 25 இடங்கள் மட்டுமே இந்தக் கட்சிகளுக்கு ஒதுக்குகின்றன. அவற்றைக் கொண்டு அங்கீகாரத்திற்குத் தேவையான வாக்கு சதவீதத்தைப் பெற முடியவில்லை.
தனித்துப் போட்டியிட்டால் அதிக இடங்களில் போட்டியிட முடியும். வெற்றி பெறாவிட்டாலும் வாக்கு சதவீதங்களை உயர்த்திக் கொள்ளலாம். போட்டியிட அதிகம் பேருக்கு வாக்களிப்பதன் மூலம் கட்சியிலும் பலரை திருப்திப்படுத்தலாம். இந்த நோக்கில்தான் மக்கள் நலக் கூட்டணி உருவாகியிருக்க வேண்டும்.
ஆனால், கடந்த காலத் தேர்தல் அனுபவங்களின் அடிப்படையில், இந்த நான்கு கட்சிகளோடு இன்னொரு வாக்கு வளம் கொண்ட கட்சியும் தேவை என்பதை அவர்கள் உணர்ந்திருக்கக் கூடும். அந்தப் பதற்றத்தின் காரணமாகவே அவை தங்கள் லட்சியங்களையும், பெருமைகளையும் தாற்காலிகமாக மூட்டை கட்டி வைத்து விட்டு நட்சத்திரத் தலைவரைத் தங்கள் அணித் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
உயிராசை எல்லோருக்கும் இயல்பே அல்லவா

Saturday, April 02, 2016

‘பவர்புல்’லா? ‘கலர்புல்’லா?

“டைனாசர்கள் இறந்து கொண்டிருக்கின்றன, ஆனால் வண்ணத்துப் பூச்சிகள் வாழ முடியும்!” என்று நான் என் உரையைத் தொடங்கிய போது அந்த அரங்கில் இருந்தவர்கள் முகத்தில் மின்னல் போல் முறுவல் ஒன்று கடந்து போனது.காரணம் அதை அவர்கள் அனுபவபூர்வமாக உணர்ந்தவர்கள்.

பதினெட்டு ஆசிய நாடுகளிலிருந்து 20 ஊடகத் தலைவர்கள் ஒருவரை ஒருவர் தொட்டுக்குக் கொண்டு ஒரு வட்ட மேசையில் அமர்ந்திருந்தோம். சீனத்தில் உள்ள ஒரு சிறிய தீவு போ ஓ. 40 சதுரக் கீமீ பரப்பளவு. பத்தாயிரம் மக்கள் தொகை. ஆனால் உலகப்பந்தில் அது ஒரு முக்கியமான புள்ளி.

கடந்த 15 ஆண்டுகளாக, ஆண்டு தோறும் அங்கு வசந்தம் தொடங்கும் தருணத்தில் சீன அரசின் ஆதரவோடு ஒரு சர்வதேச மாநாடு கூடுகிறது. ஆசியாவின் பல நாடுகளிலிருந்து தொழில், வர்த்தக, தொழில்நுட்ப, அறிவுலக, ஊடகத் தலைவர்கள் அங்கு கூடுகிறார்கள்.ஜனாதிபதிகள், பிரதமர்கள், பெரும் நிறுவனங்களின் தலைவர்கள், சர்வதேசப் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்கள், எனப் பலரும்  சமகாலப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கிறார்கள். கருத்துப் பரிமாறிக் கொள்கிறார்கள். சில ஒளிப்புள்ளிகள், சிந்தனை வெளியைக் கடந்து செல்லும் தருணங்கள் வாய்ப்பதுண்டு.

பதினைந்தாண்டுகளாக மாநாடு நடந்தாலும் கடந்த மூன்றாண்டுகளாகத்தான் ஊடகத் தலைவர்கள் அழைக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் ஒரு முறை அழைத்தவரை மறுமுறை அழைப்பதில்லை. என்ன காரணமோ தெரியவில்லை, என்னை மூன்றாண்டுகளும் அழைத்திருந்தார்கள். இந்த முறை எங்கள் முன் நின்ற பிரச்சினை  புதிதாக முளைத்த இணையம் பாரம்பரியமான அச்சு ஊடகங்களைப் புதைகுழிக்கு அனுப்பி வருகிறதே, அதை எதிர் கொள்வது எப்படி?

