- வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும், எழுத வேண்டும் என்ன நினைப்பவரா?
- 'நல்லாவே எழுதுகிறேன்' என்பதுதான் உங்களைப் பற்றிய உங்கள் கணிப்பா?
- இளைய தலைமுறையின் முழு ஆற்றலும் இன்னும் வெளிக் கொண்டுவரப்படவில்லை, அதை வெளிக் கொண்டுவர என்னால் ஆனதைச் செய்ய வேண்டும் என்ற தவிப்பு உங்களிடம் இருக்கிறதா?
- சமூகப் பொறுப்புடன் புதிய முயற்சிகளை செய்து பார்க்கும் ஒரு குழுவுடன் இணைந்து செயல்பட ஆர்வமுண்டா?
தமிழில் புதிதாகத் துவங்கப்பட உள்ள ஒரு வார இதழில் சென்னையில் இருந்து முழுநேரப் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம் உங்களைப் பற்றிய விவரங்களையும் உங்கள் படைப்புகளில் மிகச் சிறந்தது என நீங்கள் கருதும் ஒன்றையும் எனக்கு மின் அஞ்சல் ( maalan@gmail.com ) செய்யுங்கள்.
இதழியலில் ஆர்வம் உண்டு . ஆனால் அதை என்னால் முழு நேரப் பணியாக எடுத்துக் கொள்ள முடியாது. அதற்காக சென்னைக்குப் பெயர்ந்து வர முடியாது. என் குடும்பச்/பணிச் சூழல் அப்படி. இருந்த இடத்திலிருந்தே ஏதாவது செய்ய முடியும் என்றால் சொல்லுங்கள் என்ற நிலையில் இருப்பவர்களும் தொடர்பு கொள்ளலாம். ஆனால் என்ன செய்ய முடியும் என்பதைத் தெளிவாகத் தெரிவியுங்கள்.
இளைஞர்களுக்கு முன்னுரிமை.
No comments:
Post a Comment
Comments irrelevant to the posts will not be published. Admins decision is final . இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்களையோ, எந்த ஒரு நபரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வன்முறையையோ, விளம்பரங்களையோ பின்னூட்டத்தில் அனுமதிப்பதற்கில்லை. பொருத்தமற்றது எனக் கருதப்படும் சொற்கள்/வரிகள் நீக்கப்படும்.நீக்கப்பட்ட விவரம் பின்னூட்டத்தில் குறிப்பிடப்படும்