இன்று காலை இணைய இந்துவில் படித்த ஒரு செய்தி பெருமிதத்தையும், மனதில் ஒருவித நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. அந்தச் செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்:
மகேஷ் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன். தந்தை ஒரு நிறுவனத்தில் கடைநிலை ஊழியராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். மகேஷ்தான் குடும்பத்தில் முதன் முறையாக முதுநிலை வரை படித்திருக்கிறார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நான்குநேரிக்கு அருகில் உள்ள 'அருள்மிகு பன்னிருபிடி அய்யன் கலை அறிவியல் கல்லூரியில் ( இந்தக் கல்லூரியின் பெயரை இப்போதுதான் நான் முதன் முறையாகக் கேள்விப்படுகிறேன்) முதுநிலை மாணவர் மகேஷ்.
அவர் மைக்ரோசாஃப்ட் அடுத்துக் கொண்டுவரவிருக்கும் இயக்கு தளத்திற்கான தொழில்நுட்பத்தை வடிவமைத்திருக்கிறார்.(next generation operating system) BETA2 iBRO.net என்ற இந்த நுட்பம் நான்குமாத காலத்திற்குள், கல்லூரிப்படிப்பின் ஒரு புரஜக்ட் ஆக வடிவமைக்கப்பட்ட ஒன்று.
திறமைகள் எந்தெந்த மூலைகளில் எல்லாம் ஒளிந்து கிடக்கிறது பார்த்தீர்களா?
'உள்குத்து''சொந்த செலவில் சூனியம் வைச்சுக்கிறது''போலிப் பின்னூட்டம்' போன்றவற்றை சில நொடிகள் ஒதுக்கி வைத்துவிட்டு, மகேஷ்க்கு ஒரு 'ஓ!' போடக்கூடாதா? வலைவாசிகள் என்ற முறையில் அது நம் கடமை இல்லையா?
மகேஷோடு, ஏழ்மை நிலையில் இருந்தாலும், மகனது திறமைகளை குடும்பத்திற்காக முடக்கிவிடாமல் உற்சாகப்படுத்திய அவரது தந்தைக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள்.
மகேஷுடைய மின்னஞ்சல்: maheshbeta2@gmail.com
விவரங்களுக்கு: http://www.hindu.com/2006/07/14/stories/2006071416510100.htm
3 days ago
16 comments:
மகிழ்ச்சியான விசயம். மகேஷ்ற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவர் பெற்றோர்க்கு எனது வணக்கங்கள்
கல்வி மட்டுமே ஒளிதரும் என்ற உண்மை உணர்ந்து அடுத்த தலைமுறையை கல்வி கற்க தியாகங்கள் செய்த பெற்றோருக்கு வாழ்த்துக்கள்.
பெற்றோரின் சிரமங்கள், தியாகங்களைத் தன் முயற்சி, உழைப்பால் அங்கீகாரம் பெற்றுப் பெருமை சேர்த்த மகேஷுக்கு ஊக்கமான "ஓ' போட்டாச்சு! :-)))
நிச்சயமாக
மேலும் வளர வாழ்த்துக்கள்
WoW .... வாழ்த்துகள்.
மகேஷுக்கு எனது வாழ்த்துக்கள். மேன் மேலும் பல நல்ல சாதனைகளை செய்யவும் வாழ்த்துக்கள்.
Congratulations to Mahesh. I feel proud about the achievement of an Indian. We can expect more from him and similar talents which will come to the limelight soon.
தந்தை மகற் காற்றும் உதவி அவயத்து
முந்தி இருக்கச் செயல்
மகன் தந்தைக் காற்றும் நன்றி இவன் தந்தை
என்னோற்றான் கொல் எனும் சொல்
வாழ்த்துக்கள்
யோகன் பாரிஸ்
மகிழ்ச்சியான விசயம். மகேஷ்ற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவர் பெற்றோர்க்கு எனது வணக்கங்கள் - Ram Prasath
//'உள்குத்து''சொந்த செலவில் சூனியம் வைச்சுக்கிறது''போலிப் பின்னூட்டம்' போன்றவற்றை சில நொடிகள் ஒதுக்கி வைத்துவிட்டு,//
சிரித்து சிரித்து புண்ணானது வயிறு...!!
மகேஷுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!! நிஜமாகவே பெருமையாக இருக்கிறது.
பெருமைபடவேண்டிய செய்தி. மகேஷ்க்கு என்னுடைய பலமான "ஓ".
Here are some latest links to sites where I found some information: http://google-index.info/2708.html or http://google-machine.info/207.html
மேலும் வளர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் மகேஷ்!
அவரது பெற்றோரிடம் தலை வணங்குகிறேன்!
செய்தி அறியத் தந்தமைக்கு நன்றி.
மகேஷுக்கும் அவரின் பெற்றோருக்கும் எனது வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
மகேஷ் சாதனை மாணவர் தான் கண்டிப்பாக இவர்களைப்போன்றோர் தான் இந்தியாவின் வளமான எதிர்காலத்திற்கு தேவை. . உள்ளூர் குழாயடி சண்டைகளுக்கிடையே இதனைப்படிக்க வாய்ப்பளித்து,செய்தியை வலையில் போட்டு அனைவருக்கும் கொண்டு சேர்த்த நீங்களும் பாராட்டுக்குறிய்வரே! எனவே இரண்டு ஓ போடுகிறேன்!
Hats off Mahesh.. Good Job
Post a Comment