டைனாசர்களைப் போல அதிர வைக்கவும் ஆட்சிகளை அசைத்துப் பார்க்கவும் வலிமை வாய்ந்த அச்சு ஊடகங்கள் மறைந்து வருகின்றன. ஆனால் பட்டாம் பூச்சிகள் படபடத்துக் கொண்டிருக்கின்றன. இன்று  ‘பவர்புல்’ ஆக இருக்கும் நிலையிலிருந்து மாறி ‘கலர்புல்லாக’ இருக்க வேண்டிய நிலைக்கு ஊடகங்கள்  தள்ளப்பட்டுவிட்டன என்று நான் சொன்னபோது பலர் தலையசைத்தார்கள். இணையம் பற்றிய எனது வேறு சில எண்ணங்கள் விவாதத்திற்குள்ளாகின.

நான் சொன்னேன்:” இணையம் நம்மை பரந்த உலகிற்கு இட்டுச் செல்கிறது என்று நம்புகிறோம். உண்மையில் இணையத்தில் அவரவருக்கு செளகரியமான கூட்டுக்குள்  குந்தியிருக்கிறோம். கேளிக்கைப் பிரியர்களுக்கு இசை, சினிமா, பக்திமான்களுக்கு மதம், காமுகர்களுக்குப் போர்னோ, இலக்கியப் பிரியர்களுக்கு எழுத்துலகம், அடுக்களை ஆர்வலர்களுக்கு சமையல் குறிப்புகள், அவரவருக்கு அவர் விருப்பம். அதற்கு வெளியில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வதில் யாருக்கும் அக்கறை இல்லை.

இணையம் நம்மை முன்னோக்கி நகர்த்துகிறது என்று நம்புகிறோம். ஆனால் உறுதி செய்யப்படாத ஊகங்கள்,  செய்தி என்று பெயரிட்டு, நம்முன் உதிர்க்கும் போது நாம் உண்மையை உறுதி செய்து கொள்ள, ஆவணங்களுத்தான் திரும்ப நேர்கிறது. முன்னோக்கிப் போகிறோமா? பின்னோக்கி நடக்கிறோமா?

மாநாட்டின் ஒரு பகுதியாக சீனப் பிரதமருடன் ஓர் உரையாடல் என அழைந்திருந்தார்கள். மாநாட்டில் கலந்து கொண்ட 350 பேரில் 60 பேரை மட்டும் அழைத்திருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தொழில்துறையினர். ஊடகங்களிலிருந்து மூவர். நான், நேபாளத்தைச் சேர்ந்தவர், இந்தோனேசியர். சீனா இப்போது பொருளாதார மந்தநிலையைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதைப் பற்றி சீனப் பிரதமர் லி கெச்சியாங் சொன்னார். “நம் முன் சவால்கள் நிற்கின்றன. பெரும் சவால்கள். ஆனால் அவற்றை விட நம் திறமைகள் பெரிது. அவற்றை வெல்வோம். சிரமங்கள் இல்லாமல் வெற்றிகள் இல்லை. ஏனெனில் வெற்றிகள் தாமே விளைவதில்லை. முயற்சிகளால் சாத்தியமாகின்றன”

எனக்கென்னவோ அவர் அச்சுப் பத்திரிகைகளுக்காக அதைச் சொல்வது போலிருந்தது   
(கல்கி கடைசிப் பக்கம்)  
ஊடகத் தலைவர்களின் மாநாட்டில் நான் ஆற்றிய உரை குறித்து சீன வானொலி வலைத் தளம் வெளியிட்டுள்ள செய்தி
http://tamil.cri.cn/301/2016/03/22/1s165056.htm

Monday, March 28, 2016

தொண்டர்தம் பெருமை

தேர்தல் காலச் சிந்தனைகள்

தேர்தல் பற்றிய என் கருத்துக்களையும் கணிப்புகளையும் கேட்கும் ஆவலில் மும்பைப் பத்திரிகையாளர்  ஒருவர் கடந்த வாரம் வந்திருந்தார். உள்ளே நுழையும் போதே, “ஸ்ஸ்…ப்பா! என்ன வெயில் இப்பவே இப்படி என்றால் மேயில் எப்படி இருக்குமோ?” என்ற உரக்க முணுமுணுத்துக் கொண்டார்.
கோடைச் சூட்டோடு தேர்தல் வெப்பமும் சேர்த்து கொண்டால் என்னவாகும் என்பது அவரது கவலையாக இருந்தது.
வெப்பத்தில் மெழுகு உருகும். இரும்பு இறுகும். இது இயற்கை விதி. ஆனால்  ஆவியாகும் நீரைப் போலக் கண்ணுக்குத் தெரியாமல்  போகிறவர்களைப் பற்றி பத்திரிகைகள் கண்ண்டுகொள்வதே இல்லை என்றேன்
“யார் அவர்கள்?”
“கட்சித் தொண்டர்கள்தான்” என்றேன்.
தேர்தலுக்குத் தேர்தல் சிறப்பிதழ் போடும் பத்திரிகைகள் கடந்த தேர்தல்களை அலசும் நடக்கும் தேர்தலைக் கணிக்கும். இறந்த தலைவர்களை நினைத்துக் கொள்ளும். இருக்கும் தலைவர்களை விதந்து பேசும். ஆனால் தலைவர்களைப் போல வெற்றியினால் பலனோ, தோல்வியினால் மன உரமோ பெறாமல் இரண்டு மாத காலத்தை அவர்களுக்காகச் செலவிட்ட தொண்டர்கள் முடிவுகள் அறிவிக்கப்பட்ட சிலநாள்களில் ஆவியான நீரைப் போல மறக்கப்பட்டுவிடுவார்கள்
மறக்கப்படுவது கூட மன்னிக்கப்படலாம். ஆனால் தோல்வி கண்ட கடசியின் தொண்டர்கள் அவமானத்தில் புழுங்கி, அச்சத்தில் கலங்குவதை எத்தனை பேர் எண்ணிப் பார்த்திருக்கிறோம்?
தேர்தல் வெற்றிகள் ஆனந்தக் களிப்பில் மட்டுமல்ல, அரசியல் எதிரிகளைப் பழி தீர்த்துக் கொள்ளும் தருணங்களாகவும் அமைந்து விடுவதுண்டு. எந்த நேரமும் தான் தாக்கப்படலாம் என்ற நிலையில் உள்ள தோற்ற கட்சித் தொண்டனின் மனநிலை எப்படி இருக்கும்?
“மனைவி மிகவும் கெஞ்சினாள்;எல்லாரையும் போய்ப் பார்த்துவிட்டு வரச் சொன்னாள். ”நீங்கள் ராப்பகலா ஓடியாடி உழைத்தீங்களே, அவரைப் பார்த்துச் சொல்லிட்டு வாங்க” என்று கேட்டிருந்தாள்….அவனாகப் போகவில்லை. ஆனால் அதற்குள் அவருக்கு நிச்சியம் தகவல் எட்டியிருக்கும். அவர் காரைப் போட்டுக்க் கொண்டு வந்திருக்கக் கூடும். ஆனால் வரவில்லை. தோற்றிருந்தால் என்ன, வந்திருக்கலாம். ஆனால் அந்த மனிதனும் வீட்டில் முடங்கிக் கிடந்திருப்பான். அவனும் யாரிடமும் பேசாமல், பத்திரிகைகளைப் பார்க்க மனமில்லாமல் –தைரியமில்லாமல்- ஒரு சாய்வு நாற்காலியில் விழுந்து கிடப்பான்.மனைவியை ஏறெடுத்துப் பார்க்க முடியாமல் உட்கார்ந்திருப்பான். குழந்தைகள் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தால் அதைப் பொறுக்க முடியாமல் எரிந்து விழுந்து கொண்டிருப்பான். பத்திரிகைக்காரர்கள் வந்து கேட்டால், ‘பெரிய அநீதி நடந்து விட்டது” எனக் கூறியிருக்கக் கூடும். என்ன பெரிய அநீதி நடந்து விட்டது? சில ஆயிரம் ரூபாய்கள் இந்த மூன்று நான்கு வாரங்களில் கணக்கு வழக்கில்லாமல் செலவழிந்திருக்கும். அந்தச் சில ஆயிரம் ரூபாய்களை வெற்றி பெற்றிருந்தால் பல மடங்காகப் பெருக்கித் திரும்பப் பெற்றிருக்க முடியும்.வெற்றிக்கும் தோல்விக்கும் அது ஒன்றுதான் அந்த மனிதனுக்கு வித்தியாசம் இவனைப் போல் தலையுடைவதை எதிர்பார்த்து, எலும்புகள் நொறுங்குவதை எதிர்பார்த்து, குழந்தை குட்டிகள் தாக்கப்படுவதை எதிர்பார்த்து, ஏன் உயிரே கூட இழக்க நேரிடும் என்பதை எதிர்பார்த்து இருட்டில் தன்னந்தனியாக உட்கார்ந்திருக்கப் போவதில்லை”
1971ல் எழுதப்பட்ட “காத்திருத்தல்” என்ற சிறுகதையில் அசோகமித்திரன் வர்ணிக்கும் மனநிலை இது. கதை என்றாலும் இது கற்பனை அல்ல. 1967 தேர்தலின் போது காங்கிரஸ் தொண்டர்களிடமும், 1991 தேர்தலின் போது திமுக தொண்டர்களிடமும் இந்த மனநிலை நிலவியதை நேரடியாக அறிவேன்
இந்திய ஜனநாயகத்தின் எழுதப்படாத பக்கம் தோல்விக்குப் பின் எழும் மன நிலை. அந்த வன்முறையின் ரத்தக் கறைகள். தொண்டர் குடும்பங்களின் கண்ணீர் சுவடுகள்

வரலாறு என்பதே வென்றவர்களின் கதைதானே? தொண்டர்களின் கதையா அது?  
கடைசிப் பக்கம் கல்கி 3.4.2016

Sunday, March 13, 2016

தேர்தல் 2016:: கை நழுவிய கனி

கை நழுவிய கனி

 கனிந்து விடும் என்று காத்திருந்தது கிளி. இலவம் மரத்திலிருந்த தனது பொந்திலிருந்து வெளியே வந்து அந்தக் காயைச் சுற்றிச் சுற்றிப் பறந்து  பார்த்துக் கொண்டிருந்தது.காயின் நிறம் முற்றியதும் கனிந்தே விட்டது என்று களி கொண்டு உலகிற்கு அறிவித்தது. ஆனாலும் காற்றுக்கு சந்தேகம். கனிந்து விட்டது நிச்சயம்தானா என்று கிளியைக் கேட்டது, நிச்சயம் நிச்சயம் என இறக்கைகளைக் கொட்டிக் குதூகலித்தது கிளி.

அதன் மகிழ்ச்சிக்குக் காரணம் இருந்தது. கனி கிடைத்து விட்டால் பசி நீங்கிவிடும்.அது நெடுநாளையப் பசி. கிளி மட்டுமல்ல கிளியின் குழந்தைகளும் பசித்திருக்கிறார்கள்

கனி ஒரு நாள் வெடித்தது. வெடித்தது? ஆம்! கிளி நினைத்தது போல அது உண்ணும் கனியல்ல. அதனுள்ளே இனிப்போ சாறோ கிடையாது. அதனுள் இருந்ததெல்லாம் வெறும் பஞ்சு. பின்னே,இலவ மரத்தில் பழமா பழுக்கும்?

இலவு காத்த கிளிக் கதை தமிழுக்கோ தமிழருக்கோ புதிது அல்ல. நிச்சயம் கருணாநிதிக்குப் புதிது அல்ல. 2006 சட்டமன்றத் தேர்தலில், திமுகவுடன் கூட்டணி கண்ட மதிமுக இட ஒதுக்கீட்டின் போது ஏற்பட்ட பிரச்சினையால் அதை விட்டு வெளியேறி எதிர் அணிக்குப் போனது. பழம் நழுவிப் பாலில் விழுந்த பின்பும்  அது கை தவறிக் கொட்டிவிடவும் கூடும் என்பதை அவர் அனுபவப் பூர்வமாக அறிந்தவர்தான். என்றாலும் இலவு காத்த கிளியை எண்ணிக் கொண்டுதான் வியாழன்  இரவு படுக்கைக்குப் போயிருப்பார்

நிச்சயம்  கூட்டணிக்கு வருவார் என்று நினைத்திருந்த விஜயகாந்த் தனித்துப் போட்டியிட முடிவு செய்தது 'இந்த முறை மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடுவோம்' என்ற உற்சாகத்தில் மிதந்து கொண்டிருந்த  திமுகவிற்கு ஏமாற்றமாகத்தான் இருந்திருக்கும்.  காரணங்கள் பல

1 திமுக கூட்டணியில் தேமுதிக இருந்திருந்தால்  அதிமுக ஆட்சிக்கு எதிரான வாக்குகளில் கணிசமான அளவு அந்தக் கூட்டணிக்குக் கிடைத்திருக்கும். தேமுதிகவினரின் வாக்குகள் அதிமுகவிற்கு விழப் போவதில்லை. கூட்டணி இருந்திருந்தால்  திமுக  போட்டியிடும் இடங்களில், அவை திமுகவிற்கு விழுந்திருக்கும் . இப்போது அந்த வாக்குகள் கிடைக்காது.

ஆனால், தேமுதிகவிற்கு இருக்கக் கூடிய வாக்குகள் 5 முதல் 8 சதவீதத்திற்குத்தான் இருக்கும். அதனால் எங்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுவிடாது என்று திமுகவினர் சொல்கிறார்கள். 2006 தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டது. அப்போது அது  3 தொகுதிகளில் 20% வாக்குகளையும், 8 தொகுதிகளில் 15%லிருந்து 20% சதவீத வாக்குகளையும், 33 தொகுதிகளில் 10% 15% வாக்குகளையும் பெற்றது. பலமுனைப் போட்டி உறுதியாகிவிட்ட இந்தத்  தேர்தலில் இந்த அளவு வாக்குகளை அந்தத் தொகுதிகளில் அல்லது சில தொகுதிகளில் பெற்றால் அவை வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் வல்லமை கொண்டவை

2. திமுகவிற்கு இழப்பு ஏற்படும் அதே நேரம் அதிமுகவிற்கு இழப்பு ஏதுமில்லை. மாறாக ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் பிரிவது அதற்கு சாதகமாக ஆகலாம்

3.பாமக, மக்கள் நலக் கூட்டணி, பாஜக, என அநேகமாக எல்லாக் கட்சிகளும் திமுக அதிமுக இரண்டையும் விமர்சித்து வருகின்றன. இப்போது தேமுதிகவும் அந்த வரிசையில் இணைகிறது.மற்ற கட்சியினரைப் போல் அல்லாது, தேமுதிக குறி வைப்பது, கிராமப்புற, அதிகம் படிப்பறிவில்லாத, சினிமா கவர்ச்சியில் தன்னை இழந்த, வாக்காளர்களை.அதனால் திமுக மீதான விமர்சனங்கள்  வேறு ஒரு தளத்திற்கும் செல்கின்றன. திமுக இந்த விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். வெறுமனே அதிமுகவை விமர்சித்து மாத்திரம் அதன் பிரசாரத்தைத் தொடர முடியாது.

4. அதிமுகவிற்கு எதிரான வலுவான கூட்டணி என்று திமுக கூட்டணிக்கு ஏற்பட்டிருந்த பிம்பம் கலைவது

5. அதன் வெற்றி வாய்ப்பு, கடந்த கால அனுபவங்கள், கணக்குகளின் அடிப்படையில் கேள்விக்குரியதாகிறது. விஜயகாந்த்தின் கட்சி கூட்டணிக்கு வரவில்லை என்பதால்  , திமுக  கிட்டத்தட்ட 2001 தேர்தலில் இருந்த  நிலைக்குத்  திரும்பி வந்துவிட்டது. அப்போது அதனுடன் பாஜகவைத் தவிர வேறு எந்தப் பெரிய கட்சியும் கூட்டணியில் இல்லை. பாஜகவைத் தவிர சில ஜாதிக் கட்சிகள் மட்டுமே அப்போது அதனுடன் இருந்தன. இப்போது பாஜகவிற்கு பதில் காங்கிரஸ் இருக்கிறது.  தமிழகத்தில்  காங்கிரஸ் பாஜக கட்சிகளிடையே உள்ள வாக்கு வித்தியாசம்  2முதல் 3 சதவீதம் இருக்கும். 2014 தேர்தலுக்குப் பின் காங்கிரசில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக அநேகமாக இரண்டு கட்சிகளின் வாக்கு பலமும் சமமாக மாறியிருக்கலாம். அதனால் 2001 தேர்தலில் இருந்த  நிலைக்குத் திமுக கூட்டணி திரும்பியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அந்தத்  தேர்தலில்  183 இடங்களில் போட்டியிட்டு 31 இடங்களில் வென்றது திமுக

விஜயகாந்த்தின் முடிவு வேறு சில கட்சிகளையும்  சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறது. வியாழன்று நடந்த பொதுக்கூட்டத்தில், தெளிவாகச் சொல்கிறேன்,  தனித்துப் போட்டியிடுவேன் என மூன்று முறை சொன்ன பின், அவரது அனுமதி பெற்று  பேசிய,  அவர் மனைவி பிரேமலதா, எங்கள் தலைமையை ஏற்பவர்கள், எங்களுடன் ஒத்த கருத்து உள்ளவர்கள் எங்களுடன் கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்த வரலாம் என்று அறிவித்தார். இது விஜயகாந்த்தை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பதில் எங்களுக்குப் பிரசினை ஏதுமில்லை என்று அறிவித்த மக்கள் நலக் கூட்டணியை இப்போது என்ன செய்வது என்ற திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவோடு இருந்த கட்சிகள் எல்லாமும் அதை விட்டு விலகி விட்டன. பாஜக தனியாகவோ, அல்லது சிறுகட்சிகளுடன் இணைந்து இந்தத் தேர்தலை சந்திக்க வேண்டும். அதாவது பாஜக 15 ஆண்டுகளுக்குப் பின்- 2001க்கு முன்பு இருந்த நிலைக்கு- தள்ளப்பட்டுவிட்டது.

என் வழி தனி வழி என்பது ரஜனிகாந்த்தின் திரைப்பட வசனமாக இருக்கலாம். ஆனால் இப்போது அது விஜயகாந்த்தின் தேர்தல் முழக்கம்!

தமிழ் முரசு (சிங்கப்பூர்) 13.3.2016

Saturday, March 05, 2016

அனுபவம் அது முக்கியம்

புத்தரின் உரையைக் கேட்பதற்காக மக்கள் கூடியிருந்தனர். புத்தர் வந்தார். மேடையில் அமர்ந்து கொண்டார். அங்கே இருந்த ஒரு தாமரைப் பூவைக் கையில் எடுத்துப் பார்த்தார். பக்கத்தில் இருந்த சீடர் காசியபனைப் பார்த்துச் புன்னகைத்தார். கூட்டத்தைப் பார்த்து முறுவலித்தார். பூவைக் கீழே வைத்துவிட்டு எழுந்திருந்து போய்விட்டார். அவ்வளவுதான் உரை முடிந்துவிட்டது.

ஒருவார்த்தைகூடப் பேசாமல் எப்படி உரை நிகழ்த்தப்பட்டதாகச் சொல்ல முடியும்? வார்த்தைகள் தத்துவங்களைச் சொல்லலாம். ஆனால், உண்மைகளை விளக்காது. புத்தகங்கள், பாராயணங்கள், உபதேசங்கள் இவற்றின் மூலம் உண்மையைப் புரிந்து கொள்ள முடியாது. உண்மை என்பது மழையைப் போல எளிமையானது. மழையைப் பார்க்கலாம். கேட்கலாம். உணரலாம். ஆனால் அதைக் குறித்து எத்தனை கவிதைகள் எழுதினாலும் மழையின் ஈரத்தை விரல்களில் உணர முடியாது

அனுபவம் அது முக்கியம்

உளியை மரத்தின் மீது வைத்து சுத்தியலால் மெதுவாகத் தட்டினால் உளி நழுவி விழுகிறது. வேகமாக ஓங்கித் தட்டினால் உளி மரத்தில் சிக்கிக் கொள்கிறது. எவ்வளவு மெதுவாக அல்லது வேகமாகத் தட்ட வேண்டும் என்பதை புத்தகம் படித்துத் தெரிந்து கொள்ள முடியாது. தானாக வேலை செய்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்.

அனுபவம் அது முக்கியம்

ரோஜப்பூவைப் போன்ற வண்ணம், மென்மை ஏன் அதன் மணம் கூட கொண்ட பூவைத்  தொழில்நுட்பம் கொண்டு, இயந்திரத்தில் தயாரித்து விட முடியும். ஆனால் அந்தப் பூவின் உயிர்ப்பை இயந்திரங்களால் தர முடியுமா?
அனுபவம் அது முக்கியம்

வாழ்க்கைக்கு மட்டுமல்ல, இலக்கியத்திற்கும் அனுபவம் முக்கியம். வாழ்ந்து பெறாத அனுபவத்தை வார்த்தைக் குவியல்களால் விவரிக்கும் இலக்கியங்கள் இயந்திரங்கள் செய்த ரோஜாப்பூவைப் போல உயிர்ப்பின்றி இருக்கின்றன.

எழுத்துக்கு அனுபவம் அவசியம் என்றால், நான் சரித்திரக் கதைகள் எழுதுவது எப்படி?கொலையைப் பற்றி நான் கதை எழுதுவதற்குக் கொலை செய்திருக்க வேண்டுமா? வேண்டாம், ஆனால் அதை எழுதும் நேரம் நீங்கள் கொலைகாரனாக மாறியிருக்க வேண்டும். ராஜராஜனாக மாறத எவராலும் பெருங்கோயில் கட்ட முடியாது, கற்களினால் அல்ல, சொற்களைக் கொண்டு கூட.

அப்படிக் கூடுவிட்டுக் கூடு பாய புத்தகங்கள் உதவும்.அவ்வளவுதான். ஆனால் புத்தகங்கள் மட்டும் போதாது.கருவாடு என்றாலும் கல்கண்டு என்றாலும் அது அப்படியே ரத்தத்திற்குச் செல்வதில்லை.படித்தது அனுபவமாகச் சேமிக்கப்படாவிட்டால் அதனால் பயனில்லை. படைப்பாளிக்கும் பண்டிதனுக்கும் உள்ள வித்தியாசமே இதுதான்.

வாசிப்பும் ஓர் அனுபவம்தானே? ஆம். ஆனால் வாழ்க்கை வாசிப்பிற்கு அப்பாலும் விரிந்து கிடக்கிறது, உமா ஷக்தியின் ஒரு கவிதை சொல்வது போல
கவிதை எழுத அமர்ந்தேன்
ஜன்னலருகே ஓடி மறைந்தது
அணில் ஒன்று
கணினியை மூடிவிட்டேன்

 கல்கி 13.3.2